எதிர்நீச்சல் ஜீவானந்தம் அணிக்குள் திடீர் சண்டை.. பர்ஹானாவால் கோபத்தில் கௌதம்.. வெளிவந்த உண்மை
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் எதிர்பாராத திருப்பங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஜீவானந்தத்திடம் இருந்து சொத்துக்களை மீண்டும் பெறவேண்டும் என்று குணசேகரன் ஆடிட்டரிடம் பேசி புது வக்கீல் இடம் ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்.

அதே நேரத்தில் ஜனனி, சக்தி கொடுக்கும் இன்பர்மேஷன் படி இனி நான் சீக்கிரமாக ஜீவானந்தத்தை சந்திக்க போகிறேன் என்று கூறியிருக்கிறார்.
எதிர்நீச்சல் சீரியலில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் அடுத்தடுத்த திருப்பங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் இனி என்ன நடக்கப்போகிறது என்று யூகிக்க முடியாத வகையில் இருக்கின்றது. இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் நடிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் தொடர்ச்சியாக வீடியோக்கள், புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். அதன் அடிப்படையிலேயே சீரியலின் கதையை யூகிக்க முடிகிறது.

ஏற்கனவே ஈஸ்வரி தன்னுடைய அப்பாவிடம் ஜீவானந்தம் பற்றி பேசி இருக்கையில் ஜீவானந்தம் என்ற பெயரை நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் எங்கே என்று மறந்துவிட்டது என்று கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து ஈஸ்வரி மற்றும் பர்ஹானா எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் அதே இடத்தில் ஜீவானந்தமும் இருக்கிறார்.
இந்த நிலையில் அதைத்தொடர்ந்து இந்த சீரியலில் பர்ஹானா கேரக்டரில் நடிக்கும் ஜிபா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த ரீல்ஸ் வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதில் கௌதம் பர்ஹானா மற்றும் புதியதாக சேர்ந்திருக்கும் பி ஏ உடன் அமர்ந்திருக்கின்றனர்.
அதில் வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய், யோகி பாபுவிடம் கேட்கும் டயலாக்கான, சரி நான் இல்லாத நேரத்துல என்னை பத்தி இப்படித்தான் பேசுவியா? என்று கௌதம் கேட்க அதற்கு பர்ஹானா மற்றும் புது பிஏ இருவரும் கௌதமிடம் "எப்படிப்பா உன்கிட்டயே சொல்ல முடியும்" என்று யோகி பாபு வசனத்தை பேச, அதில் கோபமான கௌதம் கையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை தூக்கி எரிகிறார். இப்படியாக இவர்கள் ஜாலியாக வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த வகையில் இந்த வீடியோவில் இவர்கள் அடுத்து என்ன செய்யப் போகிறார்கள் என்று யூகிக்க முடிகிறது. அதாவது ஈஸ்வரி மற்றும் அவருடைய அப்பா கிராமத்தில் இருக்கும் சொந்த இடத்திற்கு போயிருக்கின்றனர். அங்கு பிரச்சனை செய்வதற்காக ஜீவானந்தம் தன்னுடைய அணியோடு வரப் போகிறார் என்று தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் இந்த எபிசோடு எப்போது வரும் என்று ரசிகர்கள் மத்தியில் ஆர்வமும் இருக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications