Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எதிர்நீச்சல் சீரியல் நடிகரின் திறமைக்கு கிடைத்த வாய்ப்பு.. முன்னணி நடிகர்களோடு படத்திலும் அசத்தல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "எதிர்நீச்சல் சீரியலில்" "கிருஷ்ணசாமி மெய்யப்பன்" கேரக்டரில் "ஆர்.ஜே நெலு" நடித்து வருகிறார். இவர் சீரியலை தாண்டி இப்போது சினிமாவிலும் அடி எடுத்து வைத்திருக்கிறார். அது குறித்து மகிழ்ச்சியான பதிவை ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கும் நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

அந்த வகையில் திறமையும் உழைப்போம் இருந்தால் ஆரம்பத்தில் கஷ்டப்பட்டாலும் பிறகு அதற்கான பலன் ஒருநாள் கிடைக்கும் என்பது எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தாலும் ஒரு சிலர் அவர்களுடைய வாழ்க்கையில் அதை அனுபவித்து முன்னேறி இருக்கிறார்கள். அந்த வகையில் ஒருவர் தான் ஆர்.ஜே நெலு.

Ethirneechal Serial actor RJ Nelu acted in actor Bhakyaraj movie

இவர் எதிர்நீச்சல் சீரியலில் கிருஷ்ணசுவாமி மெய்யப்பனாக நடிக்கிறார். ஆனால் இவருடைய சொந்த ஊர் இலங்கை தான். இலங்கையில் இருந்து நடிப்பில் சாதிக்க வேண்டும் என்ற வெறியோடு சென்னைக்கு வந்த நெலுவிற்கு பல போராட்டங்களுக்கு பிறகு தான் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஆரம்பத்தில் இலங்கையில் ஒரு சில ஷார்ட் பிலிம்களை இயக்கியும், நடித்தும் பிரபலமாக இருந்த இவருக்கு தமிழில் முதல் சீரியலே பெரிய அளவில் வரவேற்பை கொடுத்தது. அதிலும் இவருடைய முதல் நாள் அறிமுக காட்சி யாரும் எதிர்பார்க்காத அளவிலிருந்தது. முதல் நாள் இவருடைய அறிமுகத்தை பார்த்து ரசிகர்கள் யார் இவர் என்று இணையத்தில் தேடிக் கொண்டிருந்தனர்.

Ethirneechal Serial actor RJ Nelu acted in actor Bhakyaraj movie

அதே நேரத்தில் சீரியலின் கதைப்படி இவருடைய கேரக்டரை ரசிகர்கள் திட்டிக் கொண்டிருந்தாலும் அந்த திட்டுகள் கூட தன்னுடைய நடிப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்று இவர் பேட்டியில் கூறியிருக்கிறார். அதே நேரத்தில் நெலுக்கு தமிழ் ரசிகர்களின் மத்தியில் கிடைக்கும் வரவேற்பு பார்த்து அவருடைய சொந்த ஊரில் பிரம்மாண்டமாக வரவேற்பு வைத்திருந்தனர்.

அவருடைய கிராமத்தினர் நெலுவின் வளர்ச்சியை பார்த்து தங்கள் வீட்டில் ஒருவர் வெற்றி பெற்றதாகவே கொண்டாடி இருந்தனர். இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் இவருடைய நடிப்பை பார்த்து இவருக்கு தமிழ் சினிமாவிலும் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. அதிலும் இயக்குனர் பாரதிராஜா நடித்த ஒரு திரைப்படத்தில் இவர் அசிஸ்டன்ட் கேமராமேனாக வேலை பார்த்திருக்கிறார்.

Ethirneechal Serial actor RJ Nelu acted in actor Bhakyaraj movie

அதைத் தொடர்ந்து இப்போது நடிகர் மற்றும் இயக்குனராக இருக்கும் பாக்கியராஜ் முக்கிய கேரக்டரில் நடித்த "ரூத்" (இது போது வழி அல்ல) என்ற திரைப்படத்தில் நெலு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். அதோடு இந்த திரைப்படத்தை "லோகு கிருஷ்ணா" இயக்கி இருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.

அது குறித்து பாக்கியராஜ் உடன் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த நெலு, "வாழ்க்கை பல ஆச்சரியங்களை நமக்காக வைத்திருக்கும். முதலில் அதை நாம நம்பனும். அவ்வளவு சீக்கிரமா யாருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பு பாக்கியராஜ் சாருடன் எனக்கு நடிக்க கிடைத்திருக்கிறது" என்று தன்னுடைய மகிழ்ச்சியை ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார். இதற்கு அதிகமான ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

Ethirneechal Serial actor RJ Nelu acted in actor Bhakyaraj movie
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+