எதிர்நீச்சல் சீரியலில் வீட்டுக்கே வந்த கௌதம்.. தாலியை காட்டி கெஞ்சும் ஜனனி.. சக்தியா இப்படி..?
சென்னை: சன் டிவியில் இரவு 9:30 மணிக்கு எதிர்நீச்சல் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இது டிஆர்பியில் கடந்த இரண்டு வாரங்களாக முதலிடத்தில் இருந்து வருகிறது.
இந்த சீரியலில் நடிக்கும் பிரபலங்கள் பலரும் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்திருக்கின்றனர். அதில் ஜனனி கேரக்டரில் நடிகை மதுமிதா நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை மதுமிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த சீரியல் நடிகர்களோடு எடுத்த வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியாகி கருத்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
எதிர்நீச்சல் சீரியல் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் பலராலும் பேசப்படும் ஒன்றாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் இருக்கும் நிறை குறை என்று ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிரபலங்களும் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த அளவிற்கு எதிர்நீச்சல் சீரியல் கொஞ்ச நாளைக்குள் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

பொதுவாக சீரியல்கள் என்றால் வீட்டில் இருக்கும் குடும்ப பெண்கள் மட்டும் தான் பார்ப்பார்கள் என்று ஆரம்பத்தில் இருந்த நிலை இப்போது மாறிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் சமூக வலைத்தளத்தில் செய்யும் செயல்களும் பலருக்கும் வியப்பை கொடுத்து இருக்கிறது. எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் கேரக்டர்கள் படியே ரசிகர்கள் இந்த நடிகர்களை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் சமூக வலைத்தளத்தில் நாங்க வேற மாதிரி என்கிற மாதிரி சில நேரங்களில் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கின்றனர்.
காரணம் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி என்றால் தைரியமான பெண். எதற்கும் துணிந்து பேசக்கூடியவர். பெண் அடிமைத்தனத்துக்கு எதிராக குரல் கொடுப்பவர் என்று ரசிகர்கள் நம்பிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் நிஜத்தில் நாங்கள் ஒரு குழந்தை போல என்பதை தான் ஒவ்வொரு வீடியோவிலும் அவர் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

சீரியல் நடிகர்கள் சீரியலில் மட்டும்தான் அடித்துக் கொண்டும் முறைத்துக் கொண்டும் இருந்தாலும் சூட்டிங் கட் என்று சொன்னதும் ஆளுக்கு ஒரு போனை எடுத்துக்கொண்டு ரீல்ஸ் போட தயாராகி விடுகிறார்கள். அதிலும் அதிகமாக இணையத்தில் எதிர்நீச்சல் சீரியல் நடிகர்கள் வீடியோக்களை தெறிக்க விட்டுக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் தான் தற்போது மதுமிதா (ஜனனி) தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோவும் வைரலாகி வருகிறது.
அதில் கௌதம் மீண்டும் குணசேகரன் வீட்டிற்கு வந்து இருக்கிறார். அப்போது ஜனனியிடம் கௌதம் சக்தியை காட்டியபடி நான் அப்பவே சொன்னேன்லடா இதெல்லாம் வேண்டான்னு என்று சொல்ல அதற்கு ஜனனி இப்படி எல்லாம் ஆகணும்னு நினைச்சு கூட பாக்கல டா என்று தன்னுடைய தாயே தூக்கி காட்டி கெஞ்சியபடி ஏதோ அவசரத்துல ஆகிட்டுனா என்று ஃபீல் பண்ணுவது போல நடித்துக் கொண்டிருக்க பக்கத்தில் இருக்கும் சக்தியும் இந்த ரீல்ஸ் வீடியோவிற்கு ஆக்சன் காட்டியிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் இதை அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications