ஆஹா வீரபாகுவின் அக்காவ ஒருவழியா கண்டுபிடிச்சாச்சா.. இவங்களை வச்சிதான் பேக்கரி வாங்கினாரா? கன்றாவி!
சென்னை: ஆஹா வீரபாகுவின் அக்கா இவங்கதானா, ஒரு வழியா கண்டுபிடிச்சாச்சே! இவங்கள வச்சிதானா பேக்கரியை விலைக்கு வாங்கினாரா... ஐயோ ஐயோ
நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான படம் கிரி. இந்த படத்தில் பேக்கரி ஓனராக வடிவேல் நடித்திருப்பார். வடிவேலுவிடம் அர்ஜுன் வேலைக்கு சேர்வார். அப்போது அவர்களுக்குள் இடம் பெறும் காமெடி காட்சிகள் ஹிட்டடித்தன.

இந்த படத்தில் வடிவேலை ஆளாளுக்கு ரூம் போட்டு அடிப்பார்கள். அந்த காட்சிகளை ஆர்த்தியிடம் வடிவேலு விவரிக்கும் விதம் சிரிப்பை வரவழைக்கும். மாறி மாறி அடிச்சாங்க என சொல்லிவிட்டு அதில் ஒருத்தன், இவன் எவ்ளோ அடிச்சாலும் தாங்குறான், ரொம்ப நல்லவனு சொல்லிட்டாம்மா என்பார்.
இது அல்டிமேட் காமெடியாக இருந்தது. அது போல் ரீமா சென்னுக்கு வடிவேல் தாலி கட்டும் காட்சிகளும் அருமையாக இருக்கும். இதை விட அக்காவை வைத்து பேக்கரி வாங்கிய காமெடி இப்போது பார்த்தாலும் சிரிப்பை வரவழைக்கும். அர்ஜுனை அழைத்து வடிவேலு கூறுகையில் கணபதி அய்யர் , கணபதி அய்யர்னு அட ஒரு ஆள்தான்பா.
அவனிடம் போய் சட்டையை பிடிச்சி எங்க அக்காவ வச்சிருக்கியாடான்னு சட்டையை பிடிச்சி கேள்வி கேட்டேன். அப்போ அவன் சொன்னான்,உங்கள் அக்காவை நான் வச்சிக்கிறேன், என் பேக்கரியை நீ வச்சிக்கோன்னு சொன்னான். அதுக்கு நீ என்ன சொன்னே என அர்ஜுன் கேட்பார். அதற்கு வடிவேல், அந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அதனால் ஓகே சொல்லிட்டேன் என்பார்.
அதே வேளையில் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாதே என்றும் அர்ஜுனிடம் கூறாதே என வடிவேல் கூறுவார்கள். ஆனால் அர்ஜுன் அனைவரிடமும் பேக்கரி வாங்கிய கதையை சொல்லிவிடுவார். இந்த ஆவ்சம் காமெடி பார்க்க பார்க்க திகட்டாத நிலையில் வீரபாகு அதாவது வடிவேலுவின் அக்காவை யாரென்றே காட்ட மாட்டார்கள்.
ஆனால் தற்போது வீரபாகுவின் அக்காவை கண்டுபிடித்துவிட்டார்கள். ஆம்! சன் டிவியில் இரவு நேரத்தில் ஒளிபரப்பாகும் சீரியல் எதிர் நீச்சல் . இந்த சீரியலில் ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி ஆகிய 3 மருமகள்கள், இவர்களது கணவர்களும் இவர்கள் படித்திருந்தாலும் சிறிதும் மரியாதை கொடுக்காமல் அவர்களை மிக மோசமாக நடத்துவார்கள்.

4ஆவது தம்பி சக்தியின் மனைவி ஈஸ்வரி இதை தட்டிக் கேட்பார். அப்போது சில பிரச்சினைகள் வரும். பிறகு சக்தியும் ஜனனியும் பிரிவர். பிறகு அப்பத்தாவின் முயற்சியால் ஒன்று சேர்வர். இந்த நிலையில் ஆதி குணசேகரன் தனது தங்கை ஆதிரைக்கு பிடிக்காத வரனை பார்ப்பார். ஆனால் ஆதிரையோ அருணை விரும்புவார். அவருடன் ஆதிரையை சேர்த்து வைக்க 4 அண்ணிகளும் போராடுவார்கள்.
இந்த சீரியல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. இந்த சீரியலில் வரும் நடிகர், நடிகைகள் அவ்வப்போது ரீல்ஸ், இன்ஸ்டா போஸ்ட் என ஆக்டிவ்வாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் ரேணுகா, நந்தினி, சக்தி ஆகிய மூவரும் சேர்ந்து கிரி படத்தில் வரும் அக்காவை வச்சி பேக்கரியை விலைக்கு வாங்கிய கதையை சக்தி, ரேணுகாவிடம் கூறுவார். அதாவது நந்தினிதான் வீரபாகுவின் அக்கா. இதை பார்த்த நெட்டிசன்கள் ஒரு வழியாக வீரபாகுவின் அக்காவை கண்டுபிடிச்சாச்சா என கேட்டுள்ளார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications