எதிர்நீச்சலில் புதிய குணசேகரன் இவரா? பிரபல திரைப்பட தயாரிப்பாளர்? ரகசியத்தை லீக் செய்த கரிகாலன்!
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகராக நடித்து வந்த நடிகர் மாரிமுத்து சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக காலமானார்.
அதற்குப் பிறகு அவர் நடித்த குணசேகரன் கேரக்டரில் யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் இருந்தது. அதோடு பல நடிகர்களின் பெயரும் அடிபட்டுக் கொண்டிருந்தது.

இந்த நிலையில் புதியதாக எதிர்நீச்சல் சீரியல் நடிகர்களோடு தயாரிப்பாளர் ஒருவர் நிகழ்ச்சியில் புகைப்படம் எடுத்திருக்கிறார். அதனால் அவர் தான் அடுத்த குணசேகரன் என்று கூறப்படுகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சின்னத்திரையில் அதிகமான ரசிகர்களால் சமீபத்தில் பேசப்படும் சீரியலாக எதிர்நீச்சல் சீரியல் இருக்கிறது. இந்த சீரியலுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணமாக குணசேகரன் கேரக்டரில் நடித்து வந்த மாரிமுத்து சில தினங்களுக்கு முன்பு காலமானார். இந்த அதிர்ச்சியில் இருந்து ரசிகர்கள் மீள முடியாமல் இருக்கின்றனர்.
அதே நேரத்தில் இனி இந்த சீரியலின் அடுத்த குணசேகரன் யார் என்று எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. அந்த வகையில் பல பிரபல நடிகர்களோடு பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் நடிகர் மாரிமுத்துவை போலவே சாயலில் இருக்கும் வேல ராமமூர்த்தி தான் இது சீரியலில் நடிக்க போகிறார் என்ற பேச்சு அதிகமாக அடிபட்டுக் கொண்டிருந்தது. அது குறித்து அவரும் பேட்டியில் விளக்கம் கொடுத்திருந்தார்.
என்னிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றது.. ஆனால் நான் திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். எதுவாக இருந்தாலும் 20 நாட்களுக்கு பிறகு தான் சொல்ல முடியும். ஒரு வேளை குணசேகரன் கேரக்டர் எனக்கு கிடைத்தால் அதை நான் சிறப்பாக செய்வேன் என்று கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து நடிகர் இளவரசு, நடிகர் பசுபதி, நடிகர் ஆனந்தராஜ், நடிகர் ராதாரவி என்று பல பிரபலங்களின் பெயர் அடிபட்டுக் கொண்டது இருந்தது.
அதுபோல இந்த சீரியலில் இதுவரைக்கும் குணசேகரனாக யாரும் கமிட்டாகவில்லை என்று செய்திகள் வெளியாகி இருந்தது. அதனாலேயே நடிகர் மாரிமுத்து ஏற்கனவே நடித்த கிளிப்ஸ்களை மீண்டும் பயன்படுத்தி அவர் சீரியல் நடித்துக் கொண்டிருப்பது போன்று காட்சி அமைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நேற்று எதிர்நீச்சல் சீரியல் நடிகர்கள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இருக்கின்றனர். அப்போது அவர்களோடு ஒரு நபர் இருக்கிறார். அவர் சாயலில் குணசேகரன் கேரக்டருக்கு தகுந்தது போல இருக்கிறார்.

அதனால் அவர்தான் அடுத்த குணசேகரன் என்று அதிகமான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவர் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் பி.எல் தேனப்பன். இவர் ஸ்ரீ ராஜலட்சுமி ஃபிலிம் லிமிடெட் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை வைத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் காதலா காதலா திரைப்படத்தின் மூலமாகத்தான் இவர் தயாரிப்பாளராக அறிமுகமானார். அதற்கு பிறகு இவர் சுமார் 14 படங்களை தயாரித்திருக்கிறார்.
அதே நேரத்தில் சில திரைப்படங்களில் இவர் நடிக்கவும் செய்திருக்கிறார். இவருடைய சொந்த ஊர் காரைக்குடி தான். அதுபோல பேரன்பு, அய்யனார், துரை, வல்லவன், பிரியசகி, பஞ்சதந்திரம் என்று பல திரைப்படங்களை இவர் தயாரித்திருக்கிறார். அதுபோல தெனாலி, படையப்பா போன்ற திரைப்படங்களில் துணை தயாரிப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார். அதோடு முத்து நெல்லை சந்திப்பு, குரங்கு பொம்மை, பலூன், பேரன்பு போன்ற ஒரு சில திரைப்படங்களில் இவர் சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் இவர் எதிர்நீச்சல் சீரியலில் கரிகாலன், ஜனனி, நந்தினி, ரேணுகா போன்றவரோடு இவரும் புகைப்படம் எடுத்திருப்பதால் ஒருவேளை இவர் தான் அடுத்த குணசேகரனாக இருக்குமா என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றி இன்னும் ஒரு சில எபிசோடில் வெளியே தெரிந்துவிடும்.
-
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications