எதிர்நீச்சலில் ரசிகர்கள் எதிர்பார்த்தது நடந்தது.. கரிகாலனால் குணசேகரனுக்கு ஆப்பு.. நந்தினி செம பஞ்ச்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலின் ஏப்ரல் 4ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் தர்ஷினிக்கு கல்யாணம் பண்ணுவதற்காக குணசேகரன் கோயிலுக்குப் போகும்போது கரிகாலன் வந்து தடுத்து பிரச்சினை செய்கிறார்.
அதே நேரத்தில் காணாமல் போன ஜனனி மற்றும் அவருடைய குடும்பத்தை கொண்டுட்டு வருவதற்காக கதிர் செய்து வைத்திருக்கும் விஷயமும் சக்திக்கு தெரிய வந்திருக்கிறது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் சமீப காலமாகவே போலீஸ் ஸ்டேஷன் காட்சிகளும், கடத்தல் காட்சிகளும் தான் ரிப்பீட்டு மோடில் வந்து கொண்டே இருக்கிறது. எதிர்நீச்சல் பெண்கள் எப்போதும் சுயமாக நீச்சல் அடித்து தங்களுடைய பிரச்சனைகளில் இருந்து வெளியேறுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு பிரச்சனைகள் மேல் பிரச்சனைகள் தான் தினமும் வந்து கொண்டிருக்கிறது.

ஏற்கனவே தர்ஷினி காணாமல் போன பிரச்சனை இரண்டு மூன்று மாதங்களாக இழுத்துக் கொண்டு இருந்தது. அதற்கு பிறகு தர்ஷினி வீட்டிற்கு வந்து இருந்தாலும் சுயநினைவு இல்லாமல் இருக்கிறார். அதே நேரத்தில் தர்ஷினிக்கு மீண்டும் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று குணசேகரன் முடிவெடுத்திருக்கிறார். ஆரம்பத்தில் தர்ஷினிக்கு கரிகாலனுடன் கல்யாணம் என்று சத்தியம் பண்ணி கொடுத்த குணசேகரன் இப்போது ஜனனியின் அத்தை உமையாள் பையன் உடன் கல்யாணம் என்று சத்தியம் பண்ணி கொடுத்து இருக்கிறார்.

இப்படியாக சீரியலில் அரைச்ச மாவையே மீண்டும் மீண்டும் அரைத்துக் கொண்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிருதியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆரம்பத்தில் இந்த சீரியலில் அதிகமான காமெடி காட்சிகளும் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் இப்போது அது இல்லை என்பது ரசிகர்களின் வருத்தமாக இருக்கிறது. இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி கதை கொஞ்சம் பயணிக்க தொடங்கி இருக்கிறது.

தர்ஷினியை குணசேகரன் காரில் கோயிலுக்கு கூட்டிட்டு போகும் போது பைக்கை ஒட்டியபடி வாயில் அரிவாளோடு கரிகாலன் வந்து அந்த காரை வழி மறுக்கிறார். அப்போது காருக்குள் இருக்கும் தர்ஷினி உமையாள் மகளிடம்," பார்த்து நீ வெளியே போகிறாத உன் கழுத்து காலியா இருக்குன்னு உனக்கும் தாலி கட்டிடுவான்... இவன் அப்படிப்பட்ட லூசு பையன்" என்று கவுண்டர் கொடுக்கிறார். அதே நேரத்தில் குணசேகரன் அந்த லூசு பையன் மேல காரை விட்டு ஏத்து என்று சொல்கிறார்.
ஆனால் கரிகாலன் எல்லாவற்றுக்கும் துணிந்துதான் கார் முன்பு நின்று கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் உமையாளின் மகனை கடத்தி வைத்து இருக்கும் கதிர் ஜனனி மற்றும் அவருடைய குடும்பத்தை கண்டுபிடிப்பதற்காக உமையாள் மகனின் வீடியோவை ராமசாமி மற்றும் கிருஷ்ணசாமிக்கு அனுப்ப, அவர்கள் பதட்டத்தில் இருக்கின்றனர். ஒரு வழியாக இந்த கடத்தல் நாடகம் முடிவுக்கு வந்து மீண்டும் சீரியல் பழையபடி ஒரு விறுவிறுப்பாக போக வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
பல நாட்களுக்கு பிறகு இன்று தான் இந்த சீரியலில் காமெடி வந்திருக்கிறது. ஆரம்பத்தில் நந்தினி மற்றும் ரேணுகாவின் காமெடிக்கு அதிகமான ரசிகர்கள் இருந்தனர். என்னதான் கரிகாலன் வில்லனாக இருந்தாலும் அவருடைய கவுண்டரும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கப்பட்டது. ஆனால் இப்போது அதற்கு எதிர்மாறாக மாறி இருக்கிறது. இனியாவது இந்த சீரியல் பழையபடி மாறுமா? என்பது ரசிகர்களின எதிர்பார்ப்பு... என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications