எதிர்நீச்சல் கதையில் திடீர் மாற்றம்.. “அந்த” கேரக்டரையே தூக்கிட்டாங்களா? இனி இப்படித்தானா?
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் யாரும் எதிர்ப்பார்க்காத பல மாற்றங்கள் அதிரடியாக வந்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில் ஆரம்பத்தில் இருந்த கதைக்கும் இப்போது போகிக்கொண்டிருக்கும் கதைக்கும் மாற்றம் இருப்பதை குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

அதே நேரத்தில் திரைப்படங்களை மிஞ்சும் அளவிற்கு இந்த சீரியலில் கதை மட்டுமல்லாமல் ஒளிப்பதிவியிலும் நேற்றைய எபிசோடில் மிரட்டி இருந்தனர்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் அதிகமான ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது. அதனாலயே இந்த சீரியல் டிஆர்பி யில் முன்னணி இடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இருந்த இந்த சீரியலில் விறுவிறுப்பு நாளுக்கு நாள் இந்த சீரியலில் அதிகரித்துக் கொண்டே போகிறது.
கதையில் மட்டுமல்லாமல் ஒளிப்பதிவு, வசனம், காட்சி அமைப்பு என்று அனைத்திலும் வித்தியாசத்தை காட்டி பல ரசிகர்களையும் கவர்ந்து வருகின்றனர். அதுவும் நேற்றைய எபிசோடில திரைப்படங்களை மிஞ்சும் அளவிற்கு கண்களுக்கு குழுமையான பல இயற்கை காட்சிகள் காட்டப்பட்டது. அதே நேரத்தில் இனி என்ன நடக்கப்போகுதோ என்ற எதிர்பார்ப்பும் அனைவருக்குள்ளும் தொற்றிக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் சீரியலில் ஆரம்பத்தில் இருந்த கதைகள் இப்போது போய்க்கொண்டிருக்கும் பயணத்திற்கும் சில மாற்றங்கள் ஏற்பட்டுவதையும் சொல்லித்தான் ஆக வேண்டும். நேற்று எபிசோடில் ஜீவானந்தம் அடுத்தவர்களின் சொத்தை பிடுங்கி தன்னுடைய பெயருக்கு மாற்றிக் கொள்கிறார் என்று ஜனனி கொடைக்கானலில் அவருக்கு ஆதரவு கொடுத்த அந்த முதியவரிடம் பேசிக் கொண்டிருக்க அதற்கு அவரும் அவருடைய மனைவியும் ஜீவானந்தம் அப்படிப்பட்டவரே கிடையாது.
அவருக்கு இருக்கிற சொத்துக்கு இந்த ஊரையே விலைக்கு வாங்கி விடலாம். அவ்வளவு சொத்து இருக்கு. அதுவும் சின்ன வயதிலிருந்து அவருடைய அப்பா அவ்வளவு பெரிய பணக்காரர் என்று சொன்னார். ஆனால் ஈஸ்வரியின் பிளாஷ்பேக் எபிசோடில் ஜீவானந்தம் ஒரு கைலியுடன் சுவற்றில் சித்தாந்தம் எழுதிக் கொண்டிருப்பது பலருக்கும் தெரியும். அப்போது கூட ஈஸ்வரியின் அப்பா ஜீவானந்தத்தை அவமானமும் படுத்தி இருந்தார்.
சரி அதைக் கூட அவர் பேஷனுக்காக செய்தார். அதாவது தன்னுடைய மக்கள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வுக்காக இவரே களத்தில் இறங்கி இப்படியெல்லாம் செய்து கொண்டிருந்தார் என்று வைத்துக் கொண்டாலும் சில தினங்களுக்கு முன்பு ஈஸ்வரி இடம் ஜீவானந்தம் பேசும்போது கூட ஈஸ்வரியிடம் தன்னுடைய சிறு வயது காதலை நினைவு கூற வைத்து உங்கள் நினைப்பால் ஏதோ ஒரு இடத்தில் அந்த ஜீவானந்தம் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று கூறி இருப்பார்.
ஆனால் நேற்றைய எபிசோடில் ஜீவானந்தத்தின் உலகமே அவருடைய மனைவிதான். அவருடைய மனைவி பேச்சை ஜீவானந்தம் தட்டவே மாட்டார் அவருக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது என்று நேற்று குழந்தை மற்றும் மனைவி குறித்து பெரிய அளவில் பில்டப் கொடுக்கப்பட்டது. இதனால் சில தினங்களுக்கு முன்பு போய்க் கொண்டிருந்த கதையில் திடீரென்று மாற்றம் வந்துவிட்டதோ என்று என்ன தோன்றுகிறது.
அதுபோல ஆரம்பத்தில் ஜனனி மற்றும் வாசுவின் நட்பு அழகாக காட்டப்பட்டது. ஜனனிக்கு பிரச்சனை என்றதும் வாசு ஒவ்வொரு முறையும் தோள் கொடுக்கும் தோழியாக ஓடி வந்துவிடுவார். ஆனால் இப்போது வாசு இருக்கும் அதே கொடைக்கானலில் சுற்றிக் கொண்டிருக்கும் ஜனனிக்கு வாசு ஞாபகம் இல்லாமல் போய்விட்டதா? அல்லது வாசு ஏற்கனவே வேற சீரியலில் நடித்துக் கொண்டிருப்பதால் இந்த சீரியலில் அவருடைய கேரக்டரை தூக்கி விட்டார்களா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications