எதிர்நீச்சல் கனிஹா நீச்சல் உடையில் மாலத்தீவு கொண்டாட்டம்.. "அதற்கு” மட்டும் இத்தனை லட்சங்களா?
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் நடிகை கனிஹா ஈஸ்வரி கேரக்டரில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அவர் மாலத்தீவில் சுற்றுலாவிற்கு சென்று நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் அவர் ஒரு நாள் மாலத்தீவில் தங்குவதற்கு எவ்வளவு பணம் செலவாகும் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

திரைப்படங்களில் முன்னணிக்கதாநாயகியாக நடித்து வந்த நடிகை கனிஹா ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் இருந்து வரும் நிலையில் தற்போது சின்ன திரையில் அடி எடுத்து வைத்திருக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வருகிறார்.
மதுரையைச் சார்ந்த கனிஹா பைவ் ஸ்டார் திரைப்படத்தின் மூலமாகத்தான் சினிமாவில் அறிமுகம் ஆகி இருக்கிறார். அதற்கு பிறகு அஜித்தோடு வரலாறு திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமாகி பிறகு ஆட்டோகிராப், எதிரி போன்ற சில திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.
தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்தில் மோகன்லால், ஜெயராம், சுரேஷ்கோபி, மம்முட்டி என பல முன்னணி ஹீரோக்களோடு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு சில வருடங்களாக நடிப்பிற்கு பிரேக் விட்டிருந்த கனிஹா தற்போது மீண்டும் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி இருக்கிறார்.
சீரியலில் இவரை பார்த்ததும் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். இவரா குணசேகரனுக்கு மனைவி என்று இப்ப வரைக்கும் பலரும் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் அந்த சீரியலில் அமைதியின் சொரூபமாக நடித்து வரும் இவர் சமூக வலைத்தளத்தில் செம ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அடிக்கடி மாடர்ன் போட்டோ ஷூட் புகைப்படங்கள் எடுத்து இணையத்தை தெறிக்க விடுவது இவருடைய வழக்கமாக இருக்கிறது. அந்த மாதிரி தான் தற்போது கூட இவர் மாலத்தீவு சென்றிருக்கும் நிலையில் அங்கே தண்ணீரில் நீச்சல் உடையோடு பல வித விதமான புகைப்படங்களை எடுத்து குவித்து இருக்கிறார். அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

இந்த புகைப்படங்களை எல்லாம் பார்த்த ரசிகர்கள் எதிர்நீச்சல் குணசேகரன் இந்த போட்டோவை பார்த்தால் உங்க நிலைமை என்னாகும் என்று நினைக்கிறீர்களா? சீரியலில் உங்க புருஷனுக்கு அவ்ளோ பயப்படுறீங்க, ஆனா நிஜத்தில் அப்படி இல்லையோ? என்று கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் இவர் மாலத்தீவில் தான் Sun siyum olhuveli கடற்கரை விடுதியில் தங்கி இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த விடுதியில் ஒரு நாள் தங்குவதற்கு 18,000 முதல் 65 ஆயிரம் வரை வாடகையாக வசூலிக்கப்படுகிறது என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அப்படி என்றால் இவர் இந்த மாலத்தீவு ட்ரிப்புக்கு லட்சக்கணக்காக பணங்களை செலவழித்து இருக்கிறாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications