எதிர்நீச்சல் சீரியல் திடீரென முடிக்க காரணம்? டாப்பில் இருந்து சறுக்கிய இடம்! சூப்பர் கிளைமாக்ஸ்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் இந்த சீரியல் வரும் ஜூலை 8ஆம் தேதியோடு முடிவுக்கு வர இருக்கிறது என்று ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இந்த சீரியல் எதற்காக முடிவுக்கு வர இருக்கிறது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
சன் டிவியில் பிரைம் டைம் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே ஒரு வரவேற்பு இருக்கிறது. அதுபோலத்தான் எதிர்நீச்சல் சீரியலுக்கும் கிடைத்தது. ஆனால் இந்த சீரியல் தொடங்குவதற்கு முன்பே இந்த சீரியலில் இயக்குனர் திருச்செல்வம் இயக்குகிறார் என்று தெரிந்த போது இந்த சீரியலுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது. காரணம் இயக்குனர் திருச்செல்வம் இயக்கிய கோலங்கள் சீரியல் பெரிய அளவில் மக்கள் மத்தியில் இடம் பிடித்தது.

அதேபோன்ற பெண்கள் முன்னேற்றத்தை மையப்படுத்தி எதிர்நீச்சல் சீரியல் தொடங்கப்பட்டது. அதனாலேயே இந்த சீரியலுக்கு அதிகமான ரசிகர்கள் பாலோவர்ஸ்களாக மாறிவிட்டனர். பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்கள் கூட இந்த சீரியலை விரும்பி பார்ப்பதாக இணையத்தில் அதிகமான போஸ்ட்கள் குவிந்து வந்தது. அதுபோல கல்லூரி மாணவர்கள் கூட எதிர்நீச்சல் சீரியல் பார்ப்பதாக தெரிவித்திருந்தனர்.
தொடர்ச்சியாக பலருடைய பாராட்டுகளையும் பெற்று வந்த இந்த சீரியலுக்கு யாருடைய கண்ணுபட்டது என்று தெரியவில்லை சீரியலில் குணசேகரன் ஆக நடித்து வந்த மாரிமுத்து திடீரென்று மாரடைப்பால் காரணம் காலமானார். அதற்கு பிறகு தான் இந்த சீரியல் சரிவடைய தொடங்கியது. இந்த சீரியலில் மாரிமுத்துவிற்கு பதிலாக யாரை நடிக்க வைக்கலாம்? அவரை ரசிகர்கள் மாரிமுத்துவை போல ஏற்றுக்கொள்வார்களா என்று பெரிய எதிர்பார்ப்பு மற்றும் சவாலை சீரியல் தரப்பினர் எதிர்கொண்டனர்.
பொதுவாக சீரியலில் இவருக்கு பதில் இவர் என்பது வழக்கமானது தான். ஆனால் எதிர்நீச்சல் சீரியலில் அப்படி ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம் எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்து குணசேகரன் கேரக்டரில் நடித்தார் என்று சொல்வதை விடவும் வாழ்ந்தார் என்று தான் சொல்ல வேண்டும். அதனாலேயே அவருடைய மறைவால் ரசிகர்கள் அதிகமாக அதிர்ச்சியில் இருந்தனர்.
அந்த நேரத்தில் மாரிமுத்துவின் சாயலில் இருக்கும் வேல ராமமூர்த்தியை குணசேகரன் ஆக அறிமுகப்படுத்தி இருந்தார்கள். ஆனால் அதுவரைக்கும் இருந்த குணசேகரன் புதியதாக வந்த குணசேகரனுக்கும் பெரிய வித்தியாசத்தை இயக்குனர் காட்டி இருந்தார். அதுதான் மக்களுக்கு சலிப்பை காட்டியது. அதுபோல எதிர்நீச்சல் பெண்கள் ஆரம்பத்தில் இருந்து இப்ப வரைக்கும் ஒவ்வொரு இடத்திலும் தோற்றுப் போய்க் கொண்டிருப்பது சீரியல் ரசிகர்களுக்கு நெகட்டிவ்வாக தொடங்க ஆரம்பித்து விட்டது.
எதிர்நீச்சல் பெண்கள் மாரிமுத்துவிடம் தோற்றுப் போனதை பெரியதாக எடுத்துக் கொள்ளாத ரசிகர்கள் வேல ராமமூர்த்தியிடம் தோற்றுப் போவதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனாலேயே கதையில் விறுவிறுப்பை ஏற்படுத்த வேண்டும் என்று புதிய புதியதாக பல கேரக்டர்களை இயக்குனர் அறிமுகப்படுத்துகின்றார். ஆனால் இந்த சீரியலில் தொடங்கப்படும் பிரச்சனைகள் ஒன்று கூட முடிவுக்கு வராமல் அடுத்த பிரச்சனை தொடங்கி விடுவது கதையில் கண்டினியூ இல்லாமல் போய்விட்டது.
இதனாலையே கடந்த வாரத்தில் இந்த சீரியல் டிஆர்பியில் மூன்றாவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு வந்துவிட்டது. இந்த நிலையில் இந்த சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது. ஏற்கனவே இந்த சீரியலில் இயக்குனர் திருச்செல்வம் பேட்டி ஒன்றில், ஒரு சீரியலை மக்கள் நன்றாக பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று சீரியல் கதை அவர்களுக்கு பிடிக்காமல் போனதாக இருந்தால் அதை ரொம்ப நாளைக்கு இழுக்காமல் உடனே முடித்து வைத்து விட வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதுபோலத்தான் இப்போது செய்யப் போகிறாரா? என்று கேள்விகள் வருகிறது. ஏற்கனவே இந்த சீரியல் முடிவடைய போகிறதா? என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு விசாலாட்சியாக நடித்து வரும் நடிகை சத்யபிரியா ஆமா என்று கூறியிருக்கிறார். இதனால் இந்த சீரியல் முடிவு உறுதி என்று தெரிகிறது. இப்போதுதான் இந்த சீரியலில் பெண்கள் அடுத்தடுத்து முன்னேற தொடங்கி இருக்கிறார்கள்.
இன்றைய ப்ரோமோவில் கூட தர்ஷினி தன்னை கடத்தியது தன்னுடைய அப்பா குணசேகரன் தான் என்ற உண்மையை மொத்த குடும்பத்திடமும் கூறி இருக்கிறார். அதுபோல திமிரா பேசிக் கொண்டிருந்த ஜான்சி ராணியை கையை முறுக்கி தர்ஷினி அடித்துக் கொண்டிருக்கிறார். இதைத்தான் ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தார்கள். அது இன்று நடக்க தொடங்கி இருக்கிறது. இன்னும் ஒரு மாதத்திற்குள் அடுத்தடுத்த எல்லா பிரச்சனைகளும் முடிவுக்கு வந்து சீரியல் விறுவிறுப்பாக முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது சத்தி மற்றும் ஜனனி இருவரும் புது கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார்கள். அதுபோல ரேணுகா டான்ஸ் கிளாஸ் எடுக்க போகிறார். நந்தினியும் தன்னுடைய மசாலா பிசினஸை தொடங்க போகிறார். இப்படி பெண்கள் எதிர்நீச்சல் போடத் தொடங்கி இருக்கின்றனர். அதுபோல ஆதிரைக்கும் அருணுக்கும் திருமணம் நடக்கப் போகிறது. இத்தனை நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த அத்தனை விஷயமும் இனி அடுத்தடுத்து வர இருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications