திடீரென மணக்கோலத்தில் எதிர்நீச்சல் நடிகை.. கழுத்தில் மஞ்சள் தாலி.. பக்கத்தில் அந்த நபர்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் வாசு கேரக்டரில் நடித்து பிரபலமான நடிகை வைஷ்ணவி தற்போது மணக்கோலத்தில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
வாசு இப்போது எதிர்நீச்சல் சீரியலில் அதிகமாக வரவில்லை என்றாலும் சன் டிவியில் புதுவசந்தம் என்ற சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

அதே நேரத்தில் அவர் வெளியிட்ட வீடியோவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். இந்த நிலையில் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சன் டிவியில் அதிகமான ரசிகர்களை கவர்ந்து டாப் 10 சீரியல்களில் முதல் இடத்தில் எதிர்நீச்சல் சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்களில் மத்தியில் பிரபலமடைந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் "வாசு" கேரக்டர் ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்து ரசித்து கொண்டு இருக்கும் கேரக்டர் தான். காரணம் இந்த கேரக்டர் ஜனனிக்கு பெஸ்ட் பிரண்டாக இருந்து வருகிறார்.
ஜனனிக்கு எப்பவெல்லாம் பிரச்சனையோ அப்போதெல்லாம் அதிரடியாக அவருக்கு துணையாக இருக்கும் வாசு கேரக்டரில் நடித்து வருவது நடிகை வைஷ்ணவி நாயக். இவர் இப்போது எதிர்நீச்சல் சீரியலில் அதிகமாக வருவதில்லை. அதே நேரத்தில் புதுவசந்தம் என்ற சீரியலில் சன் டிவியிலும், விஜய் டிவியில் கிழக்கு வாசல் என்ற சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் வைஷ்ணவி ஆரம்பத்தில் விஜேவாக சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்திருந்த நிலையில் இப்போது சீரியல்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். அதே நேரத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஆக்டிவாக இருந்து அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களையும் வெளியிட்டு வருவார்.

அதில் சீரியலில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையில் எதிர்நீச்சல் ஜனனியும் இவரும் நெருங்கிய தோழி ஆக இருந்து வருகிறார். எதிர்நீச்சல் ஜனனியாக நடிக்கும் மதுமிதாவும், வைஷ்ணவியும் நெருங்கிய தோழிகளாக இருவரும் ஒன்றாக சீரியல்களிலும் அதேபோலவே நடித்து வந்தனர். சீரியலில் போல்டான கேரக்டரில் குணசேகரனை எதிர்த்து பேசும் இவரை இப்போது காணவில்லையே என்று ரசிகர்கள் தேடிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் மணகோலத்தில் இவர் இருப்பதை பார்த்து ரசிகர்கள் பலர் பதறிப் போயிருக்கின்றனர். என்ன ஆச்சு திடீரென்று இப்படி வந்திருக்கிறீர்களே என்று பலர் கேள்வி கேட்க, அது புது வசந்தம் சீரியலில் சூட்டிங் ஸ்பாட் வீடியோ என்பது அந்த சீரியலை பார்க்கும் ரசிகர்களுக்கு மட்டும்தான் தெரிகிறது. அதே நேரத்தில் மணகோலத்தில் கழுத்தில் தாலியோடு இருக்கும் வைஷ்ணவிக்கு ஒரு சிலர் இது உண்மை என்று நினைத்து வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் இவருடைய கணவர் யார் என்றும் கேள்விகள் கேட்டு வருகின்றனர்.
ஏற்கனவே வைஷ்ணவி தன்னுடைய பிறந்தநாள் மற்றும் தன்னுடைய நண்பர்களோடு அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் இப்போது மணகோலத்தில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் மணமேடையில் இருக்கும் போதும் கூட சக நடிகர்களோடு ட்ரெண்டிங் வசனங்களுக்கு ஏற்ப ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதுவும் இப்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் மீண்டும் நீங்கள் எதிர்நீச்சல் சீரியலுக்கு வர வேண்டும் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
சிவகார்த்திகேயனால் 120 கோடி கடன்? தயாரிப்பாளர் கண்ணீர்... "இன்னும் 2 படம் பாக்கி இருக்கு" என உருக்கம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications