நடிகர் மாரிமுத்துவை காப்பியடித்து பிரபல சீரியலில் நடக்கும் கூத்து.. நாசர் படத்தையும் விட்டு வைக்கல?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்துவின் கேரக்டரை பிரதிபலிக்கும் வகையில் விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில் கதை அமைப்பு வைத்திருக்கின்றனர்.
இது இணையத்தில் பலரால் கலாய்க்கப்பட்டு வருகிறது. வில்லன் நடிகராக பல திரைப்படங்களில் மிரட்டி கொண்டிருந்த நடிகர் அஜய் ரத்தினம் பல வருடங்களுக்குப் பிறகு இந்த சீரியலில் அறிமுகமாகி இருக்கிறார். அதே நேரத்தில் அங்கு நடக்கும் நிகழ்வுகள் குறித்து பார்க்கலாம்.

அந்த வகையில் தற்போது சமீப காலமாகவே சின்னத்திரையில் அதிகமான ரசிகர்களால் பாராட்டப்படும் சீரியலாக எதிர்நீச்சல் சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களின் கேரக்டர் ரசிகர்களின் மத்தியில் அதிக அளவில் பிரபலமடைந்திருக்கிறது.
இந்த சீரியலில் ஒரு சில காட்சிகளில் வந்த நடிகர்கள் கூட தற்போது ரசிகர்களுக்கு பிரபலமாக இருக்கின்றனர். அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த நடிகர் மாரிமுத்துவை யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. அவர் சமீபத்தில் மாரடைப்பால் காலமானார். அவருடைய நினைப்பால் அவருடைய ரசிகர்கள் இப்போதும் அவரைப்பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அவர் இறப்பிற்கு பிறகு சீரியலின் கதை வேகம் குறைந்து இருப்பதாக அதிகமானோர் கருத்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் மாரிமுத்து உருவாக்கி பிரபலமாகிய குணசேகரன் கேரக்டரை காப்பி அடித்து இப்போது விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வில்லன் நடிகர் நடித்துக் கொண்டிருக்கிறார். அதாவது பாண்டியன் ஸ்டோர் சீரியல் கடந்த வாரத்தோடு முடிவடைந்து இருந்த நிலையில் இந்த வார திங்கள் கிழமையில் இருந்து சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற வார்த்தையை மையமாகக் கொண்டு இந்த சீரியலின் கதை தொடங்கப்பட்டிருக்கிறது. கடந்த சீசனில் மூர்த்தியாக நடித்த ஸ்டாலின் இந்த சீசனில் பாண்டியன் ஆக நடித்துக் கொண்டிருக்கிறார். பாண்டியனின் மனைவி நிரோஷாவின் அண்ணன் குடும்பத்திற்கும் பாண்டியன் குடும்பத்திற்கும் ஏற்பட்ட சண்டை மோதல்கள் பற்றி தான் இந்த சீரியல் கதை பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் மூர்த்தி கேரக்டரில் கடந்த சீசனில் அமைதியின் இருந்த ஸ்டாலின் இந்த சீசனில் பாண்டியனாக மிரட்டி கொண்டிருக்கிறார். அதிலும் தன்னுடைய மகன்களை பாடாய்ப்படுத்தி எடுத்துக் கொண்டிருக்கிறார். கடந்த சீசனில் ஆனந்தம் திரைப்படத்தை காப்பி அடித்து கதை நகர்ந்து வந்தது. இந்த சீசனில் எம்மகன் திரைப்படத்தை காப்பி அடித்து கதை நகருகிறது.
அந்த வகையில் சீரியல் தொடங்கி ஒரு சில நாட்கள் தான் ஆகிறது. இதில் நிரோஷாவின் அண்ணன் கேரக்டரில் நடிகர் அஜய் ரத்தினம் பல வருடங்களுக்குப் பிறகு சின்னத்திரைக்கு வந்திருக்கிறார். அவர் எதிர்நீச்சல் குணசேகரனை போன்று வெள்ளை வேஷ்டி சட்டையில் நெற்றியில் மஞ்சள் மற்றும் திருநீரோடு வலம் வந்து கொண்டிருக்கிறார். சில காட்சிகளில் அவர் மஞ்சள் மட்டும் வைத்துக் கொண்டு இருக்கிறார்.

குணசேகரன் எப்போதும் குங்குமமும் திருநீறும் வைத்திருப்பார் .இப்போது இவர் மஞ்சளும் திருநீரும் வைத்திருப்பதால் ரசிகர்கள் இது என்ன எதிர்நீச்சல் சீரியலுக்கு போட்டியாகவா இப்படி செய்றாங்க? என்று கலாய்த்து கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் சீரியலில் அதிகமான நடிகர்கள் இருப்பதால் மக்கள் மத்தியில் அதிகமாக கவர தொடங்கி இருக்கிறது. ஆனாலும் இனி போக போக கதை எப்படி போகப் போகிறது என்று பார்ப்போம்.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
சிவகார்த்திகேயனால் 120 கோடி கடன்? தயாரிப்பாளர் கண்ணீர்... "இன்னும் 2 படம் பாக்கி இருக்கு" என உருக்கம்! -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் படிக்கட்டில் அந்த சத்தம்! யாருமே கவனிக்காத நடிகர் திலகத்தின் கை ரகசியம் -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications