எதிர்நீச்சலில் அறிமுகமாகும் புது நடிகை..மாறும் கதை..குணசேகரன் பற்றிய ரகசியத்தை உடைத்து விட்டாரே..!
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் விஜே அபிநயா அறிமுகமாகிறார்.
குணசேகரனோடு அபிநயா எடுத்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
குணசேகரன் பற்றிய பல ரகசியங்களை அந்த வீடியோவில் வெளிச்சம் போட்டு அபிநயா கூறி இருக்கிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியில் இருக்கிறது. ஏற்கனவே மருத்துவமனையில் இருக்கும் அப்பத்தா கண் முழித்து இனி என்னவெல்லாம் பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் புதியதாக விஜே அபிநயா அறிமுகம் ஆகிறார்.
விஜே அபிநயா மக்கள் தொலைக்காட்சியில் நியூஸ் ரீடராக இருந்து வருகிறார். சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கூட ஒரு சீனில் செய்தியாளராக அறிமுகம் ஆகி இருந்தார். இந்த நிலையில் தற்போது இவர் எதிர்நீச்சல் சீரியல் அணியோடு எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அதிலும் குறிப்பாக குணசேகரனோடு எடுத்த ரீல்ஸ் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மருத்துவமனையில் இருக்கும் அப்பத்தாவை பார்த்துக் கொள்ளும் நர்சாக விஜே அபிநயா அறிமுகமாகி இருக்கிறார். அதே நேரத்தில் மருத்துவமனைக்கு வந்த குணசேகரனை உள்ளே விடாமல் ஜனனி தடுத்து இருக்கும் நிலையில் தற்போது குணசேகரன் ஹாயாக உட்கார்ந்து டீயும் பண்ணும் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை வீடியோ எடுத்த அபிநயா இங்க பாருங்க நம்ம குணசேகரன் டீயில் பன்னை முக்கி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். உங்களுக்கு யாருக்காவது இந்த மாதிரி பழக்கம் இருக்கிறதா என்று கேள்வி கேட்டிருக்கிறார்.
அதற்கு குணசேகரன் நான் டைரக்டராக இருக்கும்போது பல நேரங்களில் சாப்பாட வழி இல்லாமல் இருக்கும்போது இப்படி டீயும் பன்னும் சாப்பிட்டு வந்திருக்கிறேன்.. அந்த பழக்கம் இப்போதும் எனக்கு இருக்கிறது. இதே போல உங்களுக்கு யாருக்காவத டீயும் பன்னும் சாப்பிடும் பழக்கம் இருக்கிறதா என்று கேள்வி கேட்டு இருக்கிறார்
ஏற்கனவே அப்பத்தா ஜீவானந்தம் என்ற பெயரை கூறியிருக்கும் நிலையில், யார் அந்த ஜீவானந்தம் என்று எதிர்பார்ப்பு அனைவர் மனதிலும் இருக்கும்போது இப்போது புதியதாக நடிகை அபிநயா அறிமுகம் ஆகி இருக்கிறார். இதனால் கதை இனி எப்படி மாறப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. ஏற்கனவே ஜீவானந்தமாக இயக்குனர் திருச்செல்வம் அறிமுகம் ஆவாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது.
அதே நேரத்தில் புதியதாக நர்சாக வந்திருக்கும் அபிநயாவால் இனி என்னவெல்லாம் பிரச்சனை வரப்போகிறது. ஒருவேளை குணசேகரன் உடன் இவர் வீடியோ வெளியிட்டு இருப்பதால் குணசேகரனுக்கு சாதகமாக அப்பத்தாவின் உடல்நிலையில் ஏதாவது பிரச்சனை செய்ய இருக்கிறாரா? அல்லது அப்பத்தாவை காப்பாற்றுவதற்காக இவர் வந்திருக்கிறாரா? என்றெல்லாம் சமூக வலைதளத்தில் கருத்துக்கள் குவிந்து வருகிறது.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications