மாரிமுத்து இறந்து ஒரு நாள் தானே ஆகுது! அதற்குள் அடுத்த குணசேகரன் இவரா? ப்ரோமோவில் இதை கவனிச்சீங்களா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் ஆக நடித்து வந்த நடிகர் மாரிமுத்து இறந்து விட்டதால் அவருக்கு பதிலாக இனி யார் குணசேகரனாக நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது.
அதே நேரத்தில் இன்று வழக்கம் போல சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றும் அப்போது புது குணசேகரன் மூலமாக காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில் இது குறித்து அதிகமான கருத்துக்கள் சமூக வலைதளத்தில் குவிந்து வருகிறது அது பற்றி பார்க்கலாம்.
நேற்றைய நாள் காலைப் பொழுதிலேயே யாரும் எதிர்பார்க்காத வகையில் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சி கிடைத்தது. இத்தனை நாட்களாக இந்த சீரியலில் வெற்றிக்கு காரணமாக முதுகெலும்பாக இருந்த நடிகர் மாரிமுத்து மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்து விட்டார் என்று செய்தி பலருக்கும் நம்ப முடியாமல் தான் இருந்தது.
அந்த செய்தி ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அவரோடு சீரியலில் நடித்து வரும் நடிகர்களுக்கும் கூட அப்படித்தான் இருந்ததாகவும், கண்ணாடி பெட்டிக்குள் நடிகர் மாரிமுத்துவை பார்ப்பது வரைக்கும் இந்த தகவல் பொய்யாக இருந்துவிடக் கூடாதா? என்று தாங்கள் நினைத்துக் கொண்டிருந்ததாக பலர் இப்ப வரைக்கும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எதிர்நீச்சல் சீரியல் சமீபத்தில் 500 ஆவது எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியல் டீம் இந்த மகிழ்ச்சியை கொண்டாடி மகிழ்ந்திருந்தனர். இந்த நிலையில் யார் கண்ணுபட்டதோ, என்று சொல்வது போலத்தான் இப்போது நடிகர் மாரிமுத்து மரணமடைந்திருக்கிறார். ஏற்கனவே இந்த சீரியலின் இயக்குனர் திருச்செல்வம் இயக்கும் சீரியலில் பொதுவாக ஆரம்பத்தில் இருக்கும் நடிகர் நடிகைகள் தான் கடைசி வரைக்கும் பயணித்துக் கொண்டிருப்பார்கள்.
தவிர்க்க முடியாத காரணங்களால் தான் ஒரு சில நடிகர்கள் விலகி இருப்பார்கள்.அந்த வகையில் இத்தனை நாட்களாக குணசேகரனாக பார்த்து வந்த மாரிமுத்து திடீரென்று மரணம் அடைந்து விட்டார் இதை ஏற்றுக் கொள்ள முடியாத ரசிகர்கள் இனி நாங்கள் தொடர்ந்து சீரியல் பார்க்க மாட்டோம் எங்களால் பார்க்க முடியாது என்றெல்லாம் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த சீரியலில் புது குணசேகரன் ஆக எழுத்தாளரும் நடிகருமான வேலராமமூர்த்தி நடித்து வருவதாக தகவல்கள் பரவி வருகிறது.
ஏற்கனவே நேற்றைய எபிசோடுக்கான டயலாக் பேசிக் கொண்டிருக்கும் போது தான் நடிகர் மாரிமுத்துவிற்கு நெஞ்சு வலி ஏற்பட்டு இருக்கிறது. அதனால் நேற்று எபிசோட் இரண்டாவது விளம்பரத்திற்கு பிறகு அவருடைய கேரக்டருக்கு இன்னொரு நபர் தான் டப்பிங் பேசி முடித்து இருந்தார்.

இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் குணசேகரன் எந்த இடத்திலும் பேசாமல் கோபத்தில் இருப்பது போன்ற கிளிப்ஸ்கள் மற்றும் தான் இடம் பிடித்திருக்கிறது. இதனால் இன்றைய எபிசொட்டில் குணசேகரின் குரல் யாருடையதாக இருக்கிறது என்பதை வைத்து இனி குணசேகரன் ஆக யார் வரப் போகிறார் என்பதை கணித்து விடலாம்.
அதே நேரத்தில் மாரிமுத்து இறந்து ஒரு நாள் தானே ஆகுது அதற்குள் வேறு ஒரு நடிகரை குணசேகர் ஆனாக நடிக்க வைத்து விட்டார்களே என்று அவருடைய இழப்பை தாங்கிக்கொள்ள முடியாத ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இந்த சீரியலை நம்பி எத்தனையோ குடும்பத்தினர் வாழ்ந்து வருகிறார்கள்.
ஒரு நாள் சீரியலை நிறுத்துவதால் பலர் கஷ்டப்படுவார்கள். அதனாலேயே சீரியல் தொடர்ச்சியாக சூட்டிங் எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது. ஆனாலும் உண்மையில் இனி குணசேகரன் ஆக வேலராமமூர்த்தி தான் நடிக்கப் போகிறாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications