எதிர்நீச்சல் சாதனை.. நியூயார்க்கில் நடந்தது தெரியுமா..!? மாஸ் பண்ணிட்டாங்களே.. இதை பாருங்க
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கும் நிலையில் தற்போது நாடு தாண்டி நாடு இந்த சீரியலுடைய ஃபீவர் பிரதிபலிக்கிறது.
இதுவரைக்கும் இல்லாத வகையில் சின்ன திரையில் முதல்முறையாக முஸ்லிம் நடிகை ஹிஜாப் அணிந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இதுவே சின்னத்திரை வரலாற்றில் முதல் முறையாக இருக்கிறது.

இந்த நிலையில் நியூயார்க் வீதியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின் கிளிப்சுகளில் குறித்து அந்த சீரியலில் நடிக்கும் நடிகை ஒருவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதனால் தான் இதுவரைக்கும் இல்லாத வகையில் கடந்த வாரம் இரண்டாவது இடத்தை பிடித்திருந்த எதிர்நீச்சல் சீரியல் அதிக அளவில் டி ஆர் பி பிடித்திருந்தது. இந்த நிலையில் இந்த சீரியல் கிராமப்புறங்களை விட நகரப்புறங்களில் அதிகமான டிஆர்பி பெற்று வருகிறது.
அதே நேரத்தில் இந்த சீரியல் விரைவில் கிராமப்புறங்களில் அதிகமாக டிஆர்பியை பெற்றுவிடும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. எதிர்நீச்சல் சீரியலை பல வருடங்கள் கழித்து திருச்செல்வம் இயக்கி இருக்கிறார். இந்த சீரியலை இவர்தான் இயக்குகிறார் என்ற தகவல் தெரிந்ததுமே அதிகமான ரசிகர்கள் சீரியலுக்காக காத்திருக்க தொடங்கியிருந்தனர். தற்போது அவர்களுடைய எதிர்பார்ப்பு வீண் போகாமல் கதை வேக வேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறது.
எதிர்நீச்சல் சீரியலில் இருக்கும் யதார்த்தமும் விறுவிறுப்பும் தான் இந்த சீரியல் ரசிகர்கள் அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கிறது. அதே நேரத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்கு ஆண்கள் அடிமைத்தனத்திலிருந்து பெண்கள் வெளியே வர வேண்டும் என்ற கதையையும் மையமாகக் கொண்டு இந்த சீரியல் கதை பயணித்துக் கொண்டிருக்கிறது. கதையை தாண்டி நிஜத்திலும் இந்த சீரியல் பலருடைய வாழ்க்கையை பிரதிபலிக்கிறது.
எதிர்நீச்சல் சீரியலில் தனித்துவத்தில் முக்கிய இடம் பிடிக்கிறது என்றால் எளிமையும் அதே நேரத்தில் அதிகப்படியான கற்பனைகள் இல்லாமல் நிஜத்தில் நடப்பது போன்று கதை பயணிக்கிறது. இந்த சீரியலில் பர்ஹானா கேரக்டரில் முஸ்லிம் நடிகை ஒருவர் அறிமுகம் ஆகி இருக்கிறார். அவருடைய பெயர் ஜிபா. இவர் இதற்க்கு முன்பு எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. முதல்முறையாக சின்னத்திரையில் முஸ்லிம் நடிகை ஹிஜாப் அணிந்து நடித்தது நான் தான் என்று பெருமையிடம் அறிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் அமெரிக்காவில் முக்கிய வீதியில் ஜிபாவின் வீடியோ ஒளிபரப்பாகி இருக்கிறது. அதுவும் எதிர்நீச்சல் சீரியலில் அவர் பேசிய கிளிப்சுகள் வெளியாகி இருக்கிறது. அது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, "இதை என்னால் நம்பவே முடியவில்லை. இவ்வளவு அன்பை இந்த உலகத்திடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை" என்று தெரிவித்திருக்கிறார். தற்போது இதற்கு அதிகமானோர் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications