எதிர்நீச்சல்: அண்ணே உன்னை தான் குணசேகரனை அவமானப்படுத்திய சக்தி.. கதறி அழும் ஞானம்..அடுத்தது இதுதானா?
எதிர்நீச்சல் சீரியலின் ப்ரோமோவில் குணசேகரனை சக்தி அவமானப்படுத்தி இருக்கிறார்.
சென்னை: சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இன்றைய பிரமோ வெளியாகி இருக்கிறது.
குணசேகரன், ஞானத்தை திட்டியதால் அவர் தன்னுடைய மனைவியிடம் கதறி அழுகிறார்.
சாவதற்கு கூட எனக்கு தைரியம் இல்லை என்று கூறி ஞானம் கதறி அழுகிறார்.
என்னோடு உட்கார்ந்து சாப்பிடுவதற்கு இவர்களுக்கு அருகதை இல்லை என்று சொல்லி அவமானம் செய்த குணசேகரனை சக்தி கடைசியில் ஒரே வார்த்தையால் மொக்கை பண்ணி இருக்கிறார்.

திரும்பிய வார்த்தை அம்பு
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் பல விறுவிறுப்பான திருப்புங்கள் தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரைக்கும் குணசேகரின் பேச்சை கேட்டு ஆடி வந்த தம்பிகள் தற்போது தங்களுக்கு எதிராக குணசேகரன் வார்த்தை அம்பு திரும்புவதை பார்த்து தாங்கிக் கொள்ள முடியாமல் வலியால் துடிக்கின்றனர். ஆரம்பத்தில் சக்தி குணசேகரனை விட்டு பிரிய நினைத்த நிலையில் இப்போது ஞானமும் அதே முடிவை எடுத்திருக்கிறார்.

கதறி அழுத ஞானம்
ஆதிரையின் திருமண விஷயத்தில் ஞானம் குணசேகரனின் பேச்சுக்கு எதிர் பேச்சு பேசியதால் உனக்கெல்லாம் பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது. நீ சாப்பிடுவது என்னுடைய காசில் உனக்கு எல்லாமே நான்தான் செலவு செய்கிறேன் என்று அவமானப்படுத்த, ஞானம் கதவை பூட்டிக்கொண்டு ரூம்பிற்க்குள்ளே உட்கார்ந்து அழுது கொண்டு இருந்தார். இன்று அழுது கொண்டிருக்கும் ஞானத்திற்கு மொத்த குடும்பமும் ஆறுதல் கூறுகின்றனர். வெளியே நின்று கொண்டு செய்வதறியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஞானத்திற்கு அறிவுரை
எனக்கு சாவதற்கு கூட தைரியம் இல்லையே டா சக்தி என்று ஞானம் கதறி அழ,உங்க அண்ணன் சொல்றது மீறி நம்மால வாழ முடியாதா? என்று ஞானத்திடம் ரேணுகா கேட்கிறார். பொம்பள பேச்சை கேட்டா அழிஞ்சி போயிருவேன்னு சொல்லுவாங்க நம்பாத என்று ஞானத்திற்கு சக்தி அறிவுரை கொடுக்கிறார். மொத்த குடும்பமும் ஞானத்தின் பக்கத்தில் அழுது கொண்டு இருக்க ஒரு வழியாக ஞானத்தை சமாதானம் செய்து சாப்பிடுவதற்கு கீழே கூட்டி வருகின்றனர்.

அவமானப்படுத்திய சக்தி
ஞானம் டைனிங் டேபிளில் உட்கார்ந்ததும் குணசேகரன் எழுந்து விடுகிறார். அதற்கு அவருடைய அம்மா நீ ஏம்பா எழுந்து போகிறாய் என்று கேட்க, என் கூட சாப்பிடறதுக்கு அருகதை யாருக்கும் கிடையாது என்று சொல்லி கதிரை நீ வாப்பா என்கூட என்று சொல்ல, பின்னாடி இருந்தபடி சக்தி அண்ணே என்று சொல்ல, என்னப்பா என்று குணசேகரன் திரும்பி கேட்க, ஞானம் அண்ணே என்று சக்தி சொல்ல, ஞானம் மற்றும் குணசேகரன் அதிர்ச்சி அடைந்து பார்க்கின்றனர். இத்துடன் இன்றைய பிரமோ முடிவடைந்து இருக்கிறது.

கதிருக்கு எப்போது
ஏற்கனவே குணசேகரனை எதிர்த்து பெண்களுக்கு சப்போர்ட் செய்யும் சக்தியுடன் இனி ஞானம் சேர்வாரா இல்லை, குணசேகரன் மீண்டும் ஞானத்திடம் அழுகை சென்டிமென்ட் சீன் போட்டு நடித்து ஏமாற்றியதும், மீண்டும் எனக்கு என்ன முடிவு எடுக்கணும் என்று தெரியல என அண்ணன் பேச்சையே கேட்கப் போகிறாரா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்க, குணசேகரன் இதே அவமானத்தை கதிருக்கும் கொடுக்க வேண்டும். அப்போதுதான் கதிருக்கு இந்த வலி புரியும். கதிர், நந்தினியை திட்டும்போதும் எதுவும் கேட்கவில்லை. ஞானத்தை திட்டும் போதும் எதுவும் கேட்காமல குனசேகரனுக்கு சப்போர்ட் செய்து கொண்டிருக்கும் கதிருக்கு எப்போது திட்டு கிடைக்கப் போகிறது என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
-
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications