மரணத்திற்கு முந்தைய நாள் இரவில் விளம்பர சூட்டினிலே அப்படி நடந்து இருக்கு.. கண்ணீரோடு அப்பத்தா
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் ஆக நடித்து வந்த நடிகர் மாரிமுத்து நேற்று சற்றும் எதிர்பார்க்காத வகையில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்திருந்தார்.
இந்த அதிர்ச்சியில் இருந்து ரசிகர்களும், நடிகர்களும், அவருடைய குடும்பத்தினரும் மீள முடியாமல் இருக்கின்றனர். இந்த நிலையில் மாரிமுத்து மரணம் அடைவதற்கு முந்திய நாள் இரவு என்ன நடந்தது என்பது பற்றி எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தாவாக நடிக்கும் நடிகை பாம்பே ஞானம் பேசியிருக்கிறார்.

முந்தைய நாள் இரவில் நடிகர் மாரிமுத்து விளம்பர சூட்டிங்கில் கலந்து கொண்டு இருந்ததும், அப்போது அங்கு நடந்து கொண்டது பற்றியும் அவரோடு கூட இருந்தவர்கள் சொன்னதாக பாம்பே ஞானம் பேசி இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
நடிகர் மாரிமுத்து எத்தனையோ திரைப்படங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் வில்லனாகவும் நடித்து வந்தார். ஆனால் அப்போதெல்லாம் அவருக்கு கிடைக்காத பெயரும் புகழும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடிக்க தொடங்கிய பிறகு கிடைத்தது. இந்த சீரியலில் குணசேகரன் கேரக்டருக்காக தன்னுடைய மொத்த உழைப்பையும் மாரிமுத்து போட்டு இருக்கிறார் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு குணசேகரன் கேரக்டரில் நடிகர் மாரிமுத்து வாழ்ந்து வந்தார்.
இந்த சீரியலின் இயக்குனர் கூட பேட்டிகளில் கூறியிருக்கிறார். மாரிமுத்து நான் சொன்ன டயலாக்கை பேசுவதில்லை. அவராகவே அந்த சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி டயலாக் பேசி விடுவார், அதுதான் அவருடைய ஸ்பெஷல். அதனால்தான் அவருடைய கேரக்டர் ரசிகர்களுக்கு இந்த அளவிற்கு பிடித்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். அதுபோல மாரிமுத்துவும் பல பேட்டிகளில் இதை கூறியிருக்கிறார்.
எதிர்நீச்சல் சீரியலில் 500 எபிசோடுகளாக குணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்து நேற்று சற்றும் எதிர்பார்க்காத வகையில் மரணமடைந்து இருந்தார். இது ரசிகர்களை மட்டுமல்லாமல் அவரோடு சீரியலில் நடித்து வந்தவர்களையும் பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது. அந்த வகையில் குணசேகரனுக்கு பாட்டியாக அப்பத்தா கேரக்டரில் நடித்து வரும் நடிகை பாம்பை ஞானம் நடிகர் மாரிமுத்து இறந்த போதும் அதற்கு முந்தைய நாளும் என்ன நடந்தது என்பது பற்றி பேசியிருக்கிறார்.
அதில் நேற்று காலையில் எனக்கு ஹரிபிரியா தான் போன் செய்தார். போன் செய்ததும், எதுவுமே பேசாமல் ஹரிபிரியா அழுது கொண்டு இருந்தார். அப்போது கூட நான் சூட்டிங்கில் இருக்கும் போது தெரியாமல் கைப்பட்டு இங்கே போன் வந்திருக்கும் போல என்று நினைத்துக் கொஞ்ச நேரம் வைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் ஹரிபிரியா ரொம்ப நேரம் அழுதுட்டே இருந்ததுனால என்ன ஆச்சு என்று நான் கேட்கும் போது மாரிமுத்து என்று சொல்லி அழுதார். மாரிமுத்து என்றதும் எனக்கு டக்கென்று நியாபகம் வரவில்லை.
காரணம் நாங்கள் சீரியலில் அவரை குணசேகரன் என்று சொல்லியே கூப்பிட்டு பழகி விட்டோம். அவரை எப்போதுமே குணசேகரன் என்று தான் நாங்கள் சொல்லி இருக்கிறோம். அந்த வகையில் எனக்கு புரியவில்லை. பிறகு ஹரிப்பிரியாவே மாரிமுத்து சார் போயிட்டாரு என்று சொன்னார். நானும் சீரியல் விட்டு போயிட்டாரா? என்று கேட்டேன். இல்லை என்று பிறகு நடந்ததை சொன்னாள். நான் கொஞ்சம் கூட நம்பவே இல்லை. காரணம் சில நாட்களுக்கு முன்பு தானே அவர் இறந்து போய்விட்டதாக youtube-ல் வீடியோ வந்தது.
அந்த மாதிரி ஏதாவது இருக்குமோ என்று கூட நான் நினைத்தேன் ஆனால் பிறகு மருத்துவமனையில் நடந்ததை சொன்ன பிறகுதான் எனக்கு புரிந்தது. ஆனால் என்னால் நம்பவே முடியவில்லை. அதுபோல மாரிமுத்து முந்தைய நாள் இரவில் விளம்பர சூட்டிங்கில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது டான்ஸ் அவருக்கு இருந்ததாம். அதில் நிறைய டேக் எடுத்திருக்கிறார். இதுவரைக்கும் அப்படி அவர் டான்ஸில் டேக் எடுத்தது கிடையாதாம். அது பற்றி நேற்றுதான் கொரியாகிராபர் சொன்னார்.
இதுவரைக்கும் சார் இப்படி செய்ததில்லை. நேற்றைக்கு இரவே டான்ஸ் ஆடும் போது நிறைய டேக் போச்சு, நான் என்ன ஆச்சுன்னு சாரிடம் கேட்டேன். அதற்கு அவர் ஒன்றும் இல்லன்னு சொல்லி சமாளிச்சுட்டாரு என்று கோரியோகிராபர் சொன்னதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏற்கனவே மாரிமுத்துவிற்கு இதய ஆபரேஷன் செய்திருப்பது கூட நேற்றுதான் எனக்கு தெரியும்.
ஆனால் எங்களிடம் எப்போதும் உடம்பை பார்த்துக் கொள்ள வேண்டும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று மாரிமுத்து சொல்லிக் கொண்டே இருப்பார். ஆனால் அவர் அதை சரியாக செய்யாமல் விட்டுவிட்டாரோ என்று எனக்குத் தோன்றுகிறது என்று பட்டம்மாளாக நடிக்கும் நடிகை பாம்பே ஞானம் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications