மாரிமுத்து இறந்த மதியமே இதுதான் நடந்தது.. என் மனைவி சொன்ன வார்த்தை.. வேல ராமமூர்த்தி பகிர்ந்த தகவல்
சென்னை: நடிகர் மாரிமுத்து கடைசியாக எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வந்த குணசேகரன் கேரக்டரில் அவருடைய மறைவுக்குப் பிறகு யார் நடிப்பார் என்ற கேள்விகள் ரசிகர்களின் மத்தியில் இருக்கிறது.
அதே நேரத்தில் அந்த கேரக்டரில் நடிகர் வேலராமமூர்த்தி நடித்தால் நன்றாக இருக்கும் என்று பலர் தொடர்ச்சியாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வேல ராமமூர்த்தி இதுகுறித்து தன்னுடைய நிலைப்பாடு என்ன என்பது பற்றியும் நடிகர் மாரிமுத்து பற்றியும் பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் மாரிமுத்து சற்றும் எதிர்பார்க்காத வகையில் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவருடைய மறைவு ரசிகர்கள், அவருடன் நடித்த நடிகர்கள், அரசியல் பிரபலங்கள் என பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இப்ப வரைக்கும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் ரசிகர்கள் தவிர்த்து வருகின்றனர்.
எத்தனையோ போராட்டங்களுக்கு பிறகு தான் மாரிமுத்துவிற்கு எதிர்நீச்சல் சீரியல் மூலமாக பெரிய அளவில் அங்கீகாரம் கிடைத்தது. ஆனால் ஆனால் அதை மாரிமுத்துவால் அதிக நாட்கள் அனுபவிக்க முடியவில்லை. இது பலரையும் வேதனையில் ஆழ்த்தி இருக்கிறது. அதே நேரத்தில் இனி அந்த குணசேகரன் கேரக்டரில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் இருக்கிறது. அதுபோல இனி யாரு நடிச்சாலும் மாரி முத்து போல நடிக்க முடியாது என்றும் ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மாரிமுத்து இறந்த சில மணி நேரத்தில் இருந்து அவருடைய கேரக்டருக்கு நடிகர் வேலராமமூர்த்தி நடித்தால் நன்றாக இருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்து வந்த நிலையில் வேலராமமூர்த்தி தற்போது பேட்டி ஒன்றில் தன்னுடைய நிலை என்ன என்பது பற்றி கூறியிருக்கிறார். அதில் மாரிமுத்து என்னுடைய நெருங்கிய நண்பன். நானும் அவரும் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறோம்.

கொம்பன் திரைப்படத்தில் ஏற்கனவே நாங்கள் இருவரும் நடித்திருக்கிறோம். அதுபோல இப்போது கூட ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறோம். அந்த திரைப்படத்தில் என்னுடைய தம்பியாக மாரிமுத்து நடித்தார். தென்காசி பகுதியில் கடந்த வாரம் தான் அதற்கான சூட்டிங் நடைபெற்றது. அவர் என்னிடம் அதிகமான விஷயங்களை ஷேர் பண்ணி இருக்கிறார். இந்த சீரியல் மூலமாக நான் புகழின் உச்சத்தில் இருக்கிறேன் என்று அடிக்கடி சந்தோஷப்பட்டு இருக்கிறார். ஆனால் அவருக்கு இந்த நிலைமை வரும் என்று நான் நினைக்கவில்லை.
அதுபோல எதிர்நீச்சல் சீரியல் நான் அதிகமாக பார்த்ததில்லை. என்னுடைய மனைவி இந்த சீரியல் குறித்து அதிகமாக பாராட்டுவார். அதில் உங்களுடைய நண்பனின் நடிப்பு வேற லெவலில் இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார். நான் அதைக் கூட மாரிமுத்துவிடும் சொல்லி சந்தோஷப்பட்டு இருந்தேன். இப்போது என்னிடம் எதிர்நீச்சல் சீரியலில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதுவும் மாரிமுத்து இறந்த அன்று மதியமே பலர் என்னுடைய பெயரை சொல்லி அந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பேன் என்று சொல்லி வருகிறார்கள்.
இப்போது நான் சினிமாவில் பிஸியாக இருக்கிறேன். சீரியலில் நடிக்கும் எண்ணம் எனக்கு கொஞ்சம் கூட கிடையாது. ஆனால் அந்த குணசேகரன் கேரக்டர் என்றால் பார்க்கலாம். சீரியல் தரப்பினரிடம் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை எனக்கு பார்க்கும்போது சந்தோசமாக இருக்கிறது. அதே நேரத்தில் குணசேகரன் ஆக நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நான் உங்கள் எல்லோரையும் சந்தோஷப்படுத்துவேன் என்று அந்த பேட்டியில் வேல ராமமூர்த்தி பேசியிருக்கிறார்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications