எதிர்நீச்சல் சீரியலின் அடுத்த சொதப்பல்.. இது கூட தெரியாதா..? இதை கவனிச்சிருக்கலாமே..!
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் அதிகமான ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.
ஆனால் கதையின் சுவாரசியத்திற்காக எதிர்நீச்சல் சீரியலில் காட்டப்படும் கதை உண்மைக்கு புறம்பாக இருக்கிறது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
அதே நேரத்தில் இதை எப்படி கவனிக்க மறந்தார்கள் சீரியல் டீம் என்று வியப்பாகத்தான் இருக்கிறது. என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

சன் டிவியில் சமீப காலமாக அதிகமான ரசிகர்களால் பார்க்கப்படும் சீரியல் ஆகவும், சின்னத்திரையில் அதிகமான ரசிகர்களால் பேசப்படும் சீரியல் ஆகவும் எதிர்நீச்சல் சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியல் மற்ற சீரியல்களை காட்டிலும் இல்லாமல் முற்போக்கான கதையாக இருப்பதிலும் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
சாதாரண மக்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் எதிர்நீச்சல் சீரியலை பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் இந்த சீரியலிலும் டிஆர்பி அதிகப்படுத்துவதற்காகவும் அதே நேரத்தில் விறுவிறுப்பு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் கதையில் செய்யப்பட்ட மாற்றம் இப்போது அதிகமாக கலாய்க்கப்பட்டு வருகிறது.

குணசேகரன் தன்னுடைய அப்பத்தாவின் 40% ஷேர் தன்னுடைய பெயருக்கு மாற்றி விட வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார். அதற்காக பல சூழ்ச்சிகளையும் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் அப்பத்தா தன்னுடைய சொத்தை வைத்து பெண்களுக்கான புரட்சியாக செய்யப் போவதாக கூறிக் கொண்டிருந்தார். ஆனால் ஆதிரையின் நிச்சயதார்த்தத்தில் சொத்தை குணசேகரனுக்கு கையெழுத்து போட்டுக் கொடுத்ததால் மனம் உடைந்து போய் இருந்த அப்பத்தான் பிறகு கோமாவில் இருக்கிறார்.
இந்த நிலையில் கோமாவில் இருந்து கண்விழிக்கும் அப்பத்தா அடிக்கடி ஜனனியிடம் சொல்லும் பெயர் ஜீவானந்தம் தான். ஜீவானந்தம் வந்தானா? என்று கேட்டு அப்பத்தா கேள்வி கேட்க, ஜனனியும் ஜீவானந்தம் யார் என்று கண்டுபிடிப்பதற்காக முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் ஜீவானந்தம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அப்பத்தாவின் கைரேகைகளை எடுத்து சொத்தை தன்னுடைய பெயருக்கு மாற்றிவிட்டார்.

சொத்து தன்னுடைய பெயருக்கு மாற்றிய ஜீவானந்தம் இன்றைய பிரமோவில் பர்ஹானாவை கம்பெனிக்கு போக வைத்து அங்கே பிரச்சனையும் செய்கின்றனர். இந்த நிலையில் இது குறித்து தான் இப்போது நெட்டிசன்ங்கள் கலாய்த்து கொண்டிருக்கின்றனர். காரணம் எந்த ஒரு ரெஜிஸ்ட்ரேஷன் செய்வதென்றாலும், சம்பந்தப்பட்ட நபர் கண்டிப்பாக பத்திர அலுவலகத்திற்கு வந்து தான் ஆக வேண்டும்.
ரத்த சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தன்னுடைய சொத்தை எழுதிக் கொடுப்பதாக இருந்தாலும் அல்லது பவரை எழுதிக் கொடுப்பதாக இருந்தாலும் கூட ரெஜிஸ்டர் ஆபீஸில் வந்து தான் கையெழுத்து போட்டு அல்லது கைரேகை வைத்தோ உரிமை மாற்றம் செய்ய முடியும். அதே நேரத்தில் அங்கு புகைப்படங்களும் எடுப்பது இப்போது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. பத்திர அலுவலகத்தில் அதிகப்படியான கட்டுப்பாடுகள் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

ஆனால் இதில் லாஜிக்கே இல்லாமல் அதுவும் கோமாவில் இருக்கும் ஒரு பெண்ணிடம் கைரேகையை மட்டும் எடுத்துக் கொண்டால் ஜீவானந்தம் பெயருக்கு சொத்து மாறிவிட்டது என்று சொல்லுது நம்புபடியாக இல்லை என்று, இதை சீரியல் அணியினர் எப்படி கவனிக்காமல் விட்டார்கள் என்று பலர் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இது குறித்து சீரியலில் ஏதேனும் விளக்கம் கொடுக்கப்படுகிறதா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications