12 வருஷமாக குழந்தை இல்லை!?எதிர்நீச்சல் ஞானம் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்.. கிடைத்த பொக்கிஷம்!
எதிர்நீச்சல் சீரியலில் ஞானம் கேரக்டரில் நடிக்கும் கமலேஷுக்கு 12 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில் பிறந்த பெண் குழந்தை தான் தனக்கு பொக்கிஷம் என்று கூறி இருக்கிறார்.
சென்னை: நடிகர் கமலேஷ் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஞானசேகரன் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.
நடிகர் கமலேஷ் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் சூப்பர் சிங்கர் செலிப்ரட்டி நிகழ்ச்சியில் ஒரு பாடகராகவும் இருந்திருக்கிறார்.
கமலேஷ் சூப்பர் சிங்கர் செலிப்ரட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இன்னொரு பிரபலமான சிந்துஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

எதிர்நீச்சல் ஞானம்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஞானசேகரன் கேரக்டரில் ரசிகர்களின் மத்தியில் பிரபலமான கமலேஷ் தற்போது ஞானம் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறார். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் சீரியலின் மூலமாக அதிகமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் தான். பல வருடங்களாக இவர் சின்னத்திரை வெள்ளி திரையில் நடித்துக் கொண்டிருந்தாலும் இவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றன. சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் எப்போதும்
பிரபலங்களோடும் தன்னுடைய குடும்பத்தோடும் எடுக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

காதல் திருமணம்
கமலேஷ் ஜி தமிழ் டிவி சேனலில்சூப்பர் சிங்கர் செலிப்ரட்டி என்ற போட்டியில் ஒரு போட்டியாளராக பங்கேற்றார். அப்போது அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்றொரு பிரபலமான சிந்துஜாவை காதலித்து 2007 செப்டம்பர் 6ஆம் தேதி சென்னையில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணத்தில் பல சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். நடிகர் கமலேஷ் தமிழ், தெலுங்கு, கன்னடா சீரியல்களில் நடித்து வருகிறார். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் தனது குழந்தை பருவத்தில் இருந்தே கிளாசிக்கல் இசையை கற்று இருக்கிறார்.

கிடைத்த பொக்கிஷம்
ஒரு நடிகராகவும், பாடகராகவும் இருக்கும் இவர் எதிர்நீச்சல் சீரியலில் ஞானம் கேரக்டரில் அமைதியின் சொரூபமாக அண்ணன் பேச்சை எதிர்த்து பேச துணிவு இல்லாத கேரக்டராகவும் இருந்து வருகிறார். ஆனால் நிஜ கேரக்டரில் இவர் அந்த மாதிரி கிடையாதாம். அதுமட்டுமல்லாமல் இவர்களுடைய திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு 12 வருடங்கள் குழந்தை இல்லாமல் தான் இருந்திருக்கிறது. தங்களுக்கு இனி குழந்தை இருக்குமா? இல்லையா? என்ற ஒரு கேள்வியோடு இருந்த நிலையில் தான் இவருக்கு அழகான ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அந்த குழந்தை தான் தன்னுடைய மொத்த உலகம் என்று இவரும் அவருடைய மனைவியின் கூறி இருக்கின்றனர்.

குழந்தையோடு புகைப்படங்கள்
சூட்டிங் இல்லாத நேரங்களில் குடும்பத்தோடு நேரத்தை செலவழிக்கும் நடிகர் கமலேஷ் வெளியே செல்லும் இடங்களில் தன்னுடைய குழந்தையோடு எடுக்கும் எடுக்கும் புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். சீரியலில் தான் இவர் குழந்தைகள் விஷயத்தில் பெரிய அளவில் அன்பை காட்டாத நபராக இருந்தாலும், நிஜ வாழ்க்கையில் தன்னுடைய குழந்தைதான் தனக்கு எல்லாமே என்று இவர் கூறியிருக்கிறார். தற்போது இவர் இவருடைய குழந்தை யோடு எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் அதிகமான ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
-
வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications