பிரபல நிகழ்ச்சியில் ஆட்டம் போட்ட ஆர்எஸ் சிவாஜி போன வாரம்.. இந்த வாரம் மாரிமுத்து..ரசிகர்கள் வருத்தம்
சென்னை: இயக்குனரும் நடிகருமாக இருந்த மாரிமுத்து இன்று காலை மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்திருக்கிறார். இவர் சில வாரங்களுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.
அதுபோலவே கடந்த வாரம் நடிகர் ஆர்.எஸ் சிவாஜி மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்திருந்தார். அவரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சந்தோஷமாக ஆடி பாடி மகிழ்ந்திருந்தனர்.

இந்த நிலையில் இவர்கள் இருவரையும் எவ்வளவு சந்தோஷமாக பார்த்து இருந்த நிலையில் இப்போது இவர்கள் இல்லை என்பதை நம்ப முடியவில்லை என்று ரசிகர்கள் தங்களுடைய வருத்தங்களை பகிர்ந்து வருகின்றனர்.
இன்று இருப்பார் நாளை இல்லை என்று சொல்வது நிஜம் என்பது நாளுக்கு நாள் நம்முடைய நிஜ வாழ்க்கையில் தெரிந்து கொண்டுதான் இருக்கிறோம். பிரபலங்களாக இருந்தாலும் சரி நமக்கு நெருக்கமானவர்களாக இருந்தாலும் சரி எல்லோருக்குமே இறப்பு என்பது நிச்சயம் தான். ஆனால் அதை நமக்கு பிடித்தவர்களுக்கு வரும்போது தான் நம்மால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அந்த வகையில் தான் பல போராட்டங்களுக்குப் பிறகு இப்போது தான் தன்னுடைய திறமையின் மூலமாக நடிகர் மாரிமுத்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்து கொண்டிருந்தார். ஆரம்ப காலகட்டத்தில் பல்வேறு போராட்டங்கள் கஷ்டங்களை தாண்டி இயக்குனராக வேண்டும் என்று முயற்சி எடுத்து இருந்த நிலையில் அதில் அவர் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும் தற்போது சின்ன திரையில் குணசேகரனாக பலருக்கும் பரீட்சையமாக மாறி இருந்தார்.
இந்த நிலையில் தான் இவர் இன்று காலை எதிர்நீச்சல் சீரியலுக்கான டப்பிங் பேசுவதற்காக சென்றிருந்த நிலையில் தனக்கு நெஞ்சுவலி ஏற்பட அங்கிருந்து காரை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்திருக்கிறார். பிறகு வீட்டிலும் இவருக்கு சரியாக வராததால் மருத்துவமனைக்கு போயிருந்த நிலையில் மருத்துவ சிகிச்சை பலன் அளிக்காமல் இவர் மரணம் அடைந்திருந்தார்.
இது பலருக்கும் வேதனையை கொடுத்திருக்கிறது. தொடர்ச்சியாக இவர் குறித்து பலரும் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இவருடைய ரசிகர்கள் பலர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு விஜய் டிவியில் ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சியில் பாட்டு பாடி டான்ஸ் ஆடி மகிழ்ந்திருந்த மாரி முத்துவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள். அதோடு கடந்த வாரம் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்த நடிகர் ஆர்எஸ் சிவாஜியும் இவரோடு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
எவ்வளவு சந்தோஷமாக இவர்கள் இருவரையும் பார்த்தோம் ஆனால் இன்று இவர்கள் இருவருமே இல்லை என்பது வேதனையை கொடுக்கிறது. அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் மாரடைப்பு காரணமாக மரணமடைந்து வருவது பலருக்கும் வேதனையை கொடுத்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு தான் நாதஸ்வரம் சீரியல் மூலம் பிரபலம் அடைந்த ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவரும் மாரடைப்பு காரணமாக மரணமடைந்திருந்தார்.
அதுமட்டுமல்லாமல் சில மாதங்களுக்கு முன்பு நடிகர் மனோ பாலா அதற்கு முன்பு நடிகர் மயில்சாமி, நடிகர் விவேக் என பல பிரபலங்களையும் இந்த மாரடைப்பு காரணமாக பறி கொடுத்து கொண்டிருக்கிறோம். அதுபோல நடிகர் மாரிமுத்து 56 வயதில் மாரடைப்பால் மரணம் அடைந்திருக்கும் நிலையில் அவர் பேசிய வீடியோக்கள் அதிகமாக இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
நடிகர் மாரிமுத்து எதிர்நீச்சல் சீரியலில் மட்டும் தான் கடுகடுவென்று பெண்களை அடிமையாக வைக்கும் குணசேகரன் ஆக நடித்திருப்பார். ஆனால் நிஜத்தில் முற்போக்குவாதியாக இருந்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுபோல இவர் வில்லனாக இருந்தாலும் இவர் பேசும் மாஸ் வசனங்கள் தற்போது இளம் தலைமுறையினர் பலரையும் கவர்ந்திருந்தது. அதனாலேயே அவர் ட்ரெண்டிங் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் இன்று அவர் இல்லை என்பது பலருக்கும் வேதனையை கொடுத்து இருப்பதாக ரசிகர்கள் வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications