ஹாஸ்பிடலில் பரிதாப நிலையில் குணசேகரன்.. மனம் மாறி நந்தினியிடம் பேசும் கதிர்.. திடீர் டுவிஸ்ட்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனுக்கு நெஞ்சு வலி வந்து விட்டதால் மருத்துவமனையில் சேர்த்து இருக்கின்றனர்.
குணசேகரனுக்கு வலது பக்கம் கை மற்றும் கால் செயலிழந்து விட்டது. அதனால் அனைவரும் மருத்துவமனையில் அதிர்ச்சியோடு காத்திருக்கின்றனர்.
ஆனால் கதிர் மற்றும் நந்தினி இருவரும் நடந்தபடி ரொமான்ஸாக பாட்டு பாடி வலம் வரும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் எதிர்பாராத பல திருப்பங்கள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கிறது. ஏற்கனவே ஆதிரை மற்றும் கரிகாலன் திருமணம் எதிர்பார்க்காத வகையில் நடந்து முடிந்தது. அதை தொடர்ந்து பட்டமாள் சொத்து 40% ஜீவானந்தம் தன்னுடைய பெயருக்கு மாற்றியிருந்தார்.
சொத்து தன்னுடைய பெயருக்கு வந்ததும் ஜீவானந்தம் குணசேகரனின் கம்பெனியில் இருந்து கொண்டு, இனி குணசேகரனுக்கும் இந்த கம்பெனிக்கும் எந்த சொந்தமும் இல்லை என்று பிரச்சனை செய்து இருந்தார். இதை பார்த்து அதிர்ச்சியான குணசேகரன் அங்கே பிரச்சனை செய்ய, துப்பாக்கியை காட்டி மிரட்டி குணசேகரனை குண்டு கட்டாக தூக்கி வெளியே போட்டிருந்தனர்.

இந்த நிலையில் தன்னிடமிருந்து ஜீவானந்தம் பிடுங்கிய சொத்துகளை மீண்டும் தன் வீட்டு மருமகள்களை வைத்து அந்த சொத்துக்களை வாங்க போகிறேன் என்று குணசேகரன் கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து வீட்டிற்கு போனதும் ஜனனி இடம் மனம் மாறி பேசுவது போன்று பேசி இருந்தார். அடுத்ததாக இரவு தூங்கும் போது ஜீவானந்தம் துப்பாக்கியோடு வருவது போன்ற கத்தி ஆர்ப்பாட்டம் செய்திருந்தார்.
அதைத்தொடர்ந்து அடுத்த நாளே ஆடிட்டர் இந்த வீட்டிலும் ஜீவானந்தத்திற்கு ஷேர் இருக்கிறது என்று சொல்ல, அதைக் கேட்டு அதிர்ச்சியான குணசேகரன் நெஞ்சு வலியில் துடிக்க பிறகு மருத்துவமனையில் சேர்த்ததும் இப்போது ஒரு கையும் ஒரு காலும் செயல் இழந்து விட்டது என்று டாக்டர்கள் கூறியிருக்கின்றனர். இந்த அளவிற்கு சீரியல் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

அதே நேரத்தில் சீரியலில் ரகடுபாயாக எப்போதும் மீசையை முறுக்கி கொண்டு திமிராக சுற்றிக் கொண்டிருக்கும் கதிர் சூட்டிங் ஸ்பாட்டில் நந்தினியோடு எடுத்த வீடியோ இப்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த கதிருக்குள் இப்படி ஒரு ரொமான்ஸ் இருக்கிறதா? அதுவும் இதுவரைக்கும் வெளியே தான் எந்த பொண்ணு பேசினாலும் வழிஞ்சுகிட்டு இருப்பார். இப்பதான் முதல்முறையா நந்தினி கிட்ட வழிகிறார் என்று கூறி வருகிறார்கள். தற்போது இந்த ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications