எதிர்நீச்சல் கிருஷ்ணாக்கு கிடைத்த புது வாய்ப்பு.. ஆரம்பமே அசத்தல்தான் போங்க.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் கிருஷ்ணாவாக ஆர்ஜே நெலு அறிமுகமாகி இருக்கிறார்.
இலங்கையை சேர்ந்த ஆர்ஜே நெலு முதல் முறையாக தமிழ் சீரியலில் அறிமுகமாகி இருக்கும் நிலையில் அதைத்தொடர்ந்து தற்போது பிரபல டைரக்டர் ஒருவரை சந்தித்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

நெலு ஏற்கனவே சில திரைப்படங்களில் நடித்தும், இயக்கியும் இருக்கிறார். அதோடு சில ஷார்ட் பிலிம் இயக்கி இருக்கிறார். இந்த நிலையில் இப்போது இயக்குனர் வசந்த பாலனை தான் சந்தித்த விஷயத்தை இணையத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
சின்னத்திரை வட்டாரத்தில் அதிகமான ரசிகர்களால் பேசப்படும் ஒரு சீரியலாக எதிர்நீச்சல் சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்திருக்கின்றனர். அந்த வகையில் தான் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிகர் மாரி முத்து பெரிய அளவில் ரசிகர்களின் மத்தியில் பிரபலமாகி இருந்தார். ஆனால் சற்றும் எதிர்பார்க்காத வகையில் அவருடைய மரணம் வந்துவிட்டது.

அதைத்தொடர்ந்து ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிகர் வேலராமமூர்த்தி அறிமுகம் ஆகி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் சொந்த பெயர்களை மறந்து அவர்கள் நடித்துவரும் கேரக்டர்கள்தான் ரசிகர்களின் மத்தியில் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே ஒரு சில நடிகர்கள் சிலரை வெள்ளி திரையில் நடித்து பிரபலமாகி இருந்தாலும் தற்போது இந்த சீரியலில் வரும் பெயரின் படித்தான் எல்லோரும் அவர்களை அழைத்து வருகின்றனர்.
அந்த வகையில் மாரிமுத்துவின் மரணத்திற்கு பிறகு எதிர்நீச்சல் சீரியலில் கதை வேகமாக மாற்றப்பட்டு இருக்கிறது. அதில் இதுவரைக்கும் இல்லாத வகையில் புதியதாக ஜனனியின் பெரியப்பா பையன் மற்றும் அவருடைய குடும்பம் என புதியதாக கதை நகர்ந்து வருகிறது. அதில் குணசேகரனுக்கு அடுத்தபடியாக கிருஷ்ணா என்ற கிருஷ்ண மெய்யப்பன் கேரக்டரில் ஆர்.ஜே நெலு அறிமுகமாகி இருக்கிறார்.
ஆர் ஜே நெலு இலங்கையை சேர்ந்தவர். அங்கு ஒரு சில திரைப்படங்களை நடித்தும் இயக்கியும் இருக்கும் நிலையில் அங்கு பிரபலமாக இருக்கும் சக்தி டிவியில் பணி புரிந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து இப்போது முதல் முறையாக சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியல் அறிமுகம் ஆகி இருக்கும் நிலையில் தமிழ் ரசிகர்களின் மத்தியிலும் பிரபலம் அடைந்திருக்கிறார். இவர் நடித்த எபிசோடுகள் இரண்டு நாள் மட்டும் தான் ஒளிபரப்பாகி இருக்கிறது.
இனி குணசேகரனின் கோவில் திருவிழா நடந்து முடிந்த பிறகு ஜனனிக்கு பிரச்சனையாக கிருஷ்ணா கேரக்டர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அளவிற்கு முக்கியத்துவமான கேரக்டரில் ஆர் ஜே நெலு நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்று டைரக்டர் வசந்த பாலனை சந்தித்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். இதற்கு அதிகமான ரசிகர்கள் அடுத்து உங்களுடைய முயற்சி வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
-
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
பொற்காலம் படத்தில் முரளியின் தங்கச்சியாக நடித்த நடிகை மரணம்.. இப்படியா நடக்கணும்? கலங்கி நிற்கும் குடும்பம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications