அடடா அழகு! நடிகை கனிகாவிடம் மகன் கேட்ட கேள்வி.. இதுதான் உண்மையான அன்பு.. பாராட்டும் ரசிகர்கள்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடிகை கனிகா ஈஸ்வரி கேரக்டரில் நடித்து வருகிறார். இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்போது லேட்டஸ்ட் ஆக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் கனிகாவின் மகன் கனிகாவிடம் அம்மா என்னை கல்யாணம் பண்ணிக்கிவீங்களா? என்று கேட்க அதைக் கேட்டு கனிகா அதிர்ச்சி அடைந்ததும் அவருடைய மகன் அதற்கு ஒரு அழகான விளக்கத்தை கொடுத்து இருக்கிறார்.
நடிகை கனிகாவிற்கு ஒரே ஒரு மகன் இருக்கும் நிலையில் அவருடைய மகன் கனிகாவின் பிரசவத்தின் போது உயிர் பிழைக்க மாட்டார் என்று மருத்துவர்கள் சொல்லி இருந்த நிலையில் பிறகு தீவிர சிகிச்சையால் உயிர் பெற்றார் என்று கனிகா பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்துவரும் நடிகைகள் தொடர்ச்சியாக சினிமாவில் நீடிப்பது கிடையாது. ஒரு சில நடிகைகள் மட்டும்தான் தொடர்ச்சியாக பல சினிமாக்களில் அடுத்தடுத்து நடித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு சில நடிகைகள் முதல் இரண்டு மூன்று திரைப்படங்களில் ஹிட் கொடுத்தாலும் பிறகு காணாமல் போய்விடுவார்கள்.
அந்த மாதிரி தான் நடிகை கனிகாவும். இவர் பைவ் ஸ்டார் திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அதைத் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் அதற்குப் பிறகு பெரிய அளவில் கனிகாவிற்கு வாய்ப்பு வராததால் பிறமொழி திரைப்படங்களில் நடித்து வந்தார் இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென்று எதிர்நீச்சல் சீரியலில் நடிகர் மாரிமுத்துவுக்கு மனைவியாக நடித்து வந்தார். மாரிமுத்துவுக்கும் கனிகாவுக்கும் வயது வித்தியாசம் அதிகமாக இருப்பதால் கனிகாவின் தீவிரமான ரசிகர்கள் என்ன இவர் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கிறார் என்று பீல் பண்ணி வந்தனர்.
ஆனால் இப்போது மாரிமுத்து இறந்த பிறகு அவர் நடித்து வந்த குணசேகரன் கேரக்டரில் நடிகர் வேலராமமூர்த்தி நடித்து வருகிறார். இருவருக்கும் அதிகமான வயது வித்தியாசம் இருந்தாலும் இருவரும் அந்த கேரக்டரில் ரசிகர்களின் மனதில் பதிந்து விட்டனர். அதிலும் கனிகா சீரியலில் மட்டும் தான் கல்லூரிக்கு செல்லும் குழந்தைகளின் அம்மாவாக இருந்தாலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மார்டன் உடையில் எப்போதும் கதாநாயகியாக தான் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் சில மாதங்களுக்கும் முன்பு கனிகா தன்னுடைய குழந்தையை குறித்து பேசிய வீடியோ பலரையும் பீல் பண்ண வைத்திருந்தது. அதாவது தான் கர்ப்பமாக இருக்கும் போது எல்லோரைப் போல நார்மல் ஆகவே இருந்தது, ஸ்கேன் எல்லாம் பார்க்கும் போது நன்றாகவே இருந்தது. ஆனால் குழந்தை பிறக்கும் நேரத்தில் குழந்தைக்கு இதயத்தில் சிறு பிரச்சனை இருக்கிறது என்று சொல்லிவிட்டார்கள்.

அதே நேரத்தில் குழந்தைக்கு என்ன வேணும்னாலும் நடக்கலாம் என்று டாக்டர்கள் சொல்லி பிறந்த குழந்தையை என்னிடம் காட்டாமல் குழந்தைக்கு இதயத்தில் ஆபரேஷன் செய்தனர். பிறகு நல்ல வேளையாக என்னுடைய குழந்தை உயிர் பிழைத்து விட்டான். ஆனால் நான் அந்த நேரத்தில் பட்ட வலியும் வேதனையும் சொல்ல முடியாதது என்று வேதனையை கனிகா பகிர்ந்து இருந்த நிலையில் பலரும் கனிகாவிற்கு பீல் பண்ணி ஆதரவு ஆறுதல் கூறி வந்தனர்.
இப்படியான நிலையில் இப்போது கனிகா தன்னுடைய மகனோடு எடுத்த க்யூட்டான வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதில் கனிகாவின் மகன் அவரிடம் அம்மா என்னை கல்யாணம் பண்ணிக்குவீங்களா என்று கேட்க அதற்கு கனிகா நான் உன்னை கல்யாணம் பண்ணனுமா? எதற்காக என்று கேட்க, நான் உங்களை லவ் பண்ணுகிறேன் என்று குழந்தை சொல்ல, அதற்கு கனிகா லவ் என்றால் என்னவென்று கேட்க நான் உங்கள் மீது வைத்திருப்பது தான் என்று அந்த குட்டி குழந்தையும் அழகாக பதில் சொல்ல இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கனிகா அடிக்கடி தன்னுடைய போட்டோ சூட் புகைப்படங்கள் வெளியிட்டு வரும் நிலையில் எப்பவாவது தான் தன்னுடைய குடும்ப புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் பல நாட்களுக்கு பிறகு தன்னுடைய மகனின் கியூட்டான வீடியோவை பகிர்ந்து எல்லா குழந்தைகளின் முதல் காதல் அவங்களுடைய அம்மா தான் என்று தனியாக போட்டிருக்கும் போஸ்ட் அதிகமான லைக்குகளை பெற்று வருகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications