கையில் குழந்தை.. பக்கத்திலேயே “அவர்” எதிர்நீச்சல் ஜனனி வாங்கிய புது கார்.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கேரக்டரில் நடிகை மதுமிதா நடித்து வருகிறார்.
முதல் முறையாக தமிழ் சீரியலில் அறிமுகமான மதுமிதாவிற்கு அதிகமான வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் தன்னுடைய குடும்பத்தோடு சேர்ந்து புது கார் ஒன்றை வாங்கி இருக்கும் மதுமிதா அது குறித்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

சன் டிவியில் சமீபத்தில் அதிகமான ரசிகர்களால் பேசப்படும் ஒரு சீரியல் ஆக எதிர்நீச்சல் சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியல் அதிகமாக டிஆர்பிஐ பெற்று கடந்த இரண்டு வாரங்களாக முதலிடத்தில் இருந்து நிலையில் கடந்த வாரம் இரண்டாவது இடத்திற்கு வந்திருக்கிறது. ஆனாலும் சொற்பமான புள்ளிகள் வித்தியாசத்தில் தான் இருக்கின்றது. அந்த அளவிற்கு ரசிகர்கள் தொடர்ச்சியாக இந்த சீரியலுக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
அதுபோல எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் ஜனனி கேரக்டரில் நடிக்கும் மதுமிதாவும் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்திருக்கிறார். இதற்கு முன்பு விளம்பரங்களிலும், கன்னட சீரியல்களிலும் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்த மதுமிதாவிற்கு எதிர்நீச்சல் சீரியல் பெரிய அளவில் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
நடிகையாக வேண்டும் என்ற ஆசையே இல்லாமல் இருந்த மதுமிதா தன்னுடைய அப்பாவின் நண்பர்கள் சொன்ன வார்த்தையால் நாமும் தான் ட்ரை பண்ணி பார்ப்போமே என்று சில ஆடிஷனில் கலந்துகொண்டு பிறகு நடிகையாக மாறியிருக்கிறார். அதோடு மாடலிங்கில் கலக்கிக் கொண்டிருக்கும் மதுமிதா இணையத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிட்டு கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமாக மாறி இருக்கும் மதுமிதா புதியதாக கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். அது குறித்து அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை வெளியிட்ட மதுமிதா, "இது என் கனவு இல்லை. நான் நிஜமாக்கிய முதல் விஷயம்" என்று தெரிவித்திருக்கிறார்.
அதுபோல," Kia sonet ரக காரைத்தான் அவர் வாங்கி இருக்கிறார். இதன் விலை சுமார் 17 முதல் 18 லட்சம் ரூபாய் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதோடு இந்த கார் வாங்கியதும் கையில் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு அதன் கால்களை குங்கும நீரில் தேய்த்து, தன்னுடைய காரில் அச்சு எடுத்து சந்தோஷமாக கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறார். கூடவே அவருடைய அப்பா மற்றும் அம்மா முதலிய நெருங்கிய உறவினர்களும் இருக்கின்றனர். தற்போது மதுமிதாவிற்கு சின்னத்திரை நடிகர்கள் பலர் தொடர்ச்சியாக வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications