எதிர்நீச்சல் "ஐஸ்வர்யா” யார் தெரியுமா? பல திரைப்படங்களில் நடித்திருக்கிறாரா? அப்பா இந்த பிரபலம் தான்
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஞானம் மற்றும் ரேணுகாவின் மகள் ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ரத்தினம் பற்றி பல தகவல்களை பார்க்கலாம்.
நேற்றைய எபிசோட்டில் குணசேகரனை எதிர்த்து கேள்வி கேட்ட ஐஸ்வர்யாவை பலரும் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் ஐஸ்வர்யா யார் அவருடைய அப்பா மற்றும் ஐஸ்வர்யா எப்படி சீரியலில் அறிமுகமானார் என்பது பற்றி பார்க்கலாம்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் அதிகமான ரசிகர்களால் பரபரப்பாக பேசப்படும் ஒரு சீரியலாக மாறிக்கொண்டிருக்கிறது. ஆதிரையின் திருமணத்திற்கு பிறகு இந்த சீரியலில் வேகம் இன்னும் அதிகமாகி இருக்கிறது. இதனாலே இந்த சீரியலை பலரும் மீண்டும் பாராட்ட தொடங்கி இருக்கின்றனர்.

இந்த நிலையில் ஆதிரையின் திருமணத்திற்கு பிறகு குணசேகரனுக்கு பெரும் அவமானத்தை கொடுத்தது ரேணுகா மற்றும் ஞானத்தின் குழந்தையாக இருக்கும் ஐஸ்வர்யா தான். ஐஸ்வர்யா வயதிற்கு வந்து மூன்று நாட்கள் ஆகியும் வீட்டில் சொல்லாமல் ஸ்கூலுக்கு சென்று இருக்கும் நிலையில் அது குறித்து குணசேகரன் வீட்டு பெண்களை ரொம்பவே திட்டுகிறார்.

அதிலும் ஐஸ்வர்யாவின் அம்மாவான ரேணுகாவை குணசேகரன் திட்டி கொண்டிருக்க அதற்கு ரேணுகா பதிலடி கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் தான் வீட்டில் சொல்லாததற்கு காரணமே நீங்கதான் நாங்க வீட்டில் சொன்னால் மட்டும் என்ன நடந்திட போகுது. தர்ஷினி அக்காவிற்கு நடந்த மாதிரி தான் எனக்கும் சடங்கு சம்பிரதாயம் என்று சொல்லி இந்த கரிகாலன் மாதிரி ஏதாவது ஒரு கிறுக்கனை கூட்டிட்டு வந்து இப்பவே பேசி முடிச்சு சம்பந்தம் பண்ணுவீங்க. அது வேண்டாம் என்று தான் நான் சொல்லல என்று தைரியமாக ஐஸ்வர்யா எதிர்த்து பேசி இருந்தார்.

அதோடு குணசேகரன் இந்த மாதிரி எதிர்த்து பேசுவதற்கு உனக்கு யாரு சொல்லி கொடுத்தா? என்று ஐஸ்வர்யாவிடம் கேட்க, நான் உங்களை பார்த்து தான் பெரியப்பா கத்துக்கிட்டேன். உங்கள பார்த்து யாரிடமும் இந்த மாதிரி நடந்துக்க கூடாதுன்னு நானா கத்துக்கிட்டது தான் என்று தைரியமாக எதிர்த்து பேசி இருந்தார். அதோடு தன்னுடைய அப்பா நடவடிக்கை குறித்து தனக்கு ஏற்படும் கஷ்டங்கள் குறித்தும் உருக்கமாக பேசி இருந்தார். இதனால் அதிகமானோர் ஐஸ்வர்யாவை பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா இந்த சீரியலில் மட்டுமல்லாமல் பல சீரியல்களிலும், திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அது பற்றி விரிவாக்க பார்க்கலாம். ஐஸ்வர்யாவின் சொந்த பெயர் ஐஸ்வர்யா ரத்தினம் தானாம். இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்தாலும் இவர் பல ஷார்ட் பிலிம், விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார். அதிலும் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான "தானா சேர்ந்த கூட்டம்" திரைப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணனின் மகளாக இவர் நடித்திருப்பார்.

அதுபோல ஆர்கே பாலாஜி நடிப்பில் வெளியான "எல்கேஜி" திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். அதோடு தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். "நேனு ராஜா நேனு மந்திரி" என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அதுபோல நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான "கஜினிகாந்த்" என்ற திரைப்படத்திலும் இவர் நடித்திருக்கிறார்.

அதுபோல பல பிரபலங்களோடும் விளம்பரங்களில் நடிக்கும் போதும் எடுத்த புகைப்படங்களும் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. அதோடு சில தினங்களுக்கு முன்பு நடிகரும் அரசியல் பிரமுகரும் ஆக இருக்கும் ரோஜாவை சந்தித்து அவரோடும் சில புகைப்படங்களை எடுத்து இருக்கிறார். அதுவும் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
-
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications