"மஞ்சள் கயிறு” எதிர்நீச்சல் ஆதிரை வெளியிட்ட வீடியோ.. மனசு வலிக்குது ப்ளீஸ்..! ரசிகர்களுக்கு "பதில்”
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடிகை சத்யா தேவராஜன் ஆதிரை கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்த சீரியலில் சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் முடிவடைந்தது.
பல மாதங்களாகவே ஆதிரை உடைய காதலும் அதைத்தொடர்ந்து திருமண பிரச்சனையும் தான் அடுத்தடுத்து வந்து கொண்டிருந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆதிரை கழுத்தில் நடுரோட்டில் வைத்து கரிகாலன் தாலி கட்டி இருக்கிறார்.

இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் சூட்டிங் ஸ்பாட்டில் நடிகை சத்யா தேவராஜன் ஆதிரை கெட்டப்பில் இருந்தபடியே ரீல்ஸ் வீடியோ ஒன்றை தன்னோட இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். அது குறித்து அதிகமான ரசிகர்கள் பீல் பண்ணி கமெண்ட் வெளியிட்டு வருகிறார்கள்.
சன் டிவியில் அதிகமான டிஆர்பி பெரும் சீரியல்களின் வரிசையில் இப்போது எதிர்நீச்சல் சீரியலும் இடம் பிடித்திருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே இந்த சீரியல் மூன்றாவது நான்காவது இடங்களில் இருந்த நிலையில் தற்போது முதல் முறையாக முதல் இடத்தை பிடித்து இருந்தது. அதற்கு காரணம் இந்த சீரியலில் பல மாதங்களாக எதிர்பார்த்து இருந்த ஆதிரையின் திருமணம் தான். அதுவும் திடீர் திருமணமாக யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் நடந்து விட்டது.

ஆதிரை காதலித்த அருணை திருமணம் செய்வாரா? அல்லது அண்ணன் பார்த்து வைத்த கரிகாலனை திருமணம் செய்வாரா? என்ற எதிர்பார்ப்பும் இருவரையில் யாரை திருமணம் செய்தால் கதை எப்படி போகப்போகிறது என்பது பற்றி எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் இருந்த நிலையில் தற்போது ஆதிரை கழுத்தில் கரிகாலன் தாலி கட்டிய பிறகு அதிகமான ரசிகர்கள் இது தவறான முடிவு இப்படி கதை வந்திருக்கவே கூடாது என்றெல்லாம் கூறிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனாலும் இனி ஆதிரை தனக்கு பிடிக்காத திருமணத்திலிருந்து எப்படி வெளியே வந்து தன்னுடைய திறமையை தானாக நிரூபிக்க போகிறார் என்பதுதான் இந்த சீரியலின் கதையாக இருக்கப் போகிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் அனைவருமே ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக மாறிவிட்டனர். அதிலும் ஆதிரை கேரக்டரில் பலருடைய அனுதாபத்தை பெற்று வரும் சத்திய பிரியா ஆரம்பத்தில் பல நெகட்டிவ் கருத்துக்களை பெற்றுக் கொண்டிருந்தார். காரணம் அண்ணிமார்களை தானும் பெண்ணாக இருந்தாலும் அண்ணன்கள் பேச்சைக் கேட்டு அவமானம் செய்யும் ஒரு கேரக்டராக தான் இவர் இருந்தார்.
ஆனால் ஆதிரை காதலுக்காக வீட்டு பெண்கள் எல்லாம் அவருக்கு செய்த உதவியை பார்த்து பின்பு ஆதிரை மனம் மாறி இருந்தார். இந்த நிலையில் மீண்டும் அவர்கள் மீது கோபமாக இருக்கும் நிலையில் நேற்றைய எபிசோட் அவர்கள் மீது தப்பில்லை என்பதே ஆதிரை புரிந்து இருக்கிறார். சீரியல் கதை எப்படி தான் இருந்தாலும் இவர்கள் சீரியலில் சூட்டிங் ஸ்பாட்டில் ஃப்ரீயாக இருக்கும்போது ரீல்ஸ் வீடியோக்களை தவறாமல் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்போது எந்த கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார்களோ அதே மேக்கப்பில் இருப்பதும் பல நேரங்களில் நடக்கத்தான் செய்கிறது.
அந்த மாதிரி தான் தற்போது ஆதிரை கேரக்டரில் நடிக்கும் சத்யா தேவராஜன் "கழுகு" திரைப்படத்தில் இடம்பெற்ற "கிட்ட வந்து நீயும் பேசு" என்ற வரிகளுக்கு ரீல்ஸ் வீடியோ எடுத்து இருக்கிறார். அப்போது சாதாரண புடவையில் இருக்கும ஆதிரை கழுத்தில் கரிகாலன் கட்டிய அதே மஞ்சள் கயிறு இருக்கிறது. அதை பார்த்து பீல் பண்ணிய பல ரசிகர்கள் அந்த தாலியை கழட்டி வைத்துவிட்டு நீங்கள் ரீல்ஸ் எடுத்து இருக்கலாம். அந்த தாலியை பார்க்கும் போது மனசு ரொம்ப வலிக்குது என்று கமெண்ட் கொடுத்திருக்கின்றனர். அதற்கு சத்யா அதாவது ஆதிரை இமோஜியை அனுப்பி ஃபீல் பண்ணி இருக்கிறார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில், நீங்க ரொம்ப பீல் பண்ணாதீங்க அக்கா. நீங்க கோர்ட்டுக்கு போகலாம். சீக்கிரமா கரிகாலனை டைவர்ஸ் பண்ணிடுங்க. அது போல நீங்க படிச்ச படிப்புக்கு சீக்கிரமா வேலை பாருங்க என்றெல்லாம் அதிகமான ரசிகர்கள் இவருக்கு அறிவுரை கூறிக் கொண்டிருக்கின்றனர்.
-
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார்












Click it and Unblock the Notifications