தெருவில் வைத்து ஞானத்தை பார்த்து கரிகாலன் கேட்ட கேள்வி.. ஈஸ்வரி சொன்ன பதில்.. பாராட்டும் ஜனனி
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தம் பட்டமாள் சொத்தை தன்னுடைய பெயருக்கு மாற்றி இருக்கும் நிலையில் அந்த சொத்தை மீட்டுக் கொண்டு வருவேன் என்று ஜனனி குணசேகரன் இடம் கூறி இருக்கிறார்.
அதே நேரத்தில் ஜனனி ஒரு பக்கம் ஜீவானந்தம் பற்றி விசாரிக்க தொடங்கி இருக்கும் நிலையில் குணசேகரன் ஜீவானந்தத்தை பழிவாங்குவதற்காக சென்னையில் இருக்கும் ஒரு நபரை பார்க்க போவதாக கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் சக்தி, கரிகாலன், ஞானம் மூவரும் ரோட்டில் வைத்து வீடியோ ஒன்றை எடுத்து இருக்கின்றனர். அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றனர். அது தற்போது அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் யூகிக்க முடியாத பல அதிரடியான திருப்பங்கள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கிறது. இந்த சீரியலில் கதையின் இருக்கும் வேகத்தில் காரணமாகவே அதிகமான ரசிகர்கள் இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.

அதனாலேயே இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்து இருக்கின்றனர். சீரியலில் அடித்துக் கொண்டும், சண்டையிட்டுக் கொண்டும் இருக்கும் நடிகர்கள் சூட்டிங் முடிந்ததும் ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்யும் ரகளைகள் பலருக்கும் வியப்பை கொடுத்திருக்கிறது. எதிர்நீச்சல் சீரியல் நடிகர்களுக்கு ரசிகர்களின் மத்தியில் இருக்கும் வரவேற்பு காரணமாகவே அவர்கள் வெளியிடும் ரீல்ஸ் வீடியோவும் அதிக அளவில் பிரபலமடைந்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில் தற்போது கரிகாலன், ஞானம், சக்தி மூவரும் ரோட்டில் நின்றபடி "கலகலப்பு" திரைப்படத்தில் இடம் பெற்ற அமிதாப் மாமா காமெடியை வைத்து ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு இருக்கின்றனர். இதை பார்த்து அதிகமான ரசிகர்கள் வீட்டில் இருக்கிற பிரச்சனைக்கு உங்களுக்கு இதெல்லாம் தேவைதானா? என்று கேள்வி எழுப்புகிறார்கள். இன்னும் சிலர் இதை பார்த்ததும் ஞானம் இப்படி எல்லாம் சிரிக்க கூடியவரா என்றும் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

சீரியலில் ஞானம் எப்போதும் உம் என்று இருப்பார். அல்லது வீட்டில் இருக்கும் பெண்களிடம் மட்டும் மீசையை முறுக்கிக் கொண்டு சண்டைக்குப் போவார். ஆனால் இப்போது காமெடியாக அவர் செய்த செயலை பார்த்து ரசிகர்கள் அவரா இவர் என்று கேள்வி கேட்கின்றனர். இன்னும் ஒரு சில ரசிகர்கள் கரிகாலன் உடைய நடிப்பை பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் இன்னொரு வீடியோவை கரிகாலன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதில் நடிகர் விவேக் உடைய காமெடி இடம்பெற்று பெற்றிருக்கிறது. அதிலும் ஞானம் மற்றும் கரிகாலன் இருவரும் காமெடியாக நடித்திருக்கின்றனர்.
அந்த வீடியோவை பார்த்ததும் அதற்கு சிரிப்பது போன்று ஈஸ்வரியாக நடிக்கும் கனிஹா கமெண்ட் கொடுத்து இருக்கிறார். அதற்கு நன்றி கூறி கரிகாலன் பதில் கொடுத்து இருக்கிறார். அதேபோல அதே வீடியோவிற்கு ஜனனியும் சூப்பர் கரிகாலன் என்று கூறியிருக்கிறார். இப்படியாக இந்த வீடியோஸ் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications