தர்ஷினியிடம் உண்மையை உளறிய குணசேகரன்.. புது ரவுடி வைத்து ஆப்பு.. இயக்குனர் இதை கவனிக்கலாம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் பிப்ரவரி 29ஆம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தர்ஷினியை கடத்தி வைத்திருப்பது குணசேகரன் தான் என்ற உண்மையை குணசேகரனே போன் மூலமாக தர்ஷினி இடம் உளறி இருக்கிறார்.
அதே நேரத்தில் இனி தர்ஷினி எப்படி அங்கிருந்து தப்பிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. ஆனாலும் குணசேகரனுக்கு இனி தண்டனை கிடைக்குமா? இல்லையா? என்பதும் பலருடைய கேள்வியாக இருக்கிறது. இந்த நிலையில் இது பற்றி விரிவாக பார்க்கலாம்.

எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களுக்கு இது சோதனையான காலம் என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் கடந்த வாரத்தில் டிஆர்பியில் முன்னேறி இருந்த எதிர்நீச்சல் இப்போது மீண்டும் ஐந்தாவது இடத்திற்கு வந்திருக்கிறது. அதற்கு காரணம் தர்ஷினியின் கடத்தல் நாடகம் பல மாதங்களாக இழுத்துக் கொண்டு இருப்பது தான். அதே நேரத்தில் இதுவரைக்கும் தர்ஷனியை கடத்தியது யார் என்றே தெரியாமல் இருந்த நிலையில் இப்போது அது குணசேகரன் தான் என்று உண்மை உடைபட்டு இருக்கிறது.
அதுவும் நேற்று குணசேகரன் தர்ஷினியை கடத்தி வைத்திருக்கும் ரவுடி பணம் கேட்டபோது கொடுக்காததால் அந்த ரவுடி தன்னுடைய கோபத்தை தர்ஷினியிடம் காட்டிவிட்டு அங்கேயே ஃபோனை போட்டுவிட்டு போயிருந்தார். இப்படியான நிலையில் இன்று அந்த போனுக்கு குணசேகரன் போன் பண்ணி இருக்கிறார். அப்போது தர்ஷினி அங்கேயே இருக்கட்டும் கரிகாலனோடு கல்யாணத்துக்கு எல்லா ஏற்பாடுகளும் பண்ணி இருக்கிறேன் என்று குணசேகரன் சொல்ல தர்ஷினி இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருப்பதாக ப்ரோமோவில் காட்டப்படுகிறது.
ஆனால் நிஜத்தில் தர்ஷினி சுயநினைவில் தான் இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறாரா? அல்லது போதை மருந்து கலந்து கொடுத்ததால் மயக்கத்தில் இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறாரா? என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. இதற்கான விடை இன்றைய எபிசோடில் தான் தெரிய வரும். ஏற்கனவே குணசேகரன் எவ்வளவோ தப்பு செய்தாலும் அதில் மாட்டாமல் தப்பித்துக் கொண்டே இருக்கிறார்.

ஆனால் இந்த முறை தன்னுடைய சொந்த மகளையே கடத்தி வைத்து அவளுக்கு போதை மருந்து கொடுத்து தன்னுடைய மனைவிக்கு எதிராக பேச வைத்திருக்கிறார். இதனால் இந்த முறையாவது குணசேகரனுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஏற்கனவே குணசேகரன் வில்லன் தான் அவர் மனிதாபிமானம் இல்லாதவர் என்பதை எல்லாம் பல இடங்களில் இயக்குனர் காட்டியாச்சு. ஆனாலும் இந்த இடத்திலும் இப்போதும் அதுபோல குணசேகரன் தப்பிப்பது போல காட்டினால் இன்னும் ரசிகர்களை கடுப்பாக்கத்தான் செய்யும்.
தர்ஷினி காணாமல் போனதற்கும் ஜீவானந்தத்திற்கும் தான் அதிக தொடர்பு இருப்பது போன்று கதையை கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள். இப்போது ஜீவானந்தம் போலீஸிடம் இருந்து தப்பித்து இருப்பதால் ஜீவானந்தம் தான் தர்ஷினியை கடத்தினார் என்று குணசேகரன் தப்பித்தால் கதை மேலும் சொதப்பல் ஆகிவிடும். இப்படியும் இந்த கடத்தல் கதை முடிவதற்கு இன்னும் ஒரு சில நாட்கள் ஆகும் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது.
தர்ஷினிக்கும் கரிகாலனுக்கும் திருமணம் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் திருமணத்தில் கடைசி தருணத்தில் தான் தர்ஷினி பற்றிய உண்மைகள் வெளியே தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்னும் எத்தனை நாட்களுக்கு இதே கதையை உருட்ட போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

அதுபோல குணசேகரன் தன்னுடைய குடும்பத்தை மட்டுமல்லாமல் ஊரையும் ஏமாற்றுபவர் என்பதை ஏற்கனவே பலமுறை பார்த்திருக்கிறோம். கிள்ளிவளவன் ஜீவானந்தத்தின் மனைவியை கொலை செய்த போது கூட அதற்கான பணத்தை கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார். இப்போது தன்னுடைய மகளை கடத்தி வைத்திருக்கும் ரவுடிக்கும் குணசேகரன் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி இருக்கும் நிலையில் ஒருவேளை அந்த ரவுடியால் தர்ஷினி தப்பிப்பதற்கு வாய்ப்பு இருப்பது போன்று கதையை கொண்டு போனால் மேலும் சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications