எதிர்நீச்சல்: கரிகாலனால் குணசேகரனுக்கு தெரியவரும் உண்மைகள்.. அடுத்து நடக்கப்போவது இதுதான்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரையின் காதல் விஷயத்தை கரிகாலன் வீட்டில் போட்டு கொடுத்து உள்ளார்.
ஆதிரையைப் பற்றிய வீடியோவை பார்த்ததும் குணசேகரன் அதிர்ச்சியாகி இருக்கிறார்.
ஆதிரை காதலிக்கும் பையன் குணசேகரனின் எதிரி குடும்பத்தை சேர்ந்தவர் என்பது தெரிந்ததும் இனி குணசேகரன் எடுக்கப் போகும் முடிவு எதிர்பாராததாக இருக்கப் போகிறது.

அப்பத்தாவிற்கு பொங்கல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் அனைத்து தரப்பு ரசிகர் ரசிகர்களையும் கவர்ந்த ஒரு சீரியலாக இருக்கிறது. இந்த சீரியலின் டிஆர்பி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த வகையில் குணசேகரன் அப்பத்தாவை பொங்கலோடு தீர்த்துக்கட்ட முடிவெடுத்திருக்கிறார். அப்பத்தா ஏற்கனவே குடும்ப சொத்தில் தனக்கு இருக்கும் பங்கை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக சில வேலைகளை செய்து இருக்கிறார். அதை தெரிந்து கொண்ட குணசேகரன் அப்பத்தாவிற்கு பொங்கல் வரைக்கும் தான் டைம் அதுவும் போகி பொங்கலோடு அப்பத்தாவின் கதை முடியப்போகிறது என்று அடிக்கடி வசனம் கூறி வில்லத்தனத்தை காட்டிக் கொண்டிருக்கிறார்.

ஆதிரையின் காதல்
இந்த நிலையில் அப்பத்தா தன்னுடைய சொந்த ஊருக்கு பொங்கல் பண்டிகையை கொண்டாட கிளம்பி இருக்கிறார். குடும்பத்தோடு அனைவரும் செல்லலாம் என முதலில் முடிவு எடுத்திருந்த நிலையில் அதற்கு முந்தின நாள் நான் வீட்டு மருமகள்களை மட்டும் அழைத்துக் கொண்டு செல்கிறேன் என்று மூன்று மருமகள்கள் மற்றும் சக்தியோடு காரில் சென்று கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ஆதிரை தன்னுடைய காதலை சாணக்கியாவிடம் தெரிவிக்க அவர் முதலில் தயக்கம் தெரிவித்து பின்பு எனக்கு நேர அவகாசம் தேவைப்படுகிறது என்று சொல்ல அதற்கு ஆதிரையும் சரி எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார் இதை கரிகாலன் வீடியோ எடுத்து வைத்திருக்கிறார்.

குணசேகரனுக்கு கிடைக்கும் அதிர்ச்சி
ஏற்கனவே வீட்டில் உள்ள மருமகள்கள் எல்லாம் அப்பத்தாவோடு சேர்ந்து ஊருக்கு சென்று விட்டார்கள் என்று கோபத்தில் இருக்கும் குணசேகரனிடம் கரிகாலன் இந்த வீடியோவை வந்து காட்ட குணசேகரன் அதிர்ச்சியாகிறார். அதுமட்டுமல்லாமல் காதலிக்கும் பையன் எஸ் கே ஆர் இன் தம்பி என்னும் ரகசியத்தையும் கூறி வாங்க போய் எஸ் கேஆர் வீட்டில் சம்பந்தம் பேசலாம் என கூற மொத்த குடும்பமும் அதிர்ச்சி ஆகின்றன. அதே நேரத்தில் அப்பத்தாவின் சொந்த ஊருக்கு வந்த மருமகள்கள் எல்லாம் கிராமத்தில் தோட்டத்தில் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது நல்ல ஊரு என்பது அந்த ஊரில் மனிதர்களை எப்படி உருவாக்கி இருக்கிறது என்பதை பொறுத்து தான் என்று ஜனனி கூற, அதற்கு நந்தினி அப்போ மாமா ஊரு என்று கேட்க அனைவரும் சிரித்துக் கொண்டிருக்கின்றனர்.

இனி நடக்கப் போவது இதுதான்
இந்த நிலையில் ஏற்கனவே எஸ் கேஆர் க்கும் எனக்கும் பகை, அதுவும் ஏற்றுக் கொள்ள முடியாத பகை, தீராத பகை என்று வசனம் பேசிக் கொண்டிருக்கும் குணசேகரன் இனி ஆதிரையின் விஷயத்தில் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதுதான் அடுத்த கட்ட கதை. ஏற்கனவே கரிகாலனோடு ஆதிரைக்கு பேசி முடித்திருக்கும் நிலையில் கரிகாலனோடு திருமணத்தை செய்து வைக்க முடிவு எடுத்து இருப்பதாகவும் ஆனால் ஆதிரை தான் விரும்பும் எஸ் கே ஆர் இன் பையனோடு திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அதனால் வீட்டில் மேலும் பிரச்சனை ஏற்பட போகிறதாம். ஆதிரைக்கு ஆதரவாக ஜனனியும் இனி இருக்கப் போகிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications