விஜய்யின் GOAT திரைப்படத்தில் எதிர்நீச்சல் சீரியல் நடிகை.. லீக்கான புகைப்படம்.. இப்படி ஒரு டுவிஸ்ட்டா?
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் Greatest Of All Time என்ற திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் வித்தியாசமான கெட்டப்பில் இருப்பதால் இந்த திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் அதிகமாக இருக்கிறது.
இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி கேரக்டரில் நடித்து வரும் கனிகா இயக்குனர் வெங்கட் பிரபுவோடு எடுத்த புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் நிலையில் கனிகாவும் விஜய் நடிக்கும் Greatest Of All Time படத்தில் நடிக்கிறாரா என்ற கேள்விகள் எழுந்து வருகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் முதல் முறையாக இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் Greatest Of All Time என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்து கொண்டு இருப்பதால் இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு அதிகமான எதிர்பார்ப்பு வைத்திருக்கின்றனர். அதுபோல இந்த படத்தில் மூன்று போஸ்டர்கள் இதுவரைக்கும் வெளிவந்துள்ள நிலையில் அடுத்ததாக இந்த படத்தின் முதல் பாடல் வெளிவர இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதோடு அந்த பாடல் விஜய் பாடிய பாடலாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதுபோல சன் டிவியில் அதிகமான ரசிகர்களின் பாராட்டுகளோடு எதிர்நீச்சல் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஈஸ்வரி டைரக்டரில் நடிப்பவர் தான் கனிகா. இவர் ஏற்கனவே வெள்ளித் திறையில் அஜித், மாதவன் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களோடு இணைந்து நடித்திருக்கிறார்.
அதுபோல சில திரைப்படங்களுக்கு டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் இருந்திருக்கிறார். இந்த நிலையில் சின்ன திறையில் முதல் முறையாக களம் இறங்கி இருக்கும் கனிகா எதிர்நீச்சல் சீரியல் மூலமாக ரசிகர்களின் மனதில் அதிகமான இடத்தை பிடித்திருக்கிறார். அதுவும் எதிர்நீச்சல் சீரியலில் இப்போது கனிகாவின் கேரக்டருக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதுபோல கனிகா சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

சீரியலில் அமைதியின் சொரூபமாக இருந்தாலும் சூட்டிங் ஸ்பாட்டில் தன்னுடைய திறமைகளை அடிக்கடி நிரூபித்து வருகிறார். அதாவது தன்னுடைய சொந்த குரலில் பாட்டு பாடுவது, டப்ஸ்மாஷ் பண்ணுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் கனிகா தற்போது வெங்கட் பிரபுவோடு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அதனால் விஜய்யின் Greatest Of All Time படத்திலும் கனிகா நடித்திருக்கிறார் என்ற தகவல்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெங்கட் பிரபுவோடு கனிகா இருக்கும் புகைப்படத்தால் ரசிகர்கள் இவர் Greatest Of All Time படத்தில் நடித்திருக்கிறாரா? அல்லது டப்பிங் பேசியிருக்கிறாரா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் அது குறித்து எந்த விளக்கத்தையும் கனிகா அந்த பதிவில் குறிப்பிடவில்லை.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
பரிசு வேண்டாம்.. நோட்டு கொடுங்க.. அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இறங்கிய தவெக அமைச்சர் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
அப்பா விட்டதை பிடிக்கும் மகள்.. மதுரை அரசியலில் கால் பதிக்கும் கயல்விழி அழகிரி! தவெக தான் அடுத்து? -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications