மாரிமுத்து அண்ணாச்சி..அரை நாள் தான் பழக்கம்.. இப்படி சொல்லாதீங்க.. உருக்கமாக ஜிபி முத்து வேண்டுகோள்
சென்னை: இயக்குனரும் நடிகருமான மாரி முத்துவின் இறப்பிற்கு அதிகமான ரசிகர்களும் பிரபலங்களும் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.
பல பிரபலங்கள் நடிகர் மாரிமுத்துவோடு ஏற்பட்ட தங்களுடைய அனுபவங்கள் குறித்தும் தொடர்ச்சியாக பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த ஜி பி முத்துவும் நடிகர் மாரிமுத்துவோடு தனக்கு ஏற்பட்ட பழக்கம் குறித்தும் மாரிமுத்து குறித்தும் உருக்கமாக பேசி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சினிமாவில் பல போராட்டங்களுக்குப் பிறகு உதவி இயக்குனராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி, அதை தொடர்ந்து இயக்குனராக மாறி அதில் பெரிய அளவில் வெற்றி கிடைக்காத போதும் சினிமாவில் குணச்சித்திர வேடங்களிலும் வில்லனாக நடித்து வந்த மாரி முத்துவிற்கு எதிர்நீச்சல் சீரியலில் மூலமாகத்தான் பெரிய அளவில் பிரபலம் கிடைத்தது.
இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்று டப்பிங் பேசிக் கொண்டிருக்கும்போது ஏற்பட்ட அசவுகரியம் காரணமாக மருத்துவமனைக்கு சென்று மாரிமுத்து மாரடைப்பால் மரணம் அடைந்திருந்தார். இந்த அதிர்ச்சியில் இருந்து ரசிகர்களும் திரை பிரபலங்களும் மாரிமுத்துவின் குடும்பத்தினரும் வெளியே வராமல் இருக்கும் நிலையில் தொடர்ச்சியாக பல பிரபலங்கள் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் டிக் டாக் செயலி மூலம் பிரபலம் அடைந்த ஜிபி முத்து சில நாட்களுக்கு முன்புதான் நடிகர் மாரிமுத்துவுடன் சேர்ந்து பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். அப்போது இருவரும் அதிகமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது கூட மாரிமுத்து ஜிபி முத்துவிடம் நான் ஒரு அண்ணனாக உங்களிடம் சொல்கிறேன். தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வந்தது எனக்கு ரொம்பவே வருத்தம்.
எல்லோருக்கும் இந்த மாதிரி ஒரு வாய்ப்பு கிடைக்காது. கிடைத்த வாய்ப்பை நாம விட்டு வந்து விடக்கூடாது. கல்லெடுத்து எரிந்தால் எப்பவாவது தான் மாங்காய் விழும்.. எல்லாக் கல்லுக்கும் மாங்காய் விழுந்திடாது. அந்த மாதிரி தான் நமக்கு எப்பவாவது கிடைக்கும் வாய்ப்பை நாம சரியாக பயன்படுத்தியுடனும். இப்படி நீங்க இனி எப்பவும் செய்யாதீங்க என்றும் பேசி இருந்தார். அதற்கு ஜிபி முத்துவும் நான் இனி அப்படி பண்ண மாட்டேன் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று மாரிமுத்து மாரடைப்பால் காலமான செய்தியை கேட்டதும், ஜி பி முத்து என்னால் இதை நம்பவே முடியவில்லை. நான் இன்று பாண்டிச்சேரிக்கு வந்திருக்கிறேன். இங்கே வந்து செய்தியை பார்த்த பிறகு தான் எனக்கு தெரிந்தது. அப்போ கூட அண்ணாச்சிய பார்க்கும்போது அவர் இறந்தது போலவே இல்ல. அவர் தூங்குவது போலத்தான் இருக்காரு. எனக்கு அண்ணாச்சியை இப்படி பார்க்கிறது கஷ்டமா இருக்கு. அண்ணாச்சி ரொம்பவே நல்ல மனுஷன்.
நான் அண்ணாச்சியிடம் அரை நாள் மட்டும்தான் பழகி இருந்தேன். ஆனால் இந்த மாதிரி யாரையுமே நான் பார்த்தது கிடையாது. அவர் அவ்வளவு பாசமாக பேசினார். எந்த ஒரு பொறாமையும் இல்லாமல் பல விஷயங்களை சொல்லி தந்தார். அவர் இல்லை என்பது இப்போ வேதனையாய் இருக்கு என்று பேசி இருந்தார். இந்த நிலையில் இந்த வீடியோவிற்கு சில நெட்டிசன்கள் நீ எப்போ சாகப் போற? என்று கேட்டிருக்கிறார்கள். அது குறித்து என்று ஜிபி முத்து வீடியோ ஒன்றை வெளியிட்டு தன்னை பற்றி தவறாக பேசி வரும் நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications