எதிர்நீச்சல் சீரியல் ஞானம் யார் தெரியுமா..? அந்த வில்லனே இவர் தான்.. இதை கவனிச்சிருக்கீங்களா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஞானம் என்ற ஞானசேகரின் கேரக்டரில் நடிகர் கமலேஷ் நடித்து வருகிறார்.
இந்த சீரியலில் அண்ணன் மற்றும் தன்னுடைய மனைவி குழந்தைகளிடமும் தைரியமாக முடிவெடுக்க முடியாத ஒரு கேரக்டராக ஞானம் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் யார், அவர் எப்படி சினிமாவிற்குள் வந்தார், அவருடைய குடும்பத்தை பற்றியும் விரிவாக பார்க்கலாம்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஞானசேகரன் கேரக்டரில் ரசிகர்களின் மத்தியில் பிரபலமான கமலேஷ் தற்போது ஞானம் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறார். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் சீரியலின் மூலமாக அதிகமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் தான்.

பல வருடங்களாக இவர் சின்னத்திரை வெள்ளி திரையில் நடித்துக் கொண்டிருந்தாலும் இவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றன. சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் எப்போதும் பிரபலங்களோடும் தன்னுடைய குடும்பத்தோடும் எடுக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
கமலேஷ் ஜி தமிழ் டிவி சேனலில் சூப்பர் சிங்கர் செலிப்ரட்டி என்ற போட்டியில் ஒரு போட்டியாளராக பங்கேற்றார். அப்போது அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்றொரு பிரபலமான சிந்துஜாவை காதலித்து 2007 செப்டம்பர் 6ஆம் தேதி சென்னையில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணத்தில் பல சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

நடிகர் கமலேஷ் தமிழ், தெலுங்கு, கன்னடா சீரியல்களில் நடித்து வருகிறார். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் தனது குழந்தை பருவத்தில் இருந்தே கிளாசிக்கல் இசையை கற்று இருக்கிறார். அது மட்டுமல்லாமல் இவருக்கு டான்ஸ் அத்துபிடி என்பதால் பல குழந்தைகளுக்கு டான்ஸ் சொல்லிக் கொடுக்கும் ஸ்கூல் ஒன்றை வைத்து டான்ஸ் சொல்லி கொடுத்து வருகிறார். இந்த நிலையில் தான் இவர் சீரியலில் மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்து இருக்கிறார். அது உன் குறிப்பாக நடிகர் சூர்யா நடித்து பெரிய அளவில் வெற்றி பெற்ற "சிங்கம்" திரைப்படத்தில் நடித்திருப்பார்.
அதுவும் சிங்கம் திரைப்படத்தில் இவரும் ஒரு முக்கியமான வில்லன் கேரக்டரில் நடித்திருப்பார். இந்த நிலையில் தான் இவருக்கு சமீபத்தில் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எதிர்நீச்சல் சீரியலில் ஞானம் கேரக்டரில் இவர் எப்போது எப்படி இருப்பார் என்று யாராலும் யோசிக்க முடியாத வகையில் இருந்து வருகிறார்.

குணசேகரன் தன்னை என்னதான் அவமானப்படுத்தினாலும் தன் அண்ணன் மீது இருக்கும் மரியாதை மற்றும் பாசத்தின் காரணமாக மீண்டும் மீண்டும் அவர் கூடவே சேர்ந்து விடுவதால் ரேணுகாவும் ஞானத்தின் குழந்தைகளும் நேற்றைய எபிசோட்டில் ஞானத்தின் மீது கடும் கோபத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் சீரியலில் மட்டும் தான் இவர் இப்படியாம். ஆனால் நிஜத்தில் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையின் மீது அதிகமான பாசம் வைத்திருக்கும் நபராகத்தான்.
கமலேஷுக்கு கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு தான் பெண் குழந்தை பிறந்திருக்கிறார். அவருக்கு குழந்தையே பிறக்காது என்றெல்லாம் பலர் இவர் காதுபடவே பேசிக் கொண்டிருந்த நிலையில் பிறந்த தன்னுடைய மகளை ரொம்பவே பாசமாக பார்த்து வரும் இவர் தன்னுடைய மகள் மற்றும் மனைவியோடு எடுக்கும் புகைப்படங்களையும் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.












Click it and Unblock the Notifications