பிறந்தநாளுக்கு இப்பதானே பிரியாணி விருந்து வைத்தார்! எதிர்நீச்சல் மாரிமுத்து இறப்பு.. கண்ணீரோடு ஞானம்
சென்னை: எதிர்நீச்சல் சீரியலின் மூலம் நடித்து பிரபலம் அடைந்த நடிகர் மாரிமுத்து இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார்.
இந்த நிலையில் பல்வேறு தரப்பட்டவர்களும் மாரிமுத்துவின் இறப்பிற்கு வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.

அவரோடு கடைசி நேரத்தில் கூடவே இருந்த எதிர்நீச்சல் சீரியலில் ஞானமாக நடிக்கும் நடிகர் கமலேஷ் பல தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.
நடிகர் மாரிமுத்து பல திரைப்படங்களில் நடிகராகவும் இயக்குனராகம், நடித்திருந்தாலும் சின்ன திரையில் இவர் முறையாக நடித்த எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கேரக்டர் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்துவிட்டது. 2கே கிட்ஸ்களையும் சீரியல் பக்கம் பார்க்க வைக்கும் இவருடைய நடிப்பு பெரிய அளவில் கொண்டாடப்பட்டு கொண்டிருக்கிறது.
இதனாலே அதிகமான நிகழ்ச்சிகளில் இவர் தொடர்ச்சியாக கலந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் இன்று அவர் திடீரென்று காலை டப்பிங் பேசுவதற்காக சென்று இருந்த நேரத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு பின்பு மருத்துவமனையில் சேர்த்து இருந்த நிலையில் அவர் மரணமடைந்திருக்கிறார். இந்த நிலையில் அவரோடு டப்பிங் பேசிக் கொண்டிருந்த ஞானம் பேட்டி ஒன்றில் பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.
நானும் மாரிமுத்து அண்ணனும் தான் டப்பிங் பேசிக் கொண்டிருந்தோம் அப்போது எனக்கு ஒரு மாதிரி இருக்கு என்று சொன்னார். நான் வெளியே காத்து வாங்கிட்டு வாங்க என்று சொன்னேன். வெளியில் நின்று கொண்டிருந்தார் பிறகு அவரே காரை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு போய் இருக்கிறார். அதற்கு பிறகு சில நேரம் கழித்து தான் அவருடைய மகள் போன் செய்து அப்பாவிற்கு முடியல ஹாஸ்பிடலில் சேர்த்து இருக்கு என்று சொன்னார்.

ஆனால் அண்ணனுக்கு இப்படி ஆகும் என்று நாங்கள் நினைக்கவில்லை. நாங்கள் சீரியலில் எல்லோரும் ஒரே குடும்பமாக தான் வாழ்ந்து வருகிறோம். யாருக்கு எந்த பிரச்சனை என்றாலும் உடனே அதற்கு துணை நிற்பார். சீரியலில் மட்டும்தான் அவர் குணசேகரன் ஆக நடித்துக் கொண்டிருக்கிறார் தவிர நிஜத்தில் அப்படிக் கொஞ்சம் கூட கிடையாது. இப்போ சில நாட்களுக்கு முன்புதான் அவருடைய பிறந்தநாளுக்கு எங்கள் டீமில் எல்லாருக்கும் பிரியாணி விருந்து வைத்தார்.
அண்ணன் நிலைமை இப்படியானதை இதை ஏற்றுக் கொள்ள என்னால் முடியவில்லை. அவருடைய குடும்பத்திற்கு எப்படித்தான் நாங்கள் ஆறுதல் சொல்ல போகிறோம் என்று தெரியவில்லை என்று கண்ணீரோடு எதிர்நீச்சல் சீரியலில் ஞானமாக நடிக்கும் நடிகர் கமலேஷ் பேசியிருக்கிறார்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications