மாரிமுத்துக்கு நிகர் அவர்தான்.. சீரியல் தரப்பில் எடுக்கப்பட்ட திடீர் முடிவு.. மொத்தமாக மாறிப்போன கதை
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் ஆக நடித்து வந்த நடிகர் மாரிமுத்து சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக காலமானார்.
அவருடைய மறைவுக்கு பிறகு அவர் நடித்த கேரக்டரில் இனி யார் நடிக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் இருந்தது. அதே நேரத்தில் பல நடிகர்களின் பெயர் பரிசீலனையில் இருந்தது.

இந்த நிலையில் சீரியல் தரப்பில் இருந்து அதிரடியான முடிவுகளை எடுத்து இருக்கின்றனர். அதாவது குணசேகரனின் கேரக்டரில் இனி யாரும் இல்லை என்பதை நேற்றைய எபிசோட்டில் தெளிவுபடுத்தி இருக்கின்றனர்.
அந்த நிலையில் மாரிமுத்து நடித்து வந்த குணசேகரன் கேரக்டரில் அவரை தவிர வேறு யாராலும் நடிக்கவே முடியாது. இனி ஒரு நடிகர் நடித்தாலும் அது ரசிகர்களுக்கு பிடிக்குமா? என்று சொல்ல முடியாது. ஏனென்றால் மாரிமுத்து குணசேகரன் கேரக்டரில் நடிக்கவில்லை வாழ்ந்திருந்தார். தன்னுடைய தனித்துவமான வசன பேச்சு திறமை, உடல் மொழி போன்றவற்றின் காரணமாக குணசேகரன் கேரக்டர் ரசிகர்களின் மனதில் பதிய வைத்திருந்தார்.
இந்த நிலையில் மாரிமுத்து இனி இல்லை என்ற வருத்தத்தில் ரசிகர்கள் இருக்கும் நிலையில் அவருக்கு பதிலாக யாரை நடிக்க வைக்கலாம் என்று பெரும் குழப்பத்தில் சீரியல் டீம் இருந்து வந்தனர். அதனாலேயே இத்தனை நாட்களாக அவர் இல்லாமல் கதையை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் இனி என்ன முடிவு எடுக்க என்ற ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சீரியல் அணியினர் இருந்து வந்தனர்.
அதனாலேயே ஒரு சில நாட்களாக ஏற்கனவே மாரிமுத்து நடித்த காட்சிகளை இப்போது உள்ள எபிசோடுகளுக்கு தகுந்தது போல எடிட் செய்து வைத்து வந்தனர். இந்த நிலையில் திடீரென்று அவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தன்னுடைய சொத்துகளை தன்னுடைய தம்பி, அம்மா பெயருக்கு எழுதி வைத்துவிட்டு சென்று இருக்கிறார். அதனால் அவர் வீட்டை விட்டு வெளியே போய் சில தினங்களுக்கு பிறகு மீண்டும் குணசேகரன் ஆக புதிய நடிகர் வருவார் என்று எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருந்தது.

ஆனால் நேற்று எபிசோடில் ஓலை சுவடிகளை விசாலாட்சி பார்க்கும் போது அவருக்கு ஆதி குணசேகரன் இரண்டாவது மகன் என்று ஜோதிடர் கூறியிருக்கிறார். இதனால் இனி வரும் புது நடிகர் குணசேகரனுக்கு அண்ணனாக வந்து கதையை தொடர போகிறார் என்று தெரிகிறது. சீரியல் தரப்பிலிருந்து யாராலும் குணசேகரனாக மாரிமுத்துவை தவிர நடிக்க முடியாது என்பதை புரிந்து கொண்டு அவருக்கு அண்ணனாக புதியதாக நடிக்க வர இருக்கும் கேரக்டரை இறக்கி அவரை வைத்து இனி கதையை கொண்டு போக இருக்கின்றனர்.
ஆனால் இனி வரும் புதிய கேரக்டர் அதாவது குணசேகரனின் அண்ணன் நல்லவரா? அல்லது குணசேகரனை விடவும் கெட்டவரா? என்ன மாதிரி மனநிலையில் வீட்டிற்குள் வருவார். இனி இந்த பிரச்சனை சொத்து பிரச்சனையை அவர் கையில் எடுக்கும் போது என்ன மாதிரி திருப்பங்கள் வரப்போகிறது என்று பெரிய அளவில் சஸ்பென்ஸ் வைத்து கதையை நகர்த்தத் தொடங்கி இருக்கின்றனர். இது ரசிகர்களின் மத்தியில் வரவேற்பு பெற்று இருக்கிறது.












Click it and Unblock the Notifications