இது தப்பான உதாரணம்.. மன அழுத்தம்.. எதிர்நீச்சல் சீரியலுக்கு குவியும் எதிர்ப்புகள்.. மீண்டும் மாறிய கதை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் மார்ச் 26 ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில் இதை பார்த்ததும் ரசிகர்கள் கருத்துக்களை குவித்து வருகிறார்கள். அதிலும் அதிகமான ரசிகர்கள் தர்ஷன் தன்னுடைய தந்தைக்கு ஆதரவாக பேசியதை ஏற்றுக் கொள்ளாமல் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.

அதே நேரத்தில் எதிர்நீச்சல் சீரியல் பெண்களுக்கான முன்னேற்றமான சீரியல் கிடையாது... இது மேலும் பெண்களை அடிமைப்படுத்துவது போன்று கதை போய்க்கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் குழந்தை திருமணம், பெண் அடிமைத்தனம் தான் அதிகமாக இருக்கிறது என்று ரசிகர்கள் காட்டமாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Ethirneechal Serial 26th march 2024 promo and episode full update

பொதுவாக சீரியல்களில் இப்போது ஒரு டிரண்ட் உருவாகி இருக்கிறது. அதாவது பையனுக்கோ பொண்ணுக்கோ விருப்பம் இருக்கிறதோ இல்லையோ பெற்றோர் வற்புறுத்தி அவர்களை ஏதோ ஒரு சூழ்நிலையில் திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். பிறகு கதாநாயகி மற்றும் கதாநாயகனுக்கு இடையே காதல் உருவாகி அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை தொடங்குகிறார்கள். இது சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என்று எல்லா சேனல்களிலும் இருக்கும் சீரியல்களில் மைய புள்ளியாக இருக்கிறது.

எந்த சீரியலை எடுத்தாலும் கதை இப்படித்தான் இருக்கிறது. அதே நேரத்தில் கதாநாயகனுக்கு ஒரு அத்தை பொண்ணு அல்லது முன்னாள் காதலியோ இருக்கும் அவர்கள் கதாநாயகனும் கதாநாயகியும் சேரக்கூடாது என்று பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் இப்போது உள்ள பல சீரியல்களின் கதையாக இருக்கிறது. அதே நேரத்தில் இந்த சீரியல் கதைக்கு மாற்றாக எதிர்நீச்சல் சீரியல் ஆரம்பத்தில் கதை பயணித்த நிலையில் இப்போது இந்த சீரியலும் மற்ற சீரியல்களைப் போலவே கதையை அரச்ச மாவையே அரைக்க தொடங்கி இருக்கிறார்கள்.

Ethirneechal Serial 26th march 2024 promo and episode full update

அதிலும் பெண்கள் முன்னேற்றத்தை மையப்படுத்தி இந்த சீரியல் இருக்கும் என்று நினைத்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தான் கிடைக்கிறது. ஒவ்வொரு முறையும் இந்த சீரியலில் கதாநாயகி தோற்றுப் போய்க் கொண்டிருக்கிறார். வில்லன் தான் ஜெயித்துக் கொண்டிருக்கிறார். இதனால் இதே வில்லத்தனத்தோடு ஊருக்குள் இருக்கும் பல வில்லன்கள் நாங்கள் சொல்வதுதான் சரி என்று இந்த சீரியலை குறிப்பிட்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொதுவாக பெண்கள் வீட்டிற்குள் அடிமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் பல பெண்கள் மனதிற்குள்ளும் இருக்கிறது. ஆண்கள் மனதிற்குள்ளும் இருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் இந்த சீரியலில் இந்த பெண்கள் அடிக்கடி தோற்றுக் கொண்டிருப்பதை பார்க்கும்போது இதையே குறிப்பிட்டு வருகிறார்கள்.. என்பதாக இந்த சீரியலின் ப்ரோமோவற்கு ரசிகர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் இந்த சீரியலுக்கு அதிகமான பாசிட்டிவ் கருத்துக்கள் இருக்கும். ஆனால் இப்போது இந்த சீரியலுக்கு அதிகமான நெகட்டிவ் கருத்து தான் இருக்கிறது. அதிலும் இந்த சீரியல் பார்த்தால் மனக்குழப்பமும், மன அழுத்தமும் ஏற்படுகிறது என்று பலர் கருத்து கூறி வருகிறார்கள். அதே நேரத்தில் இந்த சீரியலில் தொடங்கப்படும் பிரச்சனைகள் எல்லாமே இடியாப்ப சிக்கல் ஆக தான் மாறிக்கொண்டே இருக்கிறதே தவிர ஒரு பிரச்சனைக்கு கூட முடிவே இதுவரைக்கும் வந்ததில்லை.

Ethirneechal Serial 26th march 2024 promo and episode full update

ஆரம்பத்தில் தர்ஷன் தன்னுடைய அப்பா பேச்சைக் கேட்டு ஆண் ஆதிக்கத்தில் ஆடிக்கொண்டிருந்தார். பிறகு ஈஸ்வரி போட்ட ஒரே ஒரு "அடி"யால் மனம் மாறி அம்மா சொல்வது தான் சரி என்று சொல்லிக் கொண்டிருந்தார். இப்போது தன்னுடைய அப்பா பக்கம் மீண்டும் சாய்ந்து இருக்கிறார். இதனால் ரசிகர்கள் இந்த சீரியலுக்கு சீக்கிரமாக எண்ட் போடுங்கள் என்று காட்டமாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதனால் இயக்குனர் சீக்கிரமாக கதையை மாற்றினால் நல்லா இருக்கும் என்று இந்த சீரியலின் தீவிரமான ரசிகர்கள் பீல் பண்ணி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+