நல்ல விஷயங்களுக்கு எப்போதும் நேரம் எடுக்கும்.. “எதிர்நீச்சல்” கிளைமேக்ஸ் குறித்து ஆதிரை போட்ட பதிவு
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை கேரக்டரில் நடிக்கும் நடிகை சத்யா தேவராஜன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எதிர்நீச்சல் சீரியல் முடிவு குறித்து போஸ்ட் ஒன்று போட்டு இருக்கிறார். அது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
அந்த வகையில் சன் டிவியில் கடந்த 2022 ஆம் ஆண்டு பெரிய எதிர்பார்ப்போடு தொடங்கப்பட்ட எதிர்நீச்சல் சீரியல் வரும் ஜூன் மாதத்தோடு முடிவடைய இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த சீரியலில் விசாலாட்சியாக நடிக்கும் நடிகை சத்யபிரியா தன்னுடைய instagram பக்கத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார்.

அப்போது அவரிடம் ஒரு ரசிகர் எதிர்நீச்சல் சீரியல் முடிவடைய போகிறதா? சொல்லுங்கள் அம்மா என்று கேட்க, ஆமாம் என்று அவர் பதில் கொடுத்திருக்கிறார். அதுபோல இந்த சீரியலில் ஆதிரை கேரக்டரில் நடித்து வரும் நடிகை சத்யா தேவராஜன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சீரியல் முடிவு குறித்து சில உருக்கமான பதிவுகளை வெளியிட்டு இருக்கிறார்.
அதில், "உங்கள் முயற்சிகள் மதிக்கப்படாவிட்டாலும், பாராட்டப்பட விட்டாலும் உங்கள் சிறந்ததை கொடுப்பதை நிறுத்தாதீர்கள். நல்ல விஷயங்களுக்கு எப்போதும் நேரம் எடுக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் நேர்மையான முயற்சிகள் ஒருநாள் உங்களை உயர்த்தும். ஓய்வெடு! நீங்கள் 100 ஆக அங்கீகரிக்கப்படுவீர்கள்" என்று சத்யா தேவராஜன் அதில் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் இந்த பதிவிற்கு அதிகமான கமெண்ட்கள் வருத்தம் தெரிவித்து வந்திருக்கிறது. அதுபோல ஒரு சில ரசிகர்கள் இந்த சீரியலில் இரண்டாவது பாகம் வெளிவரப்போகிறதா? என்று சந்தேகங்களை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே எதிர்நீச்சல் சீரியல் ஆரம்பத்தில் பெரிய அளவில் எதிர்பார்ப்போடு தொடங்கி அதிகமான ரசிகர்களை கவர்ந்தது. ஆனால் இந்த சீரியலில் ஆதிகுணசேகரனாக நடித்த மாரிமுத்துவின் இறப்பிற்கு பிறகு சீரியலில் கதையில் ஏற்பட்ட மாற்றம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
அதே நேரத்தில் சன் டிவியில் அதிகமான புது சீரியல்கள் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இந்த சீரியல் அவசர அவசரமாக முடிவுக்கு வருகிறதா? என்று கேள்விகள் எல்லோருக்கும் இருக்கிறது. காரணம் இந்த சீரியலில் முடிவுக்கு வராத பிரச்சனைகள் பல இருக்கிறது. எதிர்நீச்சல் பெண்கள் எல்லோரும் சுயமாக பிசினஸ் தொடங்குவதற்கு இப்போதுதான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் இன்னும் ஜெயிக்க வேண்டும். அதுபோல அப்பத்தா கொலை கண்டுபிடிக்கப்பட வேண்டும், ஜீவானந்தத்தின் மனைவியின் கொலையில் குணசேகரன் சொல்லி தான் கதிரும் ஈடுபட்டார் என்ற உண்மை எல்லோருக்கும் ஏற்கனவே தெரிய வந்திருந்தாலும் அது குறித்த தண்டனை கிடைக்கவில்லை. அதுபோல கிள்ளிவளவன் என்ன ஆனார் என்று தெரியவில்லை, தர்ஷினியை கடத்தியது யார் என்ற உண்மையை வீட்டில் சொல்லி இருந்தாலும் அதற்கு குணசேகரனுக்கு தண்டனை கிடைக்க வேண்டும்.

அதுபோல விசாலாட்சி குணசேகரனை பற்றி தெரிந்து கொண்டு அவரை கேள்வி கேட்க வேண்டும். அதுபோல சாருபாலா குடும்பம் என்ன ஆனது என்று தெரியவில்லை. ஜனனியின் சித்தப்பா குடும்பம் மற்றும் அவருடைய பையன்களால் ஜனனியின் புது பிசினஸுக்கு வந்த பிரச்சனை முடிவுக்கு வரவேண்டும். ஜனனியின் நண்பன் கௌதம், வெண்பா, ஜீவானந்தம் போன்றவர்களுடைய காட்சிகள் இப்போது இல்லாமல் இருக்கிறது.
இப்படியாக இந்த சீரியலில் இன்னும் முடிவுக்கு வராத பல பிரச்சனைகளும் கதைகளும் இருக்கும்போது ஒரு வாரத்திற்குள் எப்படி இந்த சீரியல் முடிக்கப் போகிறார்கள் என்ற கேள்விகள் அதிகமான ரசிகர்களுக்கு இருக்கிறது. என்ன நடக்கப்போகிறது என்று கொடுத்திருந்து பார்ப்போம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications