Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எதிர்நீச்சல் ஜான்சிராணியா இது..? வேலு நாச்சியாராக மிரட்டல்.. இதனால்தான் சீரியலில் வரவில்லையா..?

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சி ராணியாக நடிக்கும் காயத்ரி கிருஷ்ணன் வேலு நாச்சியாராக வேடம் அணிந்து மாடலிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார்.

இந்த நிலையில் அது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு வெளியிட்ட காயத்ரி கிருஷ்ணன் நெகிழ்ச்சியான கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.

Ethirneechal serial Jhansi Rani has participated in a modeling show in the role of a Velunachiyar

சின்னத்திரையில் ஜான்சி ராணி ஆக பார்த்து வந்த இவர் இப்போது வேலுநாச்சியாராக மாறி இருப்பதை பார்த்து அதிகமான ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் சமீபத்தில் அறிமுகமான ஜான்சி ராணியை யாரும் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது. இந்த சீரியலில் விறுவிறுப்புக்கு காரணமாக இருக்கும் குணசேகரனுக்கு டப் கொடுக்கும் ஒரு கேரக்டராக ஜான்சி ராணி அறிமுகம் ஆகி இருக்கிறார். கரிகாலனின் அம்மாவாக அறிமுகம் ஆகி இருக்கும் ஜான்சி ராணியின் நிஜப்பெயர் காயத்ரி கிருஷ்ணன் தான்.

Ethirneechal serial Jhansi Rani has participated in a modeling show in the role of a Velunachiyar

இவர் இதற்கு முன்பு சமீபத்தில் வெளியான அயலி வெப் சீரிஸில் மைதிலியின் அம்மாவாக நடித்திருப்பார். அது மட்டுமல்லாமல் நடிகர் சிம்பு நடித்த பெரிய அளவில் வெற்றி பெற்ற வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்திலும் சிறு வேடத்தில் காயத்ரி கிருஷ்ணன் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் ஜான்சிராணியாக நடிக்கும் காயத்ரி கிருஷ்ணன் தொகுப்பாளராக பல வருடங்களாக பணிபுரிந்து வருகிறாராம்.

அது மட்டுமல்லாமல் சிறுவயதிலிருந்தே இவருக்கு படித்து டாக்டர் பட்டம் பெற வேண்டும் என்று அதிகமான ஆசை இருந்ததால்தான் இவர் திருமணத்திற்கு பிறகும் பிஹெச்டி பட்டம் பெற்று இருக்கிறார். அதுவும் பி ஹெச்டி யில் திருநங்கைகளின் வாழ்க்கைகளை குறித்து அவர் ரிசர்ச் செய்திருக்கிறார். அந்த வகையில் அதிகமான திருநங்கைகள் இவருக்கு பழக்கமாக இருக்கிறார்கள். திருநங்கைகளின் வலியையும் புரிந்து கொள்ள இந்த படிப்பால் தான் புரிந்து கொள்ள முடிகிறது என்று கூறி இருக்கிறார்.

Ethirneechal serial Jhansi Rani has participated in a modeling show in the role of a Velunachiyar

இவர் லயோலா காலேஜில் தான் படித்து இருக்கிறார். இவர் எம்.பில் படிக்கும் போது வயது கம்மியாக இருக்கிறது என்று எடுத்துக் கொள்ள மாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். அதைத்தொடர்ந்து போராடி எம்பில் சேர்ந்து எம்.பில் எடுத்த அதே கெய்ட் தான் இவரை பிஎச்டி படிப்பதற்கும் எடுத்துக் கொண்டாராம்.அந்த டைமில் ஆறு மாசம் பிஹெச்டி படித்துக் கொண்டிருக்கும் போது, தான் இவர் கர்ப்பமாக ஆகிவிட்டாராம்.

ஏற்கனவே எம்ஃபில் படித்து கொண்டிருக்கும் போது முதல் குழந்தை பிறந்ததாம். அடுத்த வருடமே இரண்டாவது குழந்தையும் இவர் கர்ப்பமாக மாறிவிட்டாராம். இவர் கர்ப்பமாக இருந்தாலும் அந்த காலகட்டத்தில் வீட்டிலிருந்து நோட்ஸ் எடுத்து படித்து விட்டாராம்.அதுமட்டுமல்லாமல் பல பட மாடலிங்கில் கலந்துகொண்டு வெற்றி பெற்று இருக்கிறாராம்.

இந்த நிலையில் அதுபோன்ற ஒரு மாடலிங் நிகழ்ச்சியில் தான் இப்போது காயத்ரி கலந்து கொண்டிருக்கிறார். அதில் பல பெண்கள் விதவிதமான பாரம்பரிய உடை அணிந்தும் பல பிரபலங்களைப் போல உடை அணிந்து கலந்து கொண்டிருந்தனர். அந்த நிகழ்ச்சியில் ஜான்சி ராணியாக நடிக்கும் காயத்ரி வேலு நாச்சியாராக மிரட்டி இருக்கிறார். இவருடைய நடை மற்றும் மிரட்டலான வசனங்களால் இவர்தான் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு இவருக்கு அவார்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Ethirneechal serial Jhansi Rani has participated in a modeling show in the role of a Velunachiyar

இந்த நிலையில் இந்த மாடலின் நிகழ்ச்சியில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை காயத்ரி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தனக்கு மேக்கப் போட்ட நபருக்கு நன்றிகளையும் கூறி இருக்கிறார். தற்போது இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதே நேரத்தில் சின்னத்திரை சொர்ணாக்கா, எங்க வேலுநாச்சியார் ஆக மிரட்டிட்டாரே என்று பலர் வியந்து கமெண்ட்களை கொட்டுகிறார்கள். அதுபோல எதிர்நீச்சல் சீரியலில் ஒரு சில நாட்களாக ஜான்சி ராணியை காணவில்லை.

அதுவும் குணசேகருக்கு இப்படி அடுத்தடுத்த பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கும் நேரத்தில் கூட ஜான்சி ராணி வரவில்லையே? என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். அதே நேரத்தில் இந்த மாடலிங் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகத்தான் ஜான்சி ராணி வரவில்லையா? என்றும் கேள்விகள் எழும்புகிறது. அது போல இவர் இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அதனால் கூட இவர் எதிர்நீச்சல் சீரியலில் அதிகமாக வரவில்லையோ என்றும் யோசனை வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+