சந்தோஷமா பிறந்த நாள் கொண்டாடினேன்! ஆனால் இப்படி ஆயிடுச்சு! பண மோசடி.. வேலராமமூர்த்தி பகீர்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் ஆக நடிகர் வேலராமமூர்த்தி நடித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அவருக்கு பிறந்தநாள் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. பிறந்த நாள் கொண்டாட்டம் முடிவடைந்த சில மணி நேரங்களில் வேலராமமூர்த்தி தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் நான் சந்தோஷமாக பிறந்த நாள் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது எனக்கு அதிர்ச்சிகரமான ஒரு செய்தி கிடைத்திருக்கிறது.. அதாவது என்னுடைய பெயரில் அக்கவுண்ட் ஓபன் பண்ணி அதன் மூலம் ரசிகர்களிடம் சிலர் பண மோசடி செய்வதாக நான் கேள்விப்பட்டேன். அதனால் யாரும் அதில் சிக்கி விடாதீர்கள் என்று வேலராமமூர்த்தி கூறி இருக்கிறார். என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் திரைப்பட நடிகராகவும், எழுத்தாளராகவும் இருக்கும் வேலராமமூர்த்தி முதல் முறையாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் ஆக சின்னத்திறையில் அறிமுகம் ஆகி இருக்கிறார். இவர் வெள்ளித்திறையில் அதிகமான திரைப்படங்களிலும் நடித்திருந்தாலும் இவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்த வசனம் என்றால் "இளந்தாரி பய" என்ற வசனம்தான்.
இந்த வசனத்தை எந்த இடத்தில் கேட்டாலும் கூட வேல ராமமூர்த்தியின் முகம் அனைவர் கண் முன்பும் வந்துவிடும். அதுவும் அதிகமாக மீம்ஸ் களில் கூட அந்த இளந்தாரி பய வார்த்தை ட்ரெண்டாகி வந்தது. அதைத்தொடர்ந்து எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் ஆக நடித்து வந்த மாரிமுத்து திடீரென்று காலமானதை தொடர்ந்து அவருடைய கேரக்டரில் வேலராமமூர்த்தி நடித்தால் நன்றாக இருக்கும் என்று அதிகமான ரசிகர்கள் கருத்து கூறி வந்தனர்.

அதையே இப்போது சீரியல் தரப்பினர்களும் நிறைவேற்றி வைத்திருக்கின்றனர். எதிர்நீச்சல் சீரியலில் தன்னுடைய நடிப்பை தத்ரூபமாக காட்டிக் கொண்டிருக்கும் வேலராமமூர்த்திக்கு நேற்று பிறந்தநாள். அதனால் அவருடைய நண்பர்களும் எதிர்நீச்சல் சீரியல் குழுவினர்களும் சேர்ந்து எதிர்நீச்சல் சீரியல் செட்டில் வைத்து கேக் வெட்டி அவருக்கு மாலை போட்டு பிறந்தநாள் பங்க்ஷனை கொண்டாடி இருந்தனர்.
அவரோடு பல நடிகர் நடிகைகள் கூட தொடர்ச்சியாக வேலராமமூர்த்திக்கு வாழ்த்துக்கள் கூறி வந்தனர். சமூக வலைதளத்திலும் அவருக்கு அதிகமான ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறிவந்தனர். இப்படியான நிலையில் தான் பிறந்தநாள் பங்க்ஷன் கொண்டாடப்பட்ட கொஞ்சம் நேரத்திலேயே தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் வேல ராமமூர்த்தி ஒரு வீடியோ போட்டு இருக்கிறார்.

அதில் எனக்கு உலகெங்கும் இருந்து இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கள் மக்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அந்த சந்தோஷத்தில் நான் திக்கு முக்காடி போயிருக்கிறேன். மக்களுக்கு என் மீது இவ்வளவு பாசமா நான் என்று நான் வியந்து போயிருக்கிறேன். இந்த நேரத்தில்தான் எனக்கு ஒரு அதிர்ச்சிகரமான விஷயம் காதுக்கு வந்திருக்கிறது. என்னுடைய பெயரில் அக்கவுண்ட் ஓபன் பண்ணி சிலர் ரசிகர்களிடம் பண மோசடி செய்து வருவதாக சிலர் என்னிடம் கூறியிருக்கிறார்கள்.
அவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை நாங்கள் செய்து விடுவோம். ஆனால் மக்கள் யாரும் அதில் ஏமாந்து விடாதீர்கள் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பல பிரபலங்களின் ஐடியை ஹேக் செய்து சிலர் தவறான வேலைகளை செய்து வருவதை கேள்விப்பட்டிருப்போம் அந்த வகையில் இப்போது வேலராமமூர்த்தி பெயரை வைத்து சிலர் ஐடி கிரியேட் பண்ணி அதன் மூலம் ஏமாற்றி வருவதால் அதில் யாரும் ஏமாந்து பணத்தை இழந்து விடாதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறோம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications