ஜீவானந்தம் கேரக்டர் எவ்வளவு நாளைக்கு? ரகசியத்தை உடைத்த இயக்குனர்..இனி கதை இப்படித்தானாம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார்.
அதே நேரத்தில் எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தம் கேரக்டரிலும் திருச்செல்வம் நடித்து வருகிறார்.

அவர் எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தம் கேரக்டர் எப்படி இருக்க போகிறது என்பது பற்றியும் இனி கதை எந்த மாதிரி பயணிக்க போகிறது என்பது பற்றியும் பேட்டியில் பேசியிருக்கிறார்.
சின்னத்திரையில் அதிகமான ரசிகர்கள் பாராட்டும் ஒரு சீரியல் ஆக எதிர்நீச்சல் சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியலுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். அதற்கு காரணம் விறுவிறுப்பான கதை அமைப்பு மற்றும் காட்சி அமைப்புகளும் தான்.
எதிர்நீச்சல் சீரியலை பல வருடங்கள் கழித்து இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். அதுமட்டுமல்லாமல் இந்த சீரியலில் ஜீவானந்தம் கேரக்டரில் திரு செல்வம் நடித்து வருகிறார். ஏற்கனவே அவர் இயக்கிய கோலங்கள் சீரியலிலும் தொல்காப்பியன் என்ற முதன்மையான கேரக்டரில் நடித்திருந்தார். இந்த நிலையில் இந்த சீரியலில் ஜீவானந்தம் கதை தொடங்கிய போது ரசிகர்கள் இயக்குனர் இதிலும் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கருத்து கூறி வந்தனர்.
ஆரம்பத்தில் ஜீவானந்தம் ஒரு கம்யூனிஸ்ட் போன்று காட்சிகள் அமைப்புகள் வந்து கொண்டிருந்தது. அதிகமாக சொத்து வைத்திருக்கும் பணக்காரர்களிடம் இருந்து அந்த சொத்துக்களை பிடுங்கி ஏழைகளுக்கு கொடுப்பது போன்று கதை தொடங்கிய நிலையில் இப்போது குணசேகரின் மனைவி ஈஸ்வரியின் முன்னாள் காதலனாகவும் ஜீவானந்தம் தொடர்கிறார். இந்த நிலையில் ஜீவானந்தம் கேரக்டர் எவ்வளவு நாட்கள் இந்த சீரியலில் இருக்கும் என்பது பற்றி சமீபத்தில் பேட்டியில் திருச்செல்வம் பேசியிருக்கிறார்.

ஆரம்பத்தில் இந்த கதை தொடங்கும் போது ஜீவானந்தம் கேரக்டர் கொஞ்ச நாளைக்கு என்பது போன்று தான் தொடங்கப்பட்டது. ஆனால் இப்போது கதையின் முக்கியத்துவத்திற்கு தகுந்தது போல கதை பயணிக்க தொடங்கி இருக்கிறது. இனி வரும் காலங்களில் கதை எப்படி போகிறதோ ரசிகர்களின் மத்தியில் எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறது அது போலவே கதை பயணிக்கப்படும். அதிக நாட்கள் ஜீவானந்தம் கேரக்டர் இருக்காது என்று கூறியிருக்கிறார்.
ஏற்கனவே இப்போது குணசேகரன் மற்றும் ஜீவானந்தம் பிரச்சனைகள் தான் வலுவான கதை காரணமாக இருக்கிறது. இந்த நிலையில் இதை வைத்து பல மாதங்கள் கதை ஓடிவிடும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் ஈஸ்வரியின் முன்னாள் காதலன் என்ற விஷயத்தை குணசேகர்களுக்கு தெரிந்த பிறகுதான் கதை இன்னும் சூடு பிடிக்க போகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் பொறுத்திருந்து பார்ப்போம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications