எதிர்நீச்சல்: ஜனனி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த நடிகையா? அப்புறம் ஏன் நடிக்கவில்லை?
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கேரக்டரில் முதலில் நடிக்கவிருந்த நடிகை யார் தெரியுமா. அவர் சில காரணங்களுக்காக நடிக்க முடியாமல் போனதால்தான் மதுமிதா தேர்வு செய்யப்பட்டாராம்.
எதிர்நீச்சல் சீரியல் சன்டிவியில் ஹிட்டான சீரியலாகும். கோலங்கள் சீரியலுக்கு பிறகு திருச்செல்வம் இயக்கியுள்ள இந்த தொடர் மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளது.
ஆணாதிக்கம் உள்ள குடும்பத்தில் மருமகள்களாக சென்றவர்கள் எப்படி தங்கள் உரிமையை பெறுகிறார்கள் என்பதை தொடர் காட்டி வருகிறது. இந்த நிலையில் 4ஆவதாக வந்த ஜனனி என்ற மருமகள் அந்த வீட்டு ஆண்களின் கொட்டத்தை அடக்க போராடுகிறார்.

அண்மையில் ஆதிரைக்கு பிடிக்காத கரிகாலனை ஆதி குணசேகரன் திருமணம் செய்துவைப்பது பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. டிஆர்பி ரேட்டிங்கில் நம்பர் 1 இடத்தில் உள்ளது எதிர்நீச்சல். இந்த சீரியலில் நடித்து வந்த ஆதிரை தனது அண்ணன்களுடன் சேர்ந்து கொண்டு அண்ணிகளை வாய்க்கு வந்தபடி பேசி வந்தார்.
ஆனால் தனக்கு பிடிக்காத கரிகாலனை திருமணம் செய்து வைக்க அண்ணன் துடிப்பதற்கு அண்ணிகள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்பதை அறிந்தவுடன் ஆதிரையும் அண்ணிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். சாலையில் வைத்து ஆதிரைக்கு கரிகாலன் தாலி கட்டிவிட்டார். இதனால் இனி ஆதிரை எப்படி கரிகாலனுடன் வாழ போகிறார் என்பதுதான் கதையின நகர்வாக இருக்கும் என தெரிகிறது.
இந்த நிலையில் ரீல்ஸில் ஆதிரை கலக்கி வருகிறார். அதில் புடவை தாலி அணிந்து கொண்டு கழுகு படத்தில் வரும் கிட்ட வந்து நீயும் பேசு என்ற பாடல் வரிகளுக்கு ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார். அதில் பார்க்கும் ரசிகர்கள், அக்கா அந்த தாலியை பார்த்தாலே வயிற்றெரிச்சலாக உள்ளது. தயவு செய்து தாலியை கழற்றி வைத்துவிட்டு ரீல்ஸ் போடுங்கள்.
விரைவில் கோர்ட்டுக்கு போய் கரிகாலனை விவாகரத்து செய்து விடுங்கள் என ஐடியா கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் இரு நடிகைகள் என்ட்ரி கொடுப்பது போல் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் எதிர்நீச்சல் இருப்பதால் அதற்கான விழாவில் இந்த போட்டோ ஷூட் நடத்தப்பட்டதா என தெரியவில்லை.
அந்த சீரியலில் ரேணுகாவின் மகளாக வரும் சிறுமி தேவயானியுடனும் வடிவுக்கரசியுடனும் போட்டோ எடுத்துள்ளார். இது வைரலாகி வருகிறது. எனவே இவர்கள் இருவரும் சீரியலில் என்ட்ரி கொடுக்கிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி கொடுத்தால் கதை விறுவிறுப்பாக போகும் என்கிறார்கள். மேலும் ஆதிரையை தேவயானி, கரிகாலனிடம் இருந்து காப்பாற்றும் கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்கிறார்கள். அப்படி செய்தால் ஜனனிக்கு ஸ்கோப் இல்லாமல் போய்விடும் என்றும் ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த சீரியலில் ஜனனி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை மதுமிதாவுக்கு முன்பு இயக்குநர் திருச்செல்வத்தின் சாய்ஸ் வேறு ஒரு நடிகையாக இருந்ததாம். அவர் யார் தெரியுமா. ஜீ தமிழ் சீரியலில் மாரி சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் நடிகை ஆஷிகாதான். இவர் சில காரணங்களுக்காக நடிக்க முடியாமல் போனதை அடுத்து மதுமிதா கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications