சன் டிவியில் புது சீரியல்.. "நெகட்டிவ்”வாக எதிர்நீச்சல் நடிகை.. துணைக்கு பாண்டியன் ஸ்டோர் நடிகையும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் கடந்த ஜூன் 26 ஆம் தேதியிலிருந்து ஒளிபரப்பாகி வரும் புது வசந்தம் சீரியலில் எதிர்நீச்சல் சீரியல் நடிகை வில்லி கேரக்டரில் அறிமுகமாகிறார்.

எதிர்நீச்சல் சீரியலில் "வாசு" கேரக்டரில் ஜனனியின் ஃபிரண்டாக நடித்து வந்த வைஷ்ணவி நாயக் "புது வசந்தம்" சீரியலில் நெகடிவ் கேரக்டரில் நடிக்கிறார்.

அவருக்கு அம்மா கேரக்டரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை நடித்துக் கொண்டிருக்கிறார். அதைப்பற்றி முழு தகவல்களையும் பார்க்கலாம்.

Ethirneechal serial actress Vaishnavi Naik debut in the nagative character of Pudu Vasantham serial

சன் டிவியில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த சீரியலின் முதல் இடத்தில் எதிர்நீச்சல் சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்களின் மத்தியில் அமோகமாக பிரபலம் அடைந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் எதிர்நீச்சலில் வாசு கேரக்டரில் ஜனனிக்கு பெஸ்ட் பிரண்டாக அதிகமான ரசிகர்களை கவர்ந்த வைஷ்ணவி தற்போது புது சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Ethirneechal serial actress Vaishnavi Naik debut in the nagative character of Pudu Vasantham serial

எதிர்நீச்சல் சீரியலில் போல்டான கேரக்டராகவும் அதிகமான முறை குணசேகரனை துணிச்சலாக எதிர்த்து பேசும் கேரக்டராகவும் இருந்து வரும் வைஷ்ணவிக்கு சீரியலில் இப்போது அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லையே என்று ரசிகர்கள் தற்போது அதிகமாக கமெண்ட் செய்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் வைஷ்ணவி நாயக் எதிர்நீச்சல் சீரியல் மட்டுமல்லாமல் விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் கிழக்கு வாசல் சீரியலில் முக்கியமான கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று கூறி இருந்தார். அதற்கு ரசிகர்கள் தொடர்ச்சியாக அவருக்கு வாய்ப்பு வாழ்த்துக்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் இன்று சன் டிவியில் கடந்த ஜூன் 26 ஆம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகி வரும் புது வசந்தம் சீரியலில் வைஷ்ணவி நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கிறார்.

அதுபோல அவருக்கு அம்மா கேரக்டரில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லையின் அம்மாவாக நடிக்கும் நடிகை சாந்தி வில்லியம் இதிலும் வில்லி கேரக்டராக நடிக்கிறார். இந்த நிலையில் தற்போது வெளியான புது வசந்தம் சீரியலின் ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் நம்ம வாசு இங்கேயும் வந்துட்டாங்களே..!? என்று வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள். அதே நேரத்தில் இந்த முறை நெகட்டிவ் கேரக்டரா? என்று கொஞ்சம் பீல் பண்ணியும் வருகிறார்கள். என்ன இருந்தாலும் வாழ்த்துக்கள் மட்டும் குறையவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+