“நான் கோபப்படுவதற்கு காரணமே இதுதான்” அதனால் இழந்தது ஏராளம்.. மனம் திறந்த எதிர்நீச்சல் குணசேகரன்
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் ஆக நடிக்கும் மாரிமுத்து, தான் டக்கென்று கோபப்படுவதற்கான காரணம் என்ன என்றும் அதனால் தான் இழந்தவைகளை குறித்தும் மனம் திறந்து பேசி இருக்கிறார். இந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
ஆரம்பத்தில் இருந்தே எதிலும் ஒரு பர்பெக்சன் பார்ப்பதனால் தான் தன்னுடைய வாழ்க்கையில் பல விஷயங்களை தான் இழந்து விட்டதாகவும் பெர்பெக்டாக இல்லையே என்று வருத்தத்தில் தான் தமக்கு அதிகமான கோபம் வருவதாகவும் பல விஷயங்களை மாரிமுத்து பகிர்ந்து இருக்கிறார்.

கோபப்படும் குணம்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் வெள்ளி திரையில் குணச்சித்திர கேரக்டரிலும், வில்லனாகவும் இயக்குனராகவும் மிரட்டி வந்த மாரிமுத்து குணசேகரன் ஆக நடிக்கிறார் .இந்த சீரியலில் நடிக்கிறார் என்று சொல்வதை விடவும் கேரக்டராகவே மாறிவிட்டார் .அதனால் தான் இவரை அதிகமான ரசிகர்கள் திட்டி வருகின்றனர். தற்போது ஒரு சில நாட்களாகவே இவருடைய ஆட்டத்தை அப்பத்தா அடக்கி வைத்திருப்பதை பார்த்து பலரும் அப்பத்தாவை பாராட்டி வருகின்றனர். கதாநாயகனுக்கு இணையான கேரக்டரில் இவருடைய எதார்த்தமான நடிப்பை பாராட்டிவரும் நிலையில் இவர் சீரியலில் மட்டுமல்லாமல் நிஜ கேரக்டரிலும் டக்கென்று கோவப்படும் கேரக்டர் தானாம்.

நியாயமான கோபம்
எந்த விஷயத்திலும் பெர்ஃபெக்ஷன் எதிர்பார்க்கும் மாரிமுத்து வெளியே எங்கே சென்றாலும் அவருடைய கண்களுக்கு தவறாக இருப்பதும் நெகட்டிவாக இருப்பது மட்டும்தான் தெரியுமாம். எதற்காக இவர்கள் இப்படி செய்திருக்கிறார்கள் என்று இவருக்கு இவரே கேள்வியை கேட்டுக்கொண்டு அந்த இடத்தில்தான் இவருக்கு கோபம் வருமாம். சில நேரங்களில் ரோட்டில் பைக் ரைடர்ஸ் வேகமாக செல்லும்போது செமையாக கோபம் வருமாம், எதற்காக பைக்கை உர்..உர் என்று வேகமாக சென்று பக்கத்தில் செல்பவர்களையும் பயம் முறுத்த வேண்டும் என்பது இவருடைய கேள்வியாக இருக்கிறது. அப்படிப்பட்டவர்களை பிடித்து லைசென்ஸ் பிடுங்கி விட்டு, அவர்களின் கைகளை இரண்டையும் கட் பண்ணி எடுத்து விட வேண்டும் என்கிற அளவிற்கு எனக்கு கோபம் வரும் என்று கூறி இருக்கிறார்.

யோசிக்க வேண்டிய விஷயம்
தன்னுடைய பார்வையில் ஏதாவது தப்பாக தெரிந்தால் அது என்னுடைய மண்டைக்குள் குடைந்த வண்ணமாகவே இருக்கும் ஒரு ஆபீசுக்கு செல்லும்போது அங்கே செருப்புகளை கூட "ஏனோ தானோ" என யாரோ கழட்டி விட்டு சென்றிருந்தாலும் எனக்கு பார்ப்பதற்கு வெறுப்பாக இருக்கும் அதை அனைத்தையும் எடுத்து நேராக அடுக்கி வைத்து விட்டால்தான் எனக்கு மனசுக்கு சந்தோஷமாக இருக்கும். அப்படி செய்பவன் தான் நான். அதுபோல தீபாவளி நேரத்தில் பட்டாசு வெடிப்பது எனக்கு அறவே பிடிக்காது. என்னுடைய குழந்தைகளுக்கும் என்னைப் போலவே பிடிக்காது என்று கூறி இருக்கிறார். வீட்டில் குழந்தைகள் இருக்கும் இடத்தில் சிலர் பட்டாசுகளை வெடிக்கின்றனர் .இப்படி எல்லாம் செய்யக்கூடாது என்று கூறி இருக்கின்றார்.

கோபத்தால் கிடைத்த விளைவுகள்
கோபம் என்கிறது எனக்கு தண்ணியும் பாலும் போல பிரிக்க முடியாது. சில நேரங்களில் பாசிட்டிவ்வான செயல்களை கொடுத்து விடும் .ஆனால் பல நேரங்களில் பல வாய்ப்புகளையும் கெடுத்திருக்கிறது. சில நேரங்களில் இவர் கோபப்படுபவர் இதனால் இவருக்கு இந்த கேரக்டர் செட்டாகாது என்று பல வாய்ப்புகள் இவருக்கு கிடைக்காமலே போய்விட்டதாம். அது மட்டும் அல்லாமல் இந்த சீரியலில் இவர் கோபக்காரராகவே நடிப்பதால் கூட பலர் இவரைக் கண்டாலே எதிரியை பார்க்கின்ற மாதிரி பார்த்துக் கொண்டு போய்விடுகிறார்களாம். நின்று பேசுவதற்கு கூட பலர் தயாராக இல்லை என்று கூறியிருக்கிறார். தன்னுடைய நடிப்பு கிடைத்து அங்கீகாரமாக இருந்தாலும் பல பேர் இருக்கும் இடத்தில் நம்மை ஒரு சிலர் இப்படி வெறுப்பாக பார்ப்பதை பார்க்கும்போது சிரிப்பாக இருந்தாலும் ஒரு மாதிரி தான் இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications
