திடீரென்று சீரியலில் இருந்து விலகிய “எதிர்நீச்சல்” நடிகை.. காரணம் இதுதானா? இனி அவருக்கு பதில் இவர்?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடிகை காயத்ரி கிருஷ்ணன் ஜான்சி ராணி கேரக்டரில் நடித்து வருகிறார்.
எதிர்நீச்சல் சீரியலில் இவருக்கு கிடைத்த வரவேற்பு தொடர்ந்து பல சீரியலில் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் இவர் எதிர்நீச்சல் சீரியலில் மட்டுமல்லாமல் தொடர்ச்சியாக பல சீரியலிலும் சினிமாக்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவர் நடித்து வரும் ஒரு சீரியலில் இருந்து விலகப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதை குறித்து விரிவாக பார்க்கலாம்.

பொதுவாக திறமையும் உழைப்பும் எவ்வளவுதான் இருந்தாலும் சில நேரங்களில் தான் அது பலருக்கும் வெற்றியை கொடுக்கிறது. அதற்காக தன்னுடைய தைரியத்தையும் விடாமுயற்சியையும் கைவிடாதவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த மாதிரி தான் தற்போது எதிர்நீச்சல் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் ஜான்சி ராணியும் இருந்து வருகிறார்.
இவர் ஆரம்ப காலகட்டத்தில் மாடலிங் மூலமாக தன்னுடைய சினிமா வாழ்க்கையை தொடங்கி இருந்தாலும் தொகுப்பாளர்களாகத்தான் இவர் அதிகமாக மேடைகளில் தோன்றியிருக்கிறார். இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பலருக்கும் பரீட்சையமாக இருந்தாலும் நடிக்க வேண்டும் என்று ஆசை இவருக்குள் இருந்து கொண்டு இருந்திருக்கிறது. அப்போது அதற்காக பல முயற்சிகளை எடுத்துக் கொண்டு இருந்தாலும் இவருடைய நிறம் மற்றும் உடல் எடையை குறித்து பலரும் விமர்சித்திருக்கிறார்கள்.
நடிப்பு ஆசை தனக்குள் இருந்தாலும் படிப்பு விஷயத்திலும் கண்ணும் கருத்துமாக இருந்து வயிற்றில் குழந்தையோடு இருந்தாலும் அதையும் தாண்டி இவர் பல டிகிரிகளை முடித்து டாக்டர் பட்டமும் பெற்றிருக்கிறார். அந்த நிலையில் தான் காயத்ரி கிருஷ்ணனின் வாழ்க்கையை மாற்றி அமைத்து வெளியே வெளிச்சத்தை காட்ட ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதாவது அயலி வெப் சீரிஸில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த சீரியஸில் இவருடைய டயலாக் பெரிய அளவில் பேசப்பட்டது.
பெண்களுக்கு எதிராக காலம் காலமாக பின்பற்றப்படும் மூடநம்பிக்கைகளை எதிர்த்து வந்த வெப் சீரிஸில் மாஸாக இவர் டயலாக் பேசி இருப்பார். அதைத்தொடர்ந்து இவருக்கு சில வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. அதில் ஒன்றுதான் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல். இந்த சீரியலில் ஜான்சி ராணி ஆக இப்போது பலரும் இவரை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

அதைத் தொடர்ந்து காயத்ரி கிருஷ்ணனுக்கு அதிகப்படியான சீரியல் வாய்ப்புகளும் திரைப்பட வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கிறது. ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அமுதாவும் மகாலட்சுமியின் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் கிழக்கு வாசல் என்ற சீரியலில் இவர் ஆரம்பத்தில் நடிப்பதாக கமிட் ஆகி இருந்தார்.
இந்த சீரியலின் பூஜை நிகழ்ச்சிகளில் கூட இவர் கலந்து கொண்டிருந்தார். ஆனால் இப்போது கால் சீட் பிரச்சினையால் இவர் இந்த சீரியலில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே எதிர்நீச்சல் சீரியலில் இவரை காணவில்லையே என்று ரசிகர்கள் தேடிக் கொண்டிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் காயத்ரி கிருஷ்ணனுக்கு பதிலாக இனி கிழக்கு வாசல் சீரியலில் நடிகை தாரணி நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications