அடப்பாவி! குணசேகரன் தர்ஷினியை கடத்தியது இதற்காகத்தானா? உடைபட்ட உண்மை.. இப்படியும் ஒரு அப்பாவா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் பிப்ரவரி 28ஆம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. இத்தனை நாட்களாக குணசேகரன் தான் தர்ஷினியை கடத்தி இருப்பாராக இருக்கும் என்று சந்தேகப்பட்டு கொண்டு இருந்த ரசிகர்களுக்கு இன்று ஆமாங்க நீங்க நினைத்தது தான் உண்மை என்று குணசேகரனே வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார்.
அதே நேரத்தில் பெத்த பொண்ணை எப்படி அப்பாவே கடத்தி ரவுடிகளை வைத்து அடச்சி வைப்பாரு என்று நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இன்றைய ப்ரோமோ பெரிய அளவில் அதிர்ச்சியை கொடுத்திருக்கும். சரி இனி என்ன நடக்கப் போகிறது என்பதை பார்ப்போம்.

அந்த வகையில் டாப் சீரியலாக அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களோடு வந்து கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியலில் இப்போ ஒரு மாதங்களாகவே தர்ஷினியின் கடத்தல் சீன் தான் வந்து கொண்டே இருக்கிறது. ஒரு பக்கம் தர்ஷினியின் கடத்தல் காட்சிகளும் இன்னொரு பக்கம் வீட்டுக்குள்ளேயே அண்ணன் தம்பி பிரச்சனைகளும் வெடித்துக் கொண்டிருப்பதும் தான் காட்டப்பட்டு கொண்டிருக்கிறது. எப்ப தான் இந்த தர்ஷினியை காப்பாற்றுவார் என்பதுதான் பலருடைய எதிர்பார்ப்பு.
காரணம் ஒரு மாதத்திற்கு மேலாக தர்ஷினி காணாமல் போன காட்சிகள் தான் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இப்போது புதியதாக கொற்றவை என்ற ஐபிஎஸ் அதிகாரி அறிமுகமாகி இருக்கும் நிலையில் அவர் மூன்று நாட்களுக்குள் தர்ஷினியை கண்டுபிடிக்கணும் இல்லையென்றால் அவர் உயிரோடே இல்லை என்று தான் அர்த்தம் என்று சொல்லி இருக்கிறார்.
இப்படியான நிலையில் தான் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே குணசேகரன் தான் தர்ஷினியை கடத்தி வைத்திருக்கிறார் என்ற உண்மை இன்று வெளியான ப்ரோமோவில் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே அனைவர் முன்பும் வீட்டிலிருந்து ஜான்சி ராணியை அடித்து விரட்டிய குணசேகரன் இன்றைய ப்ரோமோவில் கரிகாலனோடு ஜான்சி ராணியும் வர வைத்திருக்கிறார். அப்போது நான் உங்களை வர சொன்னா என்ன எதுன்னு கேட்காம வந்து நிக்கணும் அவ்வளவுதான்.
உங்களுக்கு செய்ய வேண்டியதை நான் சரியா செய்வேன் என்று வாக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து மறுபக்கத்தில் வீட்டிற்குள் நந்தினி பணம் என்று வந்துவிட்டால் உறவுகளுக்குள் விரிசல் வந்துவிடும் என்று சொல்லி நேற்று ஞானத்திடம் பணத்தை வாங்க மறுத்ததால் இன்று ஞானம் கண்கலங்கி கொண்டிருக்க எல்லோரும் ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அப்போது கதிர் தன்னுடைய அண்ணன் ஞானத்திற்காக நந்தினியை எதிர்த்து பேசுகிறார்.
இப்படியாக இருக்கும் நிலையில் இன்னொரு பக்கத்தில் குணசேகரன் தர்ஷினியை கடத்தி வைத்திருக்கும் ரவுடிக்கு போன் போட்டு நான் வரவரைக்கும் என் பொண்ணை பத்திரமா வச்சு பாத்துக்கோங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள், அடப்பாவி பெத்த அப்பாவே பிள்ளையை இப்படி ஆள் வச்சு கடத்தி போதை ஊசி போட வச்சு கொடுமை படுத்துவானா? என்று கமெண்ட்களில் கொந்தளிப்பதை பார்க்க முடிகிறது.
ஆரம்பத்தில் இருந்து ஆதி குணசேகரன் எதிர்நீச்சல் சீரியலில் வில்லனாக இருந்தாலும் அவரே கதாநாயகன் ரேஞ்சில் காட்டப்பட்டு கொண்டு இருந்தது. இப்போது தான் அவர்தான் உண்மையான வில்லன் என்பது அனைவருக்கும் புரிகிறது. அதனாலயே குணசேகரனை கமெண்டில் எல்லோரும் கழுவி ஊத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அது இருக்கட்டும், இப்போ குணசேகரன் செய்கிற வேலையை பார்த்தால் தர்ஷினியை கடத்தி வைத்திருக்கும் இடத்தில் வைத்தே கரிகாலனை வைத்து தாலி கட்ட வைத்து கொஞ்சம் பணத்தையும் கொடுத்து எங்கேயாவது போங்க என்று சொல்லிவிடுவாரோ என்று தான் தோணுகிறது.
இல்லை என்றால் தானே தன்னுடைய மகளை கண்டுபிடித்து கூட்டிட்டு வந்தது போல நீதிமன்றத்தில் தர்ஷினியை கூட்டிட்டு போய் தன்னுடைய மகளுக்கு போதை ஊசி போட்டு கொடுமைப்படுத்தியது ஜீவானந்தம் தான் அதற்கு உடந்தை என்னுடைய மனைவியும் என்று நாடகம் ஆடுவதற்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது.
காரணம் ஜீவானந்தம் ஜெயிலிலிருந்து தப்பித்து விட்டார் என்று தெரிந்த பிறகுதான் வேக வேகமாக குணசேகரன் தர்ஷினியை தேடி போகிறார். இதனால் இனி அடுத்து இதுதான் நடக்கப் போகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இப்படியே நடந்தால் ரசிகர்களுக்கு இது பெருத்த ஏமாற்றமாக இருக்கும். இதுவரைக்கும் ஒருமுறை கூட தப்பு செய்த குணசேகரனுக்கு தண்டனை கிடைக்கவில்லை. இந்த முறையாவது குணசேகரன் மாட்ட வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. ஆனால் என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications