தயவு செய்து இதை ஃபாலோ பண்ணுங்க..என்னோட அழகுக்கு ரகசியம் இதுதான் - எதிர்நீச்சல் ஈஸ்வரி டிப்ஸ்
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி தன்னுடைய அழகின் ரகசியத்தை ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கிறார்.
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி கேரக்டரில் நடிகை கனிஹா நடித்து வருகிறார்.
திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த கனிஹா முதல் முறையாக எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரின் மனைவியாக நடிக்கிறார்.
நடிகை கனிஹா தன்னுடைய முக அழகுக்கு காரணம் கற்றாழையை இப்படி பயன்படுத்துவது தான் என்று ரசிகர்களுக்கு டிப்ஸ் கொடுத்திருக்கிறார்.

ஈஸ்வரியாக கனிஹா
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அதிகமான நடிகர்கள் நடித்திருக்கின்றனர். அதுவும் வெள்ளித்திரையில் கலக்கிக் கொண்டிருந்த ஒரு சில நடிகர்கள் இந்த சீரியலின் மூலமாக முதல்முறையாக சின்னத்திரையில் அறிமுகமாகியிருக்கின்றனர். அவர்களில் ஒருவர்தான் நடிகை கனிஹா அவர் இந்த சீரியலில் ஈஸ்வரி கேரக்டரில் நடித்து வருகிறார். ஈஸ்வரி எதற்கும் எதிர்த்து பேசாமல் அமைதியாக இருந்து கொண்டு இருந்தாலும் சில நேரங்களில் வெடித்து பூகம்பமாக சிதறி விடுகிறார். குறிப்பாக சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய மகன் ஆசிரியயை தரைக்குறைவாக பேசிய பொழுது அதற்கு தக்க பதிலடி கொடுத்து ரசிகர்களுடைய பாராட்டைப் பெற்று வந்தார்.

பார்வையாலே பெர்பாமென்ஸ்
நடிகை கனிஹா போலவே அவருக்கு ஜோடியாக குணசேகரன் கேரக்டரில் நடிக்கும் மாரிமுத்துவும் முதல்முறையாக சீரியலில் அறிமுகமாகி இருக்கிறார். திரைப்படங்களில் வில்லனாகவும் குணசித்திர வேடத்திலும் நடித்து வரும் மாரிமுத்து முதல் முறையாக இந்த சீரியலில் வில்லனாக அறிமுகமாகி அனைவரையும் மிரட்டி கொண்டிருக்கிறார். அதுவும் அவருடைய மனைவியாக நடிக்கும் ஈஸ்வரியை சொல்லவே வேண்டாம். தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் தன் பார்வையாலேயே கட்டி வைக்கும் வித்தையை இவர் கையாண்டு கொண்டிருக்கும் விதத்தை பலர் பாராட்டி வந்தாலும், ஈஸ்வரி எப்ப பார்த்தாலும் தனியாகவே நின்று கொண்டிருக்கிறார். இவருக்கு மட்டும் தனியாக பிரேம் வைக்கப்படுகிறது என்று சிலர் வருத்தத்தையும் தெரிவித்து வருகிறார்கள்.

இணையத்தில் வேற மாதிரி
நடிகை கனிஹா சின்னத்திரையில் முதல்முறையாக அறிமுகம் ஆகி இருந்தாலும் வெள்ளி திரையில் பலருக்கும் பரீட்சையமானவர்தான். குறிப்பாக அஜித் போன்ற முன்னணி நடிகர்களோடு இவர் ஜோடியாக நடித்திருக்கிறார். பல திரைப்படங்களில் கதாநாயகிகளுக்கு டப்பிங் கொடுத்திருக்கிறார். சில திரைப்படப் பாடல்களையும் அழகாக பாடி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் சீரியலில் மட்டும் தான் புடவையில் வந்து பவ்யமாக இருக்கிறார். ஆனால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவருடைய மார்டன் புகைப்படங்கள் இளைஞர்களுக்கு விருந்து படைத்து வருகிறது.

கற்றாழை அழகு குறிப்பு
சமீபத்தில் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் தன்னுடைய வீட்டில் இருக்கும் துளசி செடி மற்றும் கற்றாழையில் தான் எப்படி பயன்படுத்துகிறோம் என்றும் அதனால் தன்னுடைய அழகு எப்படி பராமரிக்கப்படுகிறது என்று ரசிகர்களுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். அதை மட்டுமல்லாமல் ரசிகர்களும் இதை பயன்படுத்திக் கொள்ள அறிவுரையும் கூறி இருக்கிறார். தன்னுடைய அழகுக்கு காரணம் இந்த கற்றாழையை இப்படி பயன்படுத்துவது தான் என்று கனிஹா வெளியிட்ட வீடியோவை ரசிகர்கள் பலர் பாராட்டி வருகிறார்கள்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications