மாரிமுத்துவின் உடல் பக்கத்திலேயே கதறி அழும் எதிர்நீச்சல் குடும்பம்.. கண்ணீர் வர வைக்கும் காட்சி
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடித்துக் கொண்டிருந்த நடிகர் மாரிமுத்து இன்று காலை மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்திருந்தார்.
இந்த நிலையில் அவருடைய உடலுக்கு பலதரப்பட்டோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் அவரோடு எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் பிரபலங்கள் நேரில் சென்று அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தி இருக்கின்றனர். அப்போது சீரியல் பிரபலங்கள் அனைவருமே கதறி அழுதது காண்போரை கண்கலங்க வைத்திருக்கிறது.
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடித்துக் கொண்டிருந்த மாரிமுத்து இன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் காலை மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்திருக்கிறார். டப்பிங் பேச போன இடத்தில் இவருக்கு நெஞ்சு வலி ஏற்படவே அவராகவே அங்கிருந்து காரை ஓட்டிக்கொண்டு வீட்டிற்கு வந்து இருக்கிறார். பிறகு அவரை மருத்துவமனையில் சேர்க்க மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்திருக்கிறார்.

இந்த செய்தி வெளியானதில் இருந்து அதிகமான ரசிகர்கள் அதிர்ச்சியோடு இது உண்மைதானா? இல்லையா? என்று இணையத்தில் தேடிக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தான் இந்த செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் மாரிமுத்துவின் உடல் அவருடைய வீட்டிற்கு மருத்துவமனையில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கிறது.
அதற்கு ரசிகர்கள், சீரியல் பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் என தொடர்ச்சியாக பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் நடிகர் மாரிமுத்து உடன் நடிக்கும் நடிகர்கள் அனைவருமே கலந்து கொண்டிருக்கின்றனர். அதில் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனின் மனைவியாக நடிக்கும் கனிகா கண்கங்கியபடியே, " இதை என்னால் நம்ப முடியவில்லை. நான் அதிர்ச்சியாக இருக்கிறேன்" என்று கூறி இருக்கிறார்.

அதுபோல நந்தினி ஆக நடிக்கும் நடிகை ஹரிப்பிரியாவும் மாரிமுத்துடைய உடலைப் பார்த்து இவர் இப்படி இருப்பது என்னால் பார்க்க முடியவில்லை என்று கதறி அழுது கொண்டிருக்கிறார். அதுபோல குணசேகரனுக்கு போட்டியாக இருக்கும் ஜனனி அழுது கொண்டே இருக்கிறார். அதுபோல ஞானம், விசாலாட்சி, சக்தி, கதிர், இந்த சீரியலின் இயக்குனர் திருச்செல்வம் டயலாக் எழுத்தாளர் ஸ்ரீவித்யா என பலரும் கலந்து கொண்டு கதறி அழுது கொண்டிருக்கின்றனர். அந்த வீடியோஸ் தற்போது வெளியாகி இருக்கும் நிலையில் இது காண்போரை கண்கலங்க வைத்திருக்கிறது.













Click it and Unblock the Notifications