அயலியில் மாஸ் டயலாக் பேசிய எதிர்நீச்சல் ஜான்சி ராணி.. இவருக்குள் இப்படி ஒரு திறமையா?
அயலியில் துணை கதாபாத்திரத்தில் எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சி ராணியாக நடிக்கும் காயத்ரி கிருஷ்ணன் நடிப்பு பிரபலம் அடைந்திருக்கிறார்.
சென்னை: அயலி வெப் சீரிஸில் தொகுப்பாளர் காயத்ரி கிருஷ்ணன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்திருக்கிறார்.
இந்த வெப் சீரிஸில் இவர் பேசிய டயலாக் இப்போ சமூக வலைத்தளத்தில் அதிகமாக கவனம் ஈர்த்து வருகிறது.
இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சி ராணி கேரக்டராக காயத்ரி கிருஷ்ணன் நடித்து வருகிறார். தற்போது ரசிகர்கள் அவரை பாராட்டி வருகிறார்கள்.

வெற்றி கொண்டாட்டம்
கடந்த ஜனவரி 26 ஆம் தேதி ஜி5 ஒடிடி தளத்தில் வெளியான அயலி வெப் சீரிஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இதுவரைக்கும் எந்த கமர்சியல் வெப் சீரிஸ்க்கும் இந்த அளவிற்கு இதை போன்று வரவேற்பு கிடைக்கவில்லை என்று சொல்லும் வகையில் தான் இந்த வெப் சீரிஸ் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இது இதுவரைக்கும் 50 பில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது அது மட்டும் அல்லாமல் நான்கு வாரங்களாக கடந்தும் ரசிகர்களின் பிடித்த சீரியஸில் முன்னணியில் இருக்கிறது.

மாஸான டயலாக்
எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சி ராணி கேரக்டரில் கரிகாலனின் அம்மாவாக நடித்து வரும் காயத்ரி கிருஷ்ணன் அயலி வெப் சீரிஸில் மைதிலியின் அம்மாவாக நடித்திருப்பார். அதில் மாஸான ஒரு பஞ்ச் வசனம் பேசி இருக்கிறார். அது என்ன மையித்து டா ஊர் கௌரவத்தை பொம்பளைங்க கால் இடுக்குல தேடுறீங்க. தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகமாக ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.இந்த நிலையில் இந்தப் படத்திற்கான வாய்ப்பு தனக்கு அவ்வளவு எளிதாக அமைந்து விடவில்லை என்று கூறி இருக்கிறார். தான் தொகுப்பாளராக இருப்பதால் தனக்கு பெரிய அளவில் ஆடிஷன் இருக்காது என்று இதில் கலந்து கொண்டிருக்கிறார். ஆனால் இந்த வெப் சீரிஸ் இயக்குனரான முத்துக்குமார் இந்த படத்தின் அனைத்து அம்மா கேரக்டர்களிலும் பேச சொல்லி இருக்கிறார்

ஏற்கனவே தொகுப்பாளர்
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆடிஷனலில் இவர் பேசிப் பேசியே டயட் ஆகி விட்டாராம். பிறகு இறுதியாக மைதிலியின் அம்மா கேரக்டரில் இந்த மாசான வசனத்தை இவர் பேசும்போது தான் இதற்கு தான் நீங்க சரிப்பட்டு வருவீங்க என்று அவர் ஓகே சொல்லிவிட்டாராம். மேடை கிடைத்தால் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எனக்கு அயலி திரைப்படத்தில் நான் காத்துக் கொண்டேன். ஏற்கனவே தான் தொகுப்பாளராக இருந்தாலும் திரைப்படத்திற்காக நான் பேசும்போது ஒரு சில வார்த்தைகள் மிஸ்டேக் ஆக இருந்தாலும் கூட இன்னொரு டேக் போகலாம் என்று எடுத்து விடுவார். ஆனால் அதற்கு இப்போது பலன் கிடைத்திருக்கிறது என்று இவர் மகிழ்ச்சியாக கூறி இருக்கிறார்.

ஜான்சி ராணி பற்றி எதிர்பார்ப்பு
அது மட்டுமல்லாமல் தற்போது இவர் எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சி ராணியாக அறிமுகம் ஆகி இருக்கிறார். இவருடைய கேரக்டரை பார்த்த ரசிகர்கள் குணசேகரனுக்கு ஏத்த சரியான வில்லியாக ஜான்சி ராணி இருப்பாரா? என்று எதிர்பார்ப்போடு இருக்கின்றனர். ஏற்கனவே கரிகாலன் அவருடைய அப்பாவின் இரண்டாவது மனைவியின் மகன் என்பது இப்போதுதான் வீட்டிற்கு தெரிந்து இருக்கும் நிலையில், இதுவரைக்கும் கரிகாலனும் அவருடைய அப்பாவும் இந்த ரகசியத்தை வீட்டில் சொல்லாமல் இருந்த நிலையில் இனி ஜான்சி ராணியாள் வீட்டில் ஏதாவது பிரச்சனை ஏற்படுமா? அல்லது ஆதிரை கரிகாலன் திருமணத்திற்கு பிறகு குணசேகரனை, ஜான்சி ராணி பாடாய்படுத்துவாரா என்றெல்லாம் இப்போது ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications