எதிர்நீச்சல் முடிவுக்கு முன்பே நடிகை ஹரிப்ரியா எடுத்த மாற்று ஏற்பாடு! ஆனால் ஒரு வாரம் மிஸ் ஆயிடுச்சு
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் வரும் ஜூலை மாதத்தோடு முடிவடையை இருக்கிறது என்று தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகை ஹரிப்பிரியா சன் லைஃப் சேனலில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார். அது குறித்து ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். அதை பற்றி பார்க்கலாம்.
சின்னத்திரையில் சமீப காலமாக எல்லா சீரியல்களிலும் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் போது எதிர்நீச்சல் சீரியலில் மட்டும் தான் புதுவிதமான கதைகளோடு தொடங்கப்பட்டது. இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கப் போகிறார் என்றதும் ஆரம்பத்திலேயே இந்த சீரியலுக்கு எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது.

அதுபோலவே சீரியலில் 500 எபிசோடுகள் விறுவிறுப்பாகவே போய்க்கொண்டிருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த சீரியலில் குணசேகரன் ஆக நடித்து வந்த மாரிமுத்துவின் இறப்பிற்கு பிறகு சீரியலில் கதை வேறு விதமாக மாற்றப்பட்டது. அதிகமான நடிகர்கள் புதுப்புது கேரக்டரில் அறிமுகப்படுத்தப்பட்டு கொண்டே இருந்தனர். இதனால் சீரியலின் கதை தொடர்ச்சி இல்லாமல் போய்க் கண்டிருப்பதாக ரசிகர்கள் மத்தியில் விமர்சிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இந்த சீரியல் வரும் ஜூலை 8-ம் தேதியோடு முடிவுக்கு வர இருக்கிறது என்று செய்திகள் வெளியாகி வருகிறது. அதை இந்த சீரியலில் நடிக்கும் நடிகை சத்யபிரியா நடிகை சத்யா தேவராஜன், நடிகர் விபு உள்ளிட்ட சிலர் உறுதி செய்து இருக்கின்றனர். அதே நேரத்தில் இந்த சீரியலில் நந்தினியாக நடித்து பெரிய அளவில் பிரபலம் அடைந்த ஹரிப்ரியா குறித்த செய்திகள் இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

ஹரிப்ரியா ஏற்கனவே கனா காணும் காலங்கள் சீரியலில் தொடங்கி கண்மணி, பிரியமானவள், லட்சுமி வந்தாச்சு போன்ற பல சீரியல்களில் நடித்திருக்கிறார் . ஆனால் சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பே எனக்கு தொகுப்பாளராக வேண்டும் என்பதுதான் ஆசை அதற்காகத்தான் நான் முயற்சி எடுத்துக் கொண்டிருந்தேன் என்று ஹரிப்பிரியா சில இன்டர்வியூக்களில் கூறி இருக்கிறார்.
அதுபோல இப்பொழுது எதிர்நீச்சல் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் ஹரிப்பிரியா அதே நேரத்தில் சன்லைவ் சேனலில் நேயர்களுக்கு பிடித்த பாடல்களை தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த வீடியோக்களை பகிரும் ரசிகர்கள் எதிர்நீச்சல் சீரியல் முடியப்போகிறது என்ற போது ஹரிப்ரியா சன் லைப் சேனலுக்கு தாவி விட்டாரா? அங்கு புது நிகழ்ச்சியை அவர் ஆசைப்பட்ட மாதிரி கிடைத்துவிட்டதா என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

ஆனால் சன் லைப் சேனலில் ஹரிப்பிரியா சில வருடங்களாகவே அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதே நேரத்தில் இவருடைய தமிழ் உச்சரிப்பு பலருடைய ஃபேவரைட் ஆக இருக்கிறது. ஆனாலும் கடந்த ஒரு வாரமாக அவர் அந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை என்பது ரசிகர்களுக்கு வருத்தத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அது குறித்து ரசிகர்கள் எதனால் ஹரிப்பிரியா நேயர்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிக்கு வரவில்லை என்று கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications