எதிர்நீச்சலுக்கு முடிவு இல்லை! இயக்குனரின் சர்ப்ரைஸ்.. வெளியான புகைப்படங்கள்.. அப்போ விஷயமே இதுதானா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் கடந்த ஜூன் 8-ம் தேதியோடு முடிவுக்கு வந்திருந்த நிலையில் இந்த சீரியலில் நடித்த நடிகர் நடிகைகள் எல்லோரும் மீண்டும் அதே எதிர்நீச்சல் வீட்டில் ஒன்று கூடி இருக்கின்றனர். அது குறித்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி பார்க்கலாம்.
சன் டிவி சீரியலுக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். பொதுவாக சன் டிவி சீரியல் பெண்கள் தான் அதிகமாக விரும்பி பார்ப்பார்கள். ஆனால் சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலை அதிகமான ஆண்களும் பார்த்து வந்தனர். அதிலும் இளைஞர்கள் கூட இந்த சீரியலுக்கு ரசிகர்களாக மாறி இருந்தனர். கல்லூரி படிக்கும் இளைஞர்கள் நாங்கள் ஹாஸ்டலில் இந்த சீரியலை தான் பார்க்கிறோம் என்று பேட்டியில் பேசியிருந்தனர்.

அந்த அளவிற்கு சீரியலில் காமெடி மற்றும் சென்டிமென்ட் காட்சிகள் மக்கள் மனதில் இடம் பிடித்திருந்தது. அதிலும் மாரிமுத்துவின் நடிப்பு பெரிய அளவில் மக்களை கவர்ந்திருந்தது. குணசேகரன் கேரக்டரில் மாரிமுத்து நடித்தார் என்று சொல்வதை விடவும் வாழ்ந்திருந்தார் தான் என்று சொல்ல வேண்டும். அவர் இதற்கு முன்பு எத்தனையோ திரைப்படங்களில் நடித்திருக்கிறார், திரைப்படங்களை இயக்கியும் இருக்கிறார். ஆனால் அதில் எல்லாம் கிடைக்காத பெயரும் புகழும் இந்த சீரியலின் மூலமாக மாரிமுத்துவிற்கு கிடைத்தது.
ஆனால் அவருடைய திடீர் இறப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது. அதற்குப் பிறகு சீரியலில் பல மாற்றங்கள் ஏற்படுத்தியதன் விளைவாக சீரியல் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக விமர்சிக்கப்பட்டது. ஆனாலும் தன்னுடைய சீரியலை மக்கள் விமர்சிப்பதை பார்த்ததும் இயக்குனர் திருச்செல்வம் திடீரென்று சீரியலை முடித்துவிட்டார்.
மாரிமுத்து இருந்த வரைக்கும் இந்த சீரியல் 2000 எபிசோடு தாண்டி வெற்றிகரமாக போகும். 5 வருடங்களை எட்டும் என்றெல்லாம் பல பேட்டியில் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் 750 எபிசோடு உடன் இந்த சீரியல் முடிவடைக்கு வந்தது. இதனால் இந்த சீரியலின் தீவிரமான ரசிகர்கள் அடுத்த சீசன் வருமா? என்று ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்த நிலையில் சீரியல் முடிவு கடந்த வாரமே நடைபெற்ற போதிலும் அதைத் தொடர்ந்து சீரியலில் நடித்த நடிகர்கள் எல்லோரும் அதே எதிர்நீச்சல் வீட்டில் ஒன்று சேர்ந்து சந்தித்திருக்கின்றனர்.
அப்போது அனைவருக்கும் எதிர்நீச்சல் இயக்குனர் நினைவு பரிசுகளை வழங்கி இருக்கிறார். எல்லா நடிகர்களுக்கும் அவர்கள் நடித்த கதாபாத்திரத்தின் பெயரை போட்ட புகைப்படத்தோடு அவர்களை அங்கீகரித்திருக்கிறார். இந்த புகைப்படங்களை இந்த சீரியலில் நடித்த நடிகர்கள் எல்லோரும் தொடர்ச்சியாக பகிர்ந்து கொண்டு வருகிறார்கள்.
அதோடு ஆரம்பத்தில் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது எப்படி சீரியல் நடிகர் நடிகைகள் ரீல்ஸ் வீடியோக்கள் எடுத்து வெளியிடுவார்களோ அதுபோல இப்போதும் ஜனனியாக நடித்த மதுமிதா, நந்தினி ஆக நடித்த ஹரிப்ரியா, ரேணுகாவாக நடித்த பிரியதர்ஷினி ஈஸ்வரியாக நடித்த கனிகா என எல்லோரும் ரீல்ஸ் வீடியோக்கள் எடுத்து வெளியிட்டு இருக்கிறார்கள். அதுவும் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications