எதிர்நீச்சல் சீரியல் முடிவு குறித்து “கதிர்” வெளியிட்ட வீடியோ.. கிளைமேக்ஸில் இதுதான் காட்சியா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ஜூலை 8ஆம் தேதியோடு முடிவடையை இருக்கிறது என்ற செய்திகள் இணையத்தில் பரவி வரும் நிலையில் இந்த சீரியலில் கதிர் கேரக்டரில் நடிக்கும் நடிகர் விபு இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்
அந்த வகையில் சன் டிவியில் பெரிய அளவில் எதிர்பார்ப்போடு கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட்ட எதிர்நீச்சல் சீரியலுக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். ஆரம்பத்திலேயே இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்குகிறார் என்ற செய்திகள் பரவி வந்த நிலையில் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

அதுபோலவே சீரியலும் தொடங்கிய சில மாதங்களிலேயே அதிகமான ரசிகர்களை கவர தொடங்கி விட்டது. பொதுவாக வில்லன் என்றால் எல்லோரும் திட்டுவார்கள். ஆனால் இந்த சீரியலில் தான் வில்லன் குணசேகரனுக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் குணசேகரன் ஆக மாரிமுத்து நடித்து வந்த நிலையில் அவர் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலம் அடைந்து விட்டார்.
அதற்கு முன்பு எத்தனையோ திரைப்படங்களில் மாரிமுத்து நடித்திருந்தாலும் அதில் எல்லாம் கிடைக்காத பெயரும் புகழும் எதிர்நீச்சல் சீரியல் மூலமாக அவருக்கு கிடைத்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் மாரிமுத்துவின் இறப்பு நடந்து விட்டது. அதற்கு பிறகு சீரியலிலும் பெரிய மாற்றம் நடந்தது.
ஆதி குணசேகரனாக வேலராமமூர்த்தி அறிமுகமானார். ஆனால் அதுவரைக்கும் ஆதி குணசேகரன் இருந்த கேரக்டர், வேலராம மூர்த்திக்கு வித்தியாசமாக இருந்தது. அதனாலேயே ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியல் பற்றிய அதிருப்தி ஏற்பட தொடங்கியது. அதிலும் தர்ஷினியின் கடத்தல் டிராக் இரண்டு மாதத்திற்கு மேலாக இழுத்துக் கொண்டு இருந்தது.. அதுபோல அப்பத்தாவின் திடீர் மரணம் போன்ற பல டிராக்குகள் பல மாதங்களாகவே இழுத்துக்கொண்டு இருந்தது. இது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இந்த சீரியல் வரும் ஜூலை எட்டாம் தேதியோடு முடிவுக்கு வரும் என்று தகவல்கள் பரவி வருகிறது. இது குறித்து இந்த சீரியலில் கதிர் கேரக்டரில் நடித்து வரும் நடிகர் விபு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் கிளைமாக்ஸ் காட்சி இதுதான் என்று தன்னுடைய ஆக்சன் பண்ண வீடியோவாக பகிர்ந்து இருக்கிறார்.
ஏற்கனவே ஆரம்பத்தில் வில்லனாக இருந்த கதிர் சில மாதங்களுக்கு முன்புதான் திருந்தி இருந்தார். இந்த நிலையில் இவர் ஆக்ரோஷமாக கிளைமேக்ஸ் காட்சியில் பேசுவது போன்று இருக்கும் காட்சிகளை பகிர்ந்திருக்கிறார். இந்த காட்சிகளை பார்க்கும்போது இவர் தன்னுடைய அண்ணன் குணசேகரனுக்கு எதிராக இப்படி பேசப்போகிறாரா? அல்லது கிளைமேக்ஸ் இவர் மீண்டும் பழையபடி வில்லனாக மாறப் போகிறாரா? என்று எதிர்பார்ப்புகள் இருக்கிறது.
ஏற்கனவே இந்த சீரியல் முடிவடைந்ததும் இரண்டாவது பாகம் தொடங்கப்படும் என்றும் ஒரு செய்தி பரவி வருகிறது. அது வதந்தியா அல்லது உண்மையா? என்பதை இதுவரைக்கும் எந்த நடிகர்களும் உறுதி செய்யவில்லை. ஆனால் இந்த சீரியல் முடிவடைய போகிறது என்பதை மட்டும் விசாலாட்சியாக நடிக்கும் நடிகை சத்ய பிரியா, ஆதிரை கேரக்டரில் நடிக்கும் சத்யா தேவராஜன் போன்ற பலரும் சீரியல் முடிவடைய போகிறது என்பதை உறுதி செய்து வருகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications